Breaking

Showing posts with label Madurai Branch of the High Court. Show all posts
Showing posts with label Madurai Branch of the High Court. Show all posts

Tuesday, December 27, 2022

December 27, 2022

உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றிதழ்களை வழங்க உத்தரவிட கோரி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளார் என நீதிபதி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதனால் உயர்கல்வி பயில்வதற்காக உடனடியாக இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றுகளை வழங்கவேண்டும் என உயநீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை. மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவக்கல்வி பயில்வதற்கு தங்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் இன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்ட படிப்புக்கு சேரும் பொழுது அரசுக்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவையில் பணியாற்றவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இதை தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.

ஆனால் தங்கள் ஏற்கனவே கொரோனா காலத்தில் பணியாற்றியுள்ளனர். எனவே மேலும் பணியாற்ற அவசியம் இல்லை. எனவே தங்களது மருத்துவக்கல்வி சான்றிதழ்களை தங்களிடம் வழங்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டானர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் மருத்துவக்கல்வி சான்றிதழ்களை உடனடியாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.

Tuesday, August 16, 2022

August 16, 2022

கருணை அடிப்படையிலான பணி - உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது - உயர்நீதிமன்றம்

கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கூறியுள்ளது. கருணை அடிப்படையில் பணி என்பது உயிரிழந்தவர் குடும்பத்தின் உடனடி பொருளாதார தீர்வுக்காத்தான். அரசு பணியில் இருந்தபோது தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் பணிக்கோரி மகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Thursday, August 11, 2022

August 11, 2022

கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை

கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக மாணவர்களின் சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கல்வி உதவி தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரில் சங்கீதா என்ற மாணவி படித்து வந்துள்ளார். அவர் சூழ்நிலையின் காரணமாக கல்லூரில் இடைநிற்றல் ஆகி வெளியேறினார். இந்நிலையில் கல்லூரி சேர்க்கையின் போது கொடுத்த மாற்றுச்சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை திரும்ப கேட்ட போது கல்லூரி நிர்வாகம் அதனை தர மறுத்துள்ளது.

இதனை தொடர்ந்து தனது சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாணவி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கானது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவி தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் சேர்ந்து அதற்கான கல்வி உதவி தொகையை பெற்றுள்ளார். இடைநிற்றலால் பெறப்பட்ட உதவி தொகையை அவர் திரும்ப கல்லூரிக்கு கொடுக்க வேண்டும். அதை தவறியதற்காக அவரது சான்றிதழ்களை கொடுக்கவில்லை என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாணவி கல்வி உதவி தொகை பெற்றபின்பு இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட உதவித்தொகையை திரும்பப்பெறவேண்டும் என்றால், மாணவிக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அதனை விடுத்து அவரது மதிப்பெண் பட்டியல், சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்கதக்கது அல்ல. கல்வி சான்றிதழ்கள் விற்பனைக்கு அல்ல, எனவே மாணவிக்கான சான்றிதழ்களை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

கல்வி சான்றிதழ்கள் ஒருபோதும் விற்பனை பொருட்கள் ஆகாது: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

கல்வி சான்றிதழ்கள் ஒருபோதும் விற்பனை பொருட்கள் ஆகாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதோடு அவற்றை இந்திய ஒப்பந்த விதிப்படி அடமான பொருட்களாகவும் கொள்ள இயலாது என நீதிபதி தெரிவித்தார். சுவாதிகா உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் போது வழங்கிய, சான்றிதழ்களை வழங்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Monday, March 07, 2022

March 07, 2022

அரசுப் பள்ளி கட்டடங்கள் நெருக்கடியாக இருந்தால் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

: அரசுப் பள்ளி கட்டடங்கள் நெருக்கடியாக இருந்தால் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர வாய்ப்பு

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, அரசுப்பள்ளிகளில் மட்டும் நிலைப்பாட்டை மாற்றுவது ஏன்? எனவும், நாகர்கோவில் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Total Pageviews

Search This Blog