Friday, December 13, 2024
Thursday, April 25, 2024
Thursday, March 21, 2024
Tuesday, January 16, 2024
TNPSC குருப்-2 நேர்முக தேர்வு சான்றிதழ்களை 27-க்குள் பதிவேற்ற வேண்டும்
குருப்-2 நேர்முக தேர்வு சான்றிதழ்களை 27-க்குள் பதிவேற்ற வேண்டும்
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குருப்-2 தேர்வில் (நேர்முகத்தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் குறைபாடாகபதிவேற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், அவர்கள் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜனவரி 27-ம்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இத்தககவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தேவையான சான்றிதழ்களை ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
Monday, December 25, 2023
குரூப்-2 காலி பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிப்பு
Wednesday, November 22, 2023
குரூப் 2 தேர்வு முடிவுகள்: TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு!
குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த பிப். 25-ஆம் தேதி நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதியுள்ளனா்.
குரூப் 2 தோ்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளைத் தொடங்க சிறிது தாமதமானதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை - TNPSC Results Declaration Schedule (As on 21st November 2023) - PDF
நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.
Thursday, November 09, 2023
TNPSC : குரூப் - 2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு!
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தாள் தேர்வு, பிப்., 25ல் நடந்தது. இத்தேர்வை, 51,000த்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இது, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் நடத்தும், முதன்மை எழுத்து தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கையை விட, மும்மடங்கு அதிகம்.தேர்வு முடிவுகளை வெளியிட, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு, ஐந்து மாதங்கள். எனவே, மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு, நம் மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன், எந்த வகையிலும் குறைவானது இல்லை.இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதம், தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. மேலும் சில எழுத்து தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்தது. எனவே, பணிகள் துவங்க சற்றே தாமதமானது.
இதுபோன்ற தாமதம் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது.
தற்போது, மதிப்பீட்டு பணிகள் மிக விரைவாக நடந்து வருகின்றன; 80 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள், டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள், முதல்வரால் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, June 28, 2023
Wednesday, April 19, 2023
TNPSC Group 2 Prelims Result 2023 - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? - TNPSC தகவல்
குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி தகவல் - When will the Group 1 and Group 2 exam results be released? - TNPSC Information
குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்; குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



