Breaking

Showing posts with label Homeopathy. Show all posts
Showing posts with label Homeopathy. Show all posts

Wednesday, October 18, 2023

October 18, 2023

சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புக்கு அக்.26-ல் கலந்தாய்வு தொடக்கம்: தரவரிசை பட்டியலில் சேலம் மாணவி முதலிடம்



Counseling for Siddha, Ayurveda, Homeopathy begins on Oct. 26: Salem student tops rank list - சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புக்கு அக்.26-ல் கலந்தாய்வு தொடக்கம்: தரவரிசை பட்டியலில் சேலம் மாணவி முதலிடம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், சேலம் மாணவி முதலிடம் பிடித்துள்ளார். வரும் 26-ம் தேதி சென்னையில் கலந்தாய்வு தொடங்குகிறது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,689 பேரும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 1,040 பேரும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 942 பேரும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு 596 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனித்தனியாக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், தேர்வுக்குழுத் தலைவர் மருத்துவர் பா.மலர்விழி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதில், 2,530 பேர் இடம்பெற்றுஉள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.வி.வைசாலி (நீட் மதிப்பெண் - 720-க்கு 602) முதலிடம் பிடித்துள்ளார். 968 பேர் இடம்பெற்றுள்ள நிர்வாக ஒதுக்கீடு மற்றும் 942 பேர் இடம்பெற்றுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் சென்னையைச் சேர்ந்த மாணவர் எம்.ஹரிஹரன் (நீட் மதிப்பெண் 506) முதலிடம் பெற்றுள்ளார். 556 பேர் இடம்பெற்றுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பட்டியலில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜி.திருமலை (நீட் மதிப்பெண் 363) பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 92 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 26-ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு பிரிவினருக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து, 27 முதல் 29-ம் தேதி வரை அரசு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும், 31-ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Friday, February 03, 2023

February 03, 2023

இந்திய மருத்துவப் படிப்புகள்: பிப்.11-இல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு

இந்திய மருத்துவப் படிப்புகள்: பிப்.11-இல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்று 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியது. அதில், அரசுக் கல்லூரிகளில் 24 சித்தா இடங்கள், 3 ஆயுா்வேத இடங்கள், 7 ஹோமியோபதி இடங்கள், 27 யுனானி இடங்கள் நிரம்பவில்லை. அதேபோன்று, தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 54 ஆயுா்வேத இடங்கள், 24 சித்தா இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மொத்தமுள்ள 521 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 503 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தமாக 1,041 இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களும், முதல் சுற்றில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்களைப் பெற்று அதனை மாற்ற விரும்புபவா்களும் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதள பக்கத்தை அணுகலாம்.

Wednesday, September 21, 2022

September 21, 2022

admission in Siddha, Ayurveda, Homeopathy, Unani - சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - You can apply for admission in Siddha, Ayurveda, Homeopathy, Unani

சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, படிப்பில் சேர இன்று முதல் அக் .12 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர். www.tnhealth.tn.gov.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். முதுகலையில் எம்டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுஷ் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு , நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு செப்டம்பர் 21 ந் தேதி முதல் அக்டோபர் 12 ந் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புகளில் சேர 12 ம் வகுப்பில் முதல்முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் 280 இடங்களும், சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 1164 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. மேலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.அதிலும் , பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி, இயற்கை மருத்துவம், யோகா ஆகிய படிப்புகளுக்கு 12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் இதற்கான விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.செப்டம்பர் 21 ந் தேதி முதல் www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog