Breaking

Showing posts with label BANKING. Show all posts
Showing posts with label BANKING. Show all posts

Monday, January 01, 2024

January 01, 2024

இனி ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் - withdraw money without an ATM card



All you need is to log in to iMobile and initiate a Cardless Cash withdrawal transaction. You can withdraw cash from over 16,927 ICICI Bank ATMs across India, without any ATM Card, using the details received through an SMS and 4-digit temporary PIN set while initiating transaction.

Can I withdraw cash without my card?

Withdrawing cash from ATMs without a bank card

The process may vary depending on your provider, but cardless cash withdrawals usually involve you signing onto the app to access your account. Select the option on the app and, depending on the bank, you may have to go through additional security.

How can I withdraw money from HDFC ATM without card?

UPI-ATM transactions – a step-by-step guide

Look for the option labelled 'UPI Cardless Cash' on the ATM screen. ...

Next, you will see a list of fast cash options displayed on the screen. ...

After selecting the amount, a QR code will be generated on the screen. ...

Within your UPI app, find the option to scan QR codes. How can I withdraw money from Indian bank without ATM card?

Customers need to visit Indian Bank branches for One-time registration of OTP based Cardless withdrawal through ATM/BNAs. Customer will receive a 4 digit static PIN in the registered mobile number. Customer has to visit any Indian Bank ATM/BNA and select “Cardless Withdrawal through OTP SMS”

இனி ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் Now you can withdraw money without an ATM card

கார்டு இல்லாமல் கியூஆர் கோடை பயன்படுத்தி பணம் எடுக்கும் வகையில் ATM எந்திரங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தவுள்ளது.

மேலும், தேசிய பேமெண்ட் கார்பரேஷனுக்கு உட்பட்ட UPI செயலிகளில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஓராண்டுக்கு மேலாக செயல்படாத UPI ஐடிகளை முடக்கவும், பணம் செலுத்தும் போது பெறுபவரின் வங்கிக்கணக்கில் உள்ள உண்மையான பெயரை திரையில் காட்டும் வசதியும் அறிமுகம் செய்ய உள்ளது

Wednesday, November 29, 2023

November 29, 2023

டிசம்பரில் 18 நாள்கள் வங்கிகள் இயங்காது?

டிசம்பரில் 18 நாள்கள் வங்கிகள் இயங்காது?

டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 18 நாட்கள் வங்கிகள் இயங்காது என வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

டிசம்பர் 1, 2023 - வெள்ளிக்கிழமை - மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை நாள் (நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம்)

டிசம்பர் 3, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 4, 2023 - திங்கட்கிழமை - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவா, திரிபுரா)

டிசம்பர் 9, 2023 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை

டிசம்பர் 10, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 12, 2023 - செவ்வாய்க்கிழமை - பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)

டிசம்பர் 13, 2023 - புதன்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)

டிசம்பர் 14, 2023 - வியாழக்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)

டிசம்பர் 17, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 18, 2023 - திங்கட்கிழமை - யூ சோஸோதாமின் இறந்த நாள் (மேகாலயா)

டிசம்பர் 19, 2023 - செவ்வாய்க்கிழமை - கோவா விடுதலை நாள் (கோவா)

டிசம்பர் 23, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை

டிசம்பர் 24, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 25, 2023 - திங்கட்கிழமை - கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26, 2023 - செவ்வாய்க்கிழமை - கிறிஸ்துமஸ் (மேகாலயா, தெலுங்கானா)

டிசம்பர் 27, 2023 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ் (மிசோரம்)

டிசம்பர் 30, 2023 - சனிக்கிழமை - யு கியாங் நங்பா (சிக்கிம், மேகாலயா)

டிசம்பர் 31, 2023 - ஞாயிற்றுக்கிழமை

Thursday, November 16, 2023

November 16, 2023

Reserve bank of india (RBI) வட்டி அதிகரிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!



Reserve bank of india (RBI) வட்டி அதிகரிப்பு

Reserve bank of india (RBI) வட்டி அதிகரிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி! Reserve bank of india (RBI) interest rate hike, teachers and government employees shocked!

அனைத்து வங்கிகளிலும் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு அக்டோபர் மாத ஊதியத்தில் அதிகமாக பிடித்ததால் அதிர்ச்சி 7 % வட்டி வீதத்தில் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு தற்போது வீட்டுக்கடன் 9.5 % வட்டிவீதம் அதிகரிப்பால் தோராயமாக 10 லட்சத்திற்கு ரூ.2000 வட்டி அதிகமாக கட்ட வேணடடியது உள்ளது. அதனால் ஒருவர் 500000 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றிருந்தால் 10,000 அதிகமாக வட்டி பிடித்தம் செய்யய்பப்டுள்ளது. இதனால் மாத ஊதியத்தில் அதிகமாக செலவழிக்க வேண்டிய உள்ளது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இது குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வட்டி விகிதம் தீடீர் அதிகரிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி ஏற்கனவே வீட்டு கடன் பெற்றோர் இருமடங்கு வட்டி கட்டி வரும் நிலையில் இப்பொழுது கூடுதலாக வட்டி கட்டுவது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்கின்றனர். மேலும் நகைகக்கடன் விவசாயக்கடனிலும் வட்டி 8 லிருந்து 8.5 % உயர்ந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Tuesday, November 14, 2023

November 14, 2023

SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை - ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை!

SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை - ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை!!!

SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை வந்துள்ளது. கருவூல அலுவலர்களிடம் பேசி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளலாம். 1996-2023வரை ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை கிடைக்கும்.

Monday, July 31, 2023

July 31, 2023

ஆகஸ்ட் மாதத்தில், பல்வேறு வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்தில், பல்வேறு வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு - In August, 14 days holiday for various banks - RBI notification

வரும் ஆகஸ்ட் மாதத்தில், பல்வேறு வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது வங்கிகள் தொடர்பான நிறைய வேலைகள், ஆன்லைனிலேயே மேற்கொள்ளும் வசதி வந்துவிட்டது.

இருப்பினும், சில வேலைக்காக வங்கிக்குச் செல்வது முக்கியம். முக்கியமான பரிவர்த்தனை மேற்கொள்ள திட்டமிடுவோர், அதற்கேற்றால் போல் முன்கூட்டியே திட்டமிட்டுவது அவசியம்.

அதற்கு வங்கி விடுமுறை நாட்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு வங்கிகள் 14 நாட்கள் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களை பொருத்து மாறுபடும் விடுமுறை விவரங்கள் குறித்து பார்ப்போம்.

*ஆகஸ்ட் 6 - ஞாயிறு விடுமுறை*

2.ஆகஸ்ட் 8 - டெண்டோங் லோ ரம் ஃபாத் (சிக்கிம் காங்டாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை)

3.ஆகஸ்ட் 12 - 2வது சனிக்கிழமை விடுமுறை

4.ஆகஸ்ட் 13 - ஞாயிறு விடுமுறை

5.ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்
6.ஆகஸ்ட் 16 - பார்சி புத்தாண்டு ( மும்பை, நாக்பூர், கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை)

7.ஆகஸ்ட் 18 - ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி (கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை)

8.ஆகஸ்ட் 20 - ஞாயிறு விடுமுறை

9.ஆகஸ்ட் 26 - 4வது சனிக்கிழமை விடுமுறை

10.ஆகஸ்ட் 27 - ஞாயிறு விடுமுறை

11.ஆகஸ்ட் 28 - முதல் ஓணம் ( கொச்சி, திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)

12.ஆகஸ்ட் 29 - ஓணம் பண்டிகை ( கேரளாவில் வங்கிகளுக்கு விடுமுறை)

13.ஆகஸ்ட் 30 - ரக்ஷா பந்தன் (ஜெய்ப்பூர், சிம்லாவில் வங்கிகளுக்கு விடுமுறை)

14.ஆகஸ்ட் 31 - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி / பாங்-லாப்சோல் ( டேராடூன், காங்டாக், கான்பூர், லக்னோ,கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)

Thursday, March 23, 2023

March 23, 2023

கல்வி உதவித்தொகை - அஞ்சல்துறையில் மாணவர்கள் கணக்குத் தொடங்கலாம்

Scholarship – Students can open account with Post Office - அஞ்சல்துறையில் மாணவர்கள் கணக்குத் தொடங்கலாம்

சென்னை: கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெறும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக , அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் அந்தந்தப் பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து கடந்த 10 நாள்களாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் 2,894 மாணவ, மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 18,850 மாணவ, மாணவிகளுக்கு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது. இதனால், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அலுவலரை அல்லது தபால்காரரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை மாணவ, மாணவிகள் தொடங்கலாம்.

தபால்காரா்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் அலகு ஆகியவை மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Thursday, February 09, 2023

February 09, 2023

ரூ.13.10 லட்சம் சம்பளத்தில் சௌத் இந்தியன் வங்கியில் வேலை - கடைசி தேதி: 15.02.2023

South Indian Bank Jobs with Salary Rs.13.10 Lakh - Last Date: 15.02.2023 - ஆண்டுக்கு ரூ.13.10 லட்சம் சம்பளத்தில் சௌத் இந்தியன் வங்கியில் வேலை

சௌத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்கள், தேடுபொறி போன்ற புரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி மற்றும் இதர விவரங்கள்:

நிறுவனம்: சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank)

பணி: Marketing for MSME & NRI Business

பணி: Social Media

பணி: Search Engine Optimisation

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ, பி,டெக்முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ஆண்டுக்கு சம்பளமாக ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.10 லட்சம் வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2023

மேலும் விவரங்கள் அறிய
CLICK HERE TO DOWNLOAD

Tuesday, January 17, 2023

January 17, 2023

Tentative Calendar of Online CRP for RRBs & PSBs (2023-2024)

Tentative Calendar of Online CRP for RRBs & PSBs (2023-2024)

Process of Registration

The registration process will be through online mode only and there will be a single registration for both Preliminary and Main examination, wherever applicable.

Candidates will be required to upload the following documents as per the specification given in advertisement.

(1) Photograph of the Applicant-20 kb to 50 kb in .jpeg file

(2) Signature of the Applicant - 10 kb to 20 kb in jpeg file

(3) Thumb impression of the Applicant-20 kb to 50 kb in .jpeg file

(4) Scanned Copy of handwritten declaration as per the format, which will be available in the respective advertisement - 50 kb to 100 kb in .jpeg file

Detailed Notifications

Prospective candidates are advised to visit official website of IBPS www.ibps.in regularly for detailed notification for each of the above examinations to be displayed in due course.

Disclaimer:

IBPS, however, reserves the right to change the process including guidelines/modalities stated above on the basis of administrative reasons, court order, Govt. Advisories, etc.

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, November 29, 2022

November 29, 2022

வங்கிக் கணக்கை மற்றொரு கிளைக்கு எளிதாக மாற்றுவது எப்படி?

வங்கிக் கணக்கை மற்றொரு கிளைக்கு எளிதாக மாற்றுவது எப்படி?

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் சேமிப்புக் கணக்குகளை தற்போதுள்ள வங்கிக் கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு இணையதளத்தில் மாற்றுவதற்கான வசதியை வழங்குகின்றது.

ஒரு வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு வங்கிக் கிளைக்கு சென்று, நீண்ட வங்கி வரிசையில் நின்று, ஏராளமான படிவங்களை நிரப்பி, கிளை மாற்றப்படுவதற்கு சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக எளிதாக இணையதளத்தில் மாற்றும் வசதியை எஸ்பிஐ வழங்குகின்றது.

இருப்பினும், ஒருவர் தங்கள் வங்கியின் கிளையை மாற்ற விரும்பினால், ஒரு சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்:

சேமிப்பு வங்கிக் கணக்குகள் மட்டுமே இணையதளத்தில் மற்றொரு கிளைக்கு மாற்ற இயலும். அதேபோல் செயலற்ற மற்றும் முழுமையடையாத கேஒய்சி(KYC) விவரங்கள் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளை இணையதளத்தில் கிளைகளை மாற்ற அனுமதிக்கப்படாது.

மேலும், வங்கிக் கிளையை மாற்ற விரும்பும் நபர், அவரின் செல்போன் எண் வங்கிக் கிளையில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இணையதளத்தில் மாற்ற முடியும். வங்கிக் கிளையை மாற்றுவதற்கு, மாற்ற விரும்பும் வங்கிக் கிளைக் குறியீடு முக்கியம் ஆகும்.

எஸ்பிஐ சேமிப்பு வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு இணையதளத்தில் மாற்றுவது எப்படி?

* எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'www.onlinesbi.com'-க்கு செல்ல வேண்டும்.

* முகப்புப் பக்கத்தில், 'Peronal Banking' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பயனர் பெயர்(user name) மற்றும் கடவுச்சொல்லைக்(password) கொண்டு உள்நுழையவும்.

* இதன் மூலம் நீங்கள் நெட் பேங்கிங்கில்(net banking) உள்நுழைந்து புதிய பக்கம் திறக்கும்.

* இப்போது, இணைய சேவைகளை பெற பக்கத்தின் மேலே உள்ள 'E-Service' விருப்பத்தை கிளிக் செய்யவும்.

* சேவைகளின் பட்டியலில், 'Transfer of Savings Account' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* அடுத்து, புதிய பக்கத்தில் வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் கணக்குகளின் பட்டியலைக் காண்பிக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் ஒரே ஒரு வங்கிக் கணக்கு இருந்தால், அது தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். இப்போது, நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கிக் கிளையின் கிளைக் குறியீட்டை பதிவு செய்து, 'Get Branch Name' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

* கிளையின் பெயர் உருவாக்கப்பட்டு, சரியாக இருந்தால், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பிறகு, பக்கத்தின் முடிவில் உள்ள தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்து பின்பு 'Submit' பொத்தானைக் கிளிக் செய்யவும்.

* சமர்ப்பித்த பிறகு, புதிய பக்கத்தில் