Breaking

Showing posts with label Computer Science. Show all posts
Showing posts with label Computer Science. Show all posts

Monday, June 08, 2026

Friday, January 16, 2026

Thursday, November 13, 2025

Friday, May 30, 2025

Monday, March 24, 2025

Tuesday, March 11, 2025

Tuesday, December 31, 2024

Monday, December 30, 2024

Monday, September 25, 2023

Thursday, August 10, 2023

August 10, 2023

HI TECH LAB ASSESSMENT DATES AUGUST 2023

Friday, June 16, 2023

Friday, February 10, 2023

February 10, 2023

11, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு - DATA ENTRY பணியில் ஈடுபடும் கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி ஊதியம் உயர்த்துதல் - சார்பு

11, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு - DATA ENTRY பணியில் ஈடுபடும் கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி ஊதியம் உயர்த்துதல் - சார்பு - Class 11th and 12th Public Examination - Increase in exam pay for computer teachers engaged in DATA ENTRY work - Dependent

விடைத்தாள் திருத்தும் மையங்களில் தரவு பதிவிடும் (Data Entry) கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணி ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டி, ஆணையர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு, கோரிக்கை

Wednesday, December 21, 2022

December 21, 2022

கணினி ஆசிரியருக்கு வேறு பணி பள்ளிகளில் பாடம் பாதிப்பு

கணினி ஆசிரியருக்கு வேறு பணி பள்ளிகளில் பாடம் பாதிப்பு

அரசு பள்ளி கணினி ஆசிரியர்கள், டி.ஆர்.பி., பணிக்கு மாற்றப்படுவதால், பள்ளிகளில் கணினி பாடம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணினி அறிவியல் ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யின் பணிகளை மேற்கொள்ள, தினசரி அயல் பணி அடிப்படையில் மாற்றப்படுகின்றனர்.

அதனால், இந்த ஆசிரியர்கள், நடப்பு கல்வி ஆண்டின் பெரும்பாலான வேலை நாட்களில் பள்ளிக்குச் செல்லாமல், வாரியத்தில் வேலை பார்க்கின்றனர்.

அந்த ஆசிரியர்கள் பணியாற்றும் அரசு மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணினி பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன.

பொதுத் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கணினி அறிவியல் பாடம் படிக்காமலும், கணினி இயக்கவும் கூட தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பின், இன்ஜினியரிங் படிக்க சென்றால், அங்கு முதலிடத்தில் உள்ள கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்வது வழக்கம்.

ஆனால், பிளஸ் 2வில் கணினி பாடம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல், இன்ஜினியரிங் படிக்க சென்றால், தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என மாணவர்கள் அஞ்சுகின்றனர்.

Thursday, October 27, 2022

October 27, 2022

கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நவம்பர் 10 விண்ணப்பிக்க கடைசி தேதி

கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை.

பி.எட் தகுதியுடன் பி.இ(கணினி அறிவியல்) அல்லது பி.எஸ்சி(கணினி அறிவியல்) அல்லது பிசிஏ அல்லது பி.எஸ்சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம், சேலம் - 636005 என்ற முகவரியில் நவம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Wednesday, June 29, 2022

June 29, 2022

கணினி அறிவியல் பாட தனி கட்டணம் ரத்து அரசாணை வெளியீடு

தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23ம் கல்வி ஆண்டிலிருந்து ரூ.200 தனிக்கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். இதற்கென ஆகும் செலவினம் ரூ.6 கோடியை அரசே ஏற்கும். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பட்சத்தில் அரசு பள்ளி மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக பயில மாணவர்கள் செலுத்தும் தனிக்கட்டணம் ரூ.200ஐ 2022-23ம் கல்வியாண்டில் இருந்து ரத்து செய்வதன் வாயிலாக ஒவ்வொரு கல்வியாண்டும் 3.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர். எனவே அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தினை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனிக் கட்டணத்தை மாணவர்களின் நலன் கருதி 2022-23ம் கல்வி ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்து ஆணை வழங்குமாறு பள்ளி கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஏற்று அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தினை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக்கட்டணம் ரூ.200 மாணவர்களின் நலன் கருதி 2022-23ம் கல்வி ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்து அரசு ஆணையிடுகிறது.

Thursday, March 31, 2022

March 31, 2022

அரசு ஆரம்பப் பள்ளியிலும் அமல்படுத்தப்படுமா கணினி அறிவியல் பாடம்!

அரசு ஆரம்பப் பள்ளியிலும் அமல்படுத்தப்படுமா கணினி அறிவியல் பாடம்!
திரு வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

செய்தி:

நன்றி: திருச்சி தினமலர்.

Total Pageviews

Search This Blog