Breaking

Showing posts with label School Education Department orders. Show all posts
Showing posts with label School Education Department orders. Show all posts

Saturday, March 15, 2025

Saturday, February 17, 2024

February 17, 2024

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழி மதிப்பெண்ணும் சான்றிதழில் இடம்பெறும்: பள்ளிக்கல்வி துறை



Class 10 General Examination Marks of Optional Language will also appear in the Certificate: School Education Department 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழி மதிப்பெண்ணும் சான்றிதழில் இடம்பெறும்: பள்ளிக்கல்வி துறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழி பாடத்தில் பெறும் மதிப்பெண்ணும் சான்றிதழில் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில்,10-ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் இடம்பெறும். ஒரு பாடத்துக்கு தலா 100வீதம் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். இதுதவிர, தாய்மொழியை விருப்பபாடமாக தேர்வு செய்பவர்களுக்கு விருப்ப மொழி பாடத்துக்கான தேர்வும் தனியாக நடத்தப்படுகிறது. ஆனால், இதில் பெறும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறுவது இல்லை.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கில், விருப்ப மொழி பாடங்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி 4-ல் விருப்ப மொழி பாடத் தேர்வில் மாணவர்கள் பெறும்மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், பிற பாடங்கள்போல இதற்கும் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் (‘பாஸ் மார்க்’) 35 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் 6 பாடங்களில் பெறும் மதிப்பெண்கள், அவர்களது சான்றிதழில் குறிப்பிடப்படும். இந்த நடைமுறை வரும் 2024-25-ம் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இனிமேல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழி பாடத்தை தேர்வு செய்தவர்களுக்கு மொத்த மதிப்பெண் 600 என்றும், தேர்வு செய்யாதவர்களுக்கு வழக்கம்போல 500 மதிப்பெண்ணும் கணக்கிடப்ப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, February 04, 2024

February 04, 2024

ஆய்வக உதவியாளர்களுக்கு இதர பணிகளை வழங்கக்கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு



ஆய்வக உதவியாளர்களுக்கு இதர பணிகளை வழங்கக்கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு Laboratory Assistants not to be assigned other duties: School Education Department Order

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு தவிர இதர பணிகள் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் க.அறிவொளிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அடல் டிங்கரிங் ஆய்வகம் (மத்திய அரசின் நிதியுதவி), உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம், மெய்நிகர் வகுப்பறை, பாடம் சார்ந்த இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள், மொழி ஆய்வகங்கள், தொழிற்கல்வி மற்றும் கணித ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

திறனை மேம்படுத்துதல்: இந்த ஆய்வகங்கள் பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை படைக்கும் திறனைமேம்படுத்துவதற்கு உந்துதலாகஅமையும். இத்தகைய பள்ளிஆய்வகம் மற்றும் அதன் உபகரணங்களை முறையாக பராமரித்து வருவதில் ஆய்வக உதவியாளர்கள் பங்களிப்பு மிகவும்அவசியமாகிறது. எனவே, ஆய்வக உதவியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும், பாடத்திட்ட அடிப்படையில் ஆய்வக செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அதனுடன் ஆய்வக பராமரிப்புபணிகளில் முழுக் கவனம் செலுத்திடும் வகையில் ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களுக்கான பணியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறைச் செயலரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பிற பணிகள் கூடாது:

இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறையில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆய்வகப் பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து இந்த உத்தரவைபள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, January 21, 2024

January 21, 2024

பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி வரும் 29ம் தேதி துவக்கம் - மாவட்ட வாரியாக தேதி அறிவிப்பு

For the first time in the history of India, the School Education Department is launching a new program - Minister Udayanidhi இந்திய வரலாற்றில் முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை புதிய நிகழ்ச்சி - அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் முதன்முறையாக அனைத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரடியாக சந்தித்து பேசும் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மொத்தம் 7 கட்டமாக நடைபெற உள்ள நிகழ்ச்சியை வரும் 29ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபட தொடங்கியுள்ளன.

அதேபோல், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலை உணவு திட்டம், அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழ்நாடு அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.

