Breaking

Showing posts with label Southern Railway Jobs. Show all posts
Showing posts with label Southern Railway Jobs. Show all posts

Saturday, October 07, 2023

October 07, 2023

ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய 5 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கம் - SOUTHERN RAILWAY

World Cup Cricket Series - Oct. 8, 13, 18, 23, 27 5 days special train operation between Chindathiripet - Velachery - SOUTHERN RAILWAY - உலக கோப்பை கிரிக்கெட் தொடர் - அக். 8,13,18,23,27 ஆகிய 5 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

SOUTHERN RAILWAY


मंडल/ CHENNAI DIVISION

No. PUB/MAS/2023/10/08

Date: 07.10.2023

प्रेसविज्ञति / PRESS RELEASE

ADDITIONAL PASSENGER SPECIAL TRAIN SERVICE FOR ICC - MEN's CRICKET WORLD CUP 2023

In view of ICC Men's Cricket World Cup 2023 League matches are to be played at M.A. Chidambaram Stadium at Chepauk, the following Passenger Specials will run between Velachery and Chintadripet detailed below:

Velachery - Chintadripet - Velachery passenger special train will run on 08th, 13th, 18th, 23rd & 27th October 2023 for (5 days). இதையும் படிக்க | ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய நாட்களில் போக்குவரத்து மாற்றம்

Detailed Timings:

1. Passenger Special - Velachery - Chintadripet - Velachery

Monday, August 21, 2023

August 21, 2023

தெற்கு ரயில்வேயில் 15,240 பணியிடங்கள் காலி!

தெற்கு ரயில்வேயில் 15,240 பணியிடங்கள் காலி

தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் உள்ள, 15,240 காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், கூடுதல் பணி சுமையால் அவதிப்படுவதாக, ரயில்வே பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூலை நிலவரப்படி, இந்திய ரயில்வேயில், 2,61,233 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

அதிகபட்சமாக, வடக்கு ரயில்வே - 32,468, கிழக்கு ரயில்வே - 29,869, மேற்கு ரயில்வே - 25,597, மத்திய ரயில்வே - 25,281 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, தெற்கு ரயில்வேயில் மொத்தம் உள்ள 97,000 பணியிடங்களில், 15,240 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கூடுதல் சுமைரயில் ஓட்டுனர், நிலைய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள், கிளார்க், பாயின்ட் மேன், மெக்கானிக் என பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன.இதுகுறித்து, ரயில்வே பணியாளர்கள் சிலர் கூறியதாவது:

எங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது.

விடுப்பு இன்றி பணியாற்றுவதால், உடல் சோர்வு ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்படுகிறது. முன்பெல்லாம் எங்களுக்கு வார விடுமுறையும், மற்ற விடுமுறையும் தடையின்றி கிடைக்கும். இப்போது விடுப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. கூடுதல் பணி பளுவால், கவனக்குறைவும் ஏற்படுகிறது. இதனால், ரயில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்புவதில் இனியும் அலட்சியம் காட்டாமல், ரயில்வே உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.நடவடிக்கைரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:

காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. ரயில் ஓட்டுனர், நிலைய மேலாளர் உள்ளிட்ட சில பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எஞ்சியுள்ள பணியிடங்களை படிப்படியாக நிரப்ப, ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, February 24, 2023

February 24, 2023

தெற்கு ரயில்வே - சென்னை கோட்டம் - வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பபிக்க 14.03.2023

தெற்கு ரயில்வே - சென்னை கோட்டம்

முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர், தெற்கு ரயில்வே, சென்னைகோட்டம், சென்னை - 600003 அவர்கள், மேதகு இந்தியக்குடியரசுத் தலைவரின் சார்பிலும் அவருக்காகவும் வ. உ. சி. நகர் (VOC), நந்தியம்பாக்கம் (NPKM), புட்லூர் (PTLR), செஞ்சிபனம்பாக்கம் (SPAM), பரனூர் (PWU) மற்றும் | அன்வர்த்திகான்பேட்டை (AVN) ரயில் நிலையத்தில் நிறுத்த முகவர் (ஹால்ட் ஏஜன்ட்) நியமனம் செய்வதற்காக, விண்ணப்பங்களை வரவேற்கிறார்.

வ. எண். 1 முதல் 6 வரை உள்ளவற்றுக்கு: காலம்: 5 ஆண்டுகள்.

பிணை வைப்புத் தொகை: இல்லை.

விண்ணப்ப படிவக் கட்டணம்: இல்லை.

விண்ணப்ப படிவத்தை வாங்கிக் கொள்ள வேண்டிய அலுவலகத்தின் முகவரி: கோட்ட ரயில்வே மேலாளர் / வர்த்தகம், என்ஜிஓ இணைப்பு கட்டிடம், 2வது மாடி, பூங்கா நகர், தெற்கு ரயில்வே, சென்னை - 600 003.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேதியும் நேரமும் 14.03.2023 (செவ்வாய்கிழமை) அன்று 10.00 மணி முதல் 14.00 மணி வரை

விண்ணப்ப படிவம் திறக்கப்படுதல்: 14.03.2023 (செவ்வாய்கிழமை) அன்று 14.30 .

விரிவான தகவல்கள் காணக்கூடிய இணையதள www.sr.indianrailways.gov.in

முகவரி:

விண்ணப்பங்கள் பெறப்படும் தேதியும் விண்ணப்பம் திறக்கப்படும் தேதியும் பின்னர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டால் அவை அதற்கடுத்த வேலை நாளில் நடைபெறும்.

Total Pageviews

Search This Blog