Breaking

Showing posts with label higher educational. Show all posts
Showing posts with label higher educational. Show all posts

Friday, April 12, 2024

Wednesday, January 17, 2024

January 17, 2024

முதுநிலை, உயர் கல்வி மாணவர் விவரங்களை பதிவேற்ற உத்தரவு



முதுநிலை, உயர் கல்வி மாணவர் விவரங்களை பதிவேற்ற உத்தரவு Order to upload details of Master, Higher Education students

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலர் அஜேந்தர் சிங், அனைத்து மாநில மருத்துவக் கல்வி இயக்குநர்களுக்கும், மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நீட் தேர்வு தகுதி மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

அதன்படி, நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், படிப்பின் விவரம், இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையதளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தெரிவுப் பகுதியில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 20, 2023

March 20, 2023

உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியான அறிவிப்பு - உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம்

உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியான அறிவிப்பு - உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் - Notification for filling the vacancies of Assistant Professor - Higher Education Secretary Explanation

பொய்யான அறிவிப்பு - உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் - உயர்கல்வித்துறை செயலாளர்
இதையும் படிக்க | இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை - கடைசி தேதி: 2.4.2023
பொய்யான அறிவிப்பு - உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் br கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் - உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம்

Sunday, February 12, 2023

February 12, 2023

அதிக கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த சமையல் பணியாளர்கள் பணிநீக்கம் செய்த ஆட்சியர் உத்தரவு ரத்து

அதிக கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த சமையல் பணியாளர்கள் பணிநீக்கம் செய்த ஆட்சியர் உத்தரவு ரத்து Cancellation of the order of the Collector dismissing the cooks who joined the service with higher educational qualifications

அதிக கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த சமையல் பணியாளர்களை பணிநீக்கம் செய்து திருச்சி ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் சமையல் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டது. இதில், அதிக கல்வித் தகுதியுடன் சிலர் பணியில் சேர்ந்ததாகக் கூறி அவர்களது பணி நியமனத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், பணி நியமனம் குறித்த விளம்பரத்தில் கல்வித் தகுதி பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

அதனை ஏற்ற நீதிமன்றம், வேலை வாய்ப்பு அறிவிப்பில், கல்வி குறித்த தகுதி இல்லை என உறுதி செய்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

Total Pageviews

Search This Blog