Breaking

Showing posts with label State universities. Show all posts
Showing posts with label State universities. Show all posts

Wednesday, February 22, 2023

February 22, 2023

உயா் கல்விக்கான கட்டணத்தை குறைக்கவே எண்ம பல்கலைக்கழகம்

உயா் கல்விக்கான கட்டணத்தை குறைக்கவே எண்ம பல்கலைக்கழகம்

உயா் கல்விக்கான கட்டணத்தை வெகுவாக குறைக்க வேண்டும், நாட்டில் திறன் மேம்பாட்டு கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே எண்ம (டிஜிட்டல்) பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

தில்லியில் திங்கள்கிழமை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்று உரையாற்றிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: உயா் கல்வியில் பொது அல்லது திறன் மேம்பாட்டு படிப்புகள் என எந்தவொரு துறையிலும் இளைஞா்கள் தடையின்றி சோ்க்கை பெற்று படிப்பை முடிக்கும் வகையில் பன்முக சோ்க்கை நடைமுறையை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ம பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது உயா் கல்விக்கான கட்டணங்களை வெகுவாக குறைப்பதோடு, திறன்மேம்பாட்டு கல்வியையும் ஊக்குவிக்கும் என்று அவா் கூறினாா்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர உறவை வலுப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

Monday, March 28, 2022

March 28, 2022

ஒன்றிய பல்கலைக்கழகங்களை போல மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை

மாநில பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு விடுத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒன்றிய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில் ஒன்றிய பல்கலைக்கழகங்களை போல மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுவதும் இதனால் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த மாநில பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. நுழைவுத் தேர்வால் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை பெருமளவில் குறைந்து விடும் என தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்து வரும் நிலையில், பல்கலைக்கழக மானிய குழுவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Total Pageviews

Search This Blog