Saturday, January 31, 2026
Wednesday, December 24, 2025
Thursday, December 18, 2025
Thursday, October 16, 2025
Monday, February 24, 2025
Thursday, January 30, 2025
Wednesday, November 01, 2023
EMIS பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
EMIS will not carry out uploading from today: Federation of Teachers Notice - EMIS பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
எமிஸ் வலைதள பணிகளை இன்று (நவ.1) முதல் மேற்கொள்ள மாட்டோம் என்று டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது.
எமிஸ் வலைதள பணிகளில் இருந்து விடுவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்,) கடந்த அக்.13-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 30-ல் 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையேற்று டிட்டோ ஜாக் நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
அமைச்சருடன் பேச்சுவார்த்தை:
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதியின்படி எந்த அறிவிப்பையும் தொடக்கக்கல்வித் துறை வெளியிடவில்லை. இதுகுறித்து டிட்டோ ஜாக் அமைப்பின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட 12 கோரிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வித்துறை இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோரிக்கைகளை கல்வித்துறை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதேபோல, ஆசிரியர்கள் நவ.1 முதல் (இன்று) எமிஸ் பதிவு பணிகளை மேற்கொள்ள தேவையில்லை என்று பேச்சுவார்த்தையில் அமைச்சர் உறுதி அளித்தார்.அதன்படி, வருகைப்பதிவு தவிர மற்ற எமிஸ் பணிகளில் இருந்து இன்றுமுதல் ஆசிரியர்கள் தங்களை விடுவித்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுப் பள்ளிகளின் முக்கிய செயல்பாடுகள் எமிஸ் தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் விளக்கம்:
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்கூறும்போது, 'ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எமிஸ் வலைதள பணிகளை மேற்கொள்ள 9 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இது செயல்பாட்டுக்கு வந்த பின் வருகைப் பதிவை மட்டும் ஆசிரியர்கள் பதிவேற்றினால்போதும்' என்றனர்.
Monday, June 19, 2023
Saturday, March 25, 2023
Thursday, February 16, 2023
ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) “வாழ்வாதார உரிமை மீட்பு” மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு - திருச்சிராப்பள்ளி மாவட்டம்
1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.
2021 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று முறை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியானது ஆறு மாதம் காலம் கடந்து வழங்கப்பட்டது.
ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அறிவிக்கும் அதே தேதியில் நிலுவைத் தொகையுடன் வழங்கிட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் , அரசுப் பணியாளர்கள் , கண்காணிப்பாளர்கள் , தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , களப் பணியாளர்கள் , பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் , ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லுாரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ( CAS ) உடனடியாக வழங்கிட வேண்டும் . மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும் . சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊராட்சி செயலாளர்கள் , ஊர்ப்புற நுாலகர்கள் , கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் , தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள் , சிறப்பு ஆசிரியர்கள் , செவிலியர்கள் , பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் - பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும் . உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக வேண்டும் . அனைத்து பள்ளிகளிலும் , கல்லுாரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்திட வேண்டும். 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி , கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு , இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே , இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு - கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையின் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும்.
Monday, January 02, 2023
ஓய்வு பெற்றோரை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ தீர்மானம்
ஓய்வு பெற்ற ஒருங்கிணைப்பாளர்களை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்' என, மதுரையில் நடந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாபு பிரேம்குமார், நீதிராஜா, பொற்செல்வன் தலைமை வகித்தனர். கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில, மாவட்ட அமைப்புகளில் ஓய்வு பெற்றோர் பொறுப்பில் உள்ளனர். அவர்களை விடுவித்து அவர்களுக்கு மாற்றாக தற்போது பணியில் உள்ள ஆசிரியர், அரசு ஊழியர்களை ஒருங்கிணைப்பாளர்களாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவிக்க வேண்டும்.
அதுபோல் உயர்மட்ட குழுவில் பொறுப்பில் உள்ள ஓய்வு பெற்றோரையும் விடுவித்து பணியில் உள்ளோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜன.5 ல் நடத்த வேண்டிய ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஆயத்த கூட்டம் நடந்தது. பல்வேறு சங்க நிர்வாகிகள் சந்திரன், மூர்த்தி, முத்துக்குமார், பிரபாகரன், தமிழ்செல்வம், தமிழ்செல்வி பங்கேற்றனர்.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் நிறைவுரையாற்றினார். நிதி காப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
Monday, October 31, 2022
Saturday, September 10, 2022
திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இருந்தால்போதும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
1) பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணிபுரிய வாய்ப்பு
2) அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்
3)101,& 108 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.. ( G.O-151 - நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்
4)அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கையெழுத்திட்டு வந்துள்ளேன். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு
5) நிதி நிலை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் நீங்கள் தனி தீவு கிடையாது : நானும் உங்களில் ஒருவன்
ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன் - முதல்வர் ஸ்டாலின் ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் கூறியதாவது ; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியர். அரசும் அரசியலும் இரண்டற கலந்தது, இதை யாராலும் பிரிக்க முடியாது. அந்த உணர்வோடு நான் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நினைத்தாலும், அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசாமல் வேறு எங்கே பேசுவது என்பது எனது எண்ணமாக அமைந்திருக்கிறது.
திமுக ஆட்சியை பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமே காரணம் என்ற நன்றி உணர்ச்சியோடு உங்கள் முன்னாள் நான் நின்று கொண்டிருக்கிறேன். நமது ஆதரவு முதலமைச்சருக்கு எப்போது உண்டு என்பதை உறுதி செய்வோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டு விட்டு மாநாட்டிற்கு வந்துள்ளேன். 10 வருடங்கள் நீங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக சரி செய்வ
ோம். அனைத்து வகையான தற்காலிக ஆசிரியர்களும், பிற தற்காலிக பணியாளர்களும் 60 வயது வரை பணி புரிய அனுமதிக்கப் படுவர். அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஒளிவுமறைவு இன்றி அக்டோபர் 15 முதல் நடத்தப்படும். உங்கள் நம்பிக்கை நிச்சயம் போகாது. கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். உங்களுக்கு எப்போதும் பக்க பலமாக இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு - ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, மற்ற மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தேன்.
போராட்டக் காலத்தை பணிக்காலமாக வரைமுறைப்படுத்தி அளிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டனர். அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். தற்காலிக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம்.
அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். பள்ளி கல்வி துறையை சீரமைக்க கொண்டு வரப்பட்ட அரசாணையில் சில மாற்றங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். கல்வி துறையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவர். துறை அமைச்சர்களிடம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிச்சயம் தன் கவனத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Friday, September 02, 2022
செப். 10 இல் ஜாக்டோ ஜியோ மாநாடு! அதற்கு முன் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டம்
Monday, August 29, 2022
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: பொதுச் செயலாளர் தகவல்
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித் துள்ளார்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வடக்கு மண்டல மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் தலைமைதாங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடக்க இருக்கின்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வர இருக்கின்றனர்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமுல்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, தொடக்க கல்வித்துறை முழு சுதந்திரமாக இயங்க அரசாணை 101, 108 ஆகியவற்றை ரத்து செய்தல், தேசிய மருத்துவ காப்பீட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ செலவினங்களை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள பணிப்பாதுகாப்பு போல ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யும் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவற்றை பரிசீலித்து அவர் அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.