அதேபோல், கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட இடைநிற்றலை சரிசெய்ய முன்னெடுக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள்,

மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி மற்றும் மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி ஆகிய பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செய்து வருகிறது. தற்போது, அவற்றில் ஒருபகுதியாக, ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை நடத்த இருக்கிறது. பெற்றோர்களுக்கு விழிப் புணர்வு: பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற இந்த நிகழ்ச்சி மொத்தம் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, வருகிற 29ம் தேதி மதுரையில் தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலர் குமரகுருபரன் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளி இயக்குநர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

மதுரையில் தொடங்கும் இந்த முதற்கட்ட நிகழ்ச்சியில், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒரு பள்ளிக்கு 4 பெற்றோர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என 30 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறார். அதில் பள்ளிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிப்பது என பல்வேறு கருத்துகள் கேட்டறியப்பட்டு இருக்கிறது.
ஆனால், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை அமைச்சர் நேரில் சந்தித்து, அவர்களின் மனநிலையை கேட்டு அறிவது என்பது இதுவரை நடக்காத ஒன்று. ஏனென்றால், பெற்றோர்கள் தான் மாணவர்களின் முதல் ஆசிரியர், மாணவர்களின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்பவர்கள் அவர்கள் மட்டுமே. அதற்காகத்தான் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன.

ஆனால் அவை அனைத்தும் பெற்றோர்களுக்கு தெரிந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றோர்களுக்கு அதனை தெரியப்படுத்த உள்ளனர்.

மேலும், பெற்றோர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பினை பெறுவர். எனவே அரசுப்பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்னைகள் என்ன, வகுப்பறையில் உள்ள தேவைகள் என்ன என்பவை குறித்து நேரடியாக தெரிவிக்கும் ஒரு வாய்ப்பினை பெறுவர். கடந்த ஆண்டை பொறுத்தவரை அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை மேலும் அதிகரிக்க இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, January 11, 2024

January 11, 2024

பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது

The School Education Department has partnered with Microsoft to implement a program called TEALS for students - பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது

மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் அரசு

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைந்து TEALS ( Technology Education and Learning Support ) எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது ! AI , Chat GPT தொழில்நுட்பங்கள் இதன்மூலம் கற்பிக்கப்பட உள்ளன முதற்கட்டமாக இந்த ஆண்டில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு , பின்னர் 100 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்

Tuesday, November 28, 2023

November 28, 2023

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு School Education Department decides to provide laptops to teachers



ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்க பள்ளிகளில் கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 79,723 டேப்லெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் கோரப்பட்டுள்ளது. பொதுவாக மடிக்கணினி, டேப்லெட் போன்ற எண்ம சாதனங்கள் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலமாக கொள்முதல் செய்யப்படும். ஆனால், இந்தமுறை வெளி நிறுவனங்களிடம் நேரடியாக டேப்லெட்களை பள்ளிக் கல்வித் துறை கொள்முதல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த கையடக்கக் கணினியில் பாடக்குறிப்பேடுகள், எண்ணும், எழுத்தும் சாா்ந்த பயிற்சி கையேடுகள், காணொலிகள் உள்ளிட்ட கல்விசாா்அம்சங்கள் பதிவேற்றப்பட்டு ஆசிரியா்களுக்கு வழங்கப்படும். அதைக் கொண்டு குழந்தைகளுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும், இதன்மூலம் ஆசிரியா்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் முடியும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tuesday, July 25, 2023

July 25, 2023

பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே: அமைச்சர் அன்பில் மகேஷ்



Actions taken by the School Education Department are not for profit, but to create capable students: Minister Anbil Mahesh - பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே: அமைச்சர் அன்பில் மகேஷ்

டிஜிட்டல் உலகில் தயக்கமின்றி பிரிந்து அறிந்து படிக்க முடியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே என பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் விரைந்து முடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது.

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆகஸ்ட் இறுதிக்குள் விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் விநியோகிக்க ஏற்பாடுகள் தீவிரம்

Total Pageviews

Search This Blog