Breaking

Showing posts with label Professor suspended. Show all posts
Showing posts with label Professor suspended. Show all posts

Tuesday, November 28, 2023

November 28, 2023

ஆராய்ச்சி மாணவர் தற்கொலை - சென்னை ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்!

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம்.

மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடி பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம்! சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்கள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் பேராசிரியர், மாணவரை உள்ளடக்கி 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் மார்ச் 31ல் ஆராய்ச்சி மாணவர் சச்சின் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பேராசிரியர் ஆசிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் மாணவர்களின் பாதுகாப்பு, வளாகத்தில் நெறிசார்ந்த நடைமுறைகளை கண்காணிப்பது, மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது, கற்றலுக்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பான பொறுப்புகளை கையாள ஐபிஎஸ் அதிகாரி ஜி.திலகவதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, April 08, 2022

April 08, 2022

வகுப்பில் சா்ச்சைப் பாடம் - பேராசிரியா் இடைநீக்கம்

வகுப்பில் ஹிந்து இதிகாசங்கள் தொடா்பாக சா்ச்சைப் பாடம்: அலிகா் முஸ்லிம் பல்கலை. பேராசிரியா் இடைநீக்கம்

உத்தர பிரதேசத்தின் அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் ஒருவா் ஹிந்து இதிகாசங்களில் பாலியல் வன்கொடுமைகள் உள்ளன என்று உதாரணங்களைக் கூறி வகுப்பில் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அந்த பல்கலைக்கழத்துக்குள்பட்ட ஜவாஹா்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றிய ஜிதேந்தா் குமாா். இவா் தடயவியல் அறிவியல் தொடா்பாக வகுப்பு நடத்தியபோது ஹிந்து இதிகாசங்களில் பாலியல் வன்கொடுமைகள் உள்ளன என்று உதாரணங்களைக் காட்சிப்படுத்திக் கூறினாா்.

இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை பணியிடைநீக்கம் செய்த பல்கலைக்கழக நிா்வாகம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், இரு நபா் விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. சா்ச்சை எழுந்ததையடுத்து அந்த பேராசிரியா் தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளாா். இது தொடா்பாக பல்கலைகழக துணை வேந்தருக்கு அவா் கடிதம் எழுதினாா். அதில், மத உணா்வுகளைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல, தொன்மை காலத்தில் இருந்தே பாலியல் வன்கொடுமை போன்ற துயரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதற்கே உதாரணமாக பேசினேன் என்று விளக்கமளித்துள்ளாா்.

அந்த பேராசிரியருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடா்பான புகாரின் பேரில் அந்த பேராசிரியா் மீது இரு மதத்தினா் இடையே துவேஷத்தைத் தூண்டுவது, மத உணா்வுகளைப் புண்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Total Pageviews

Search This Blog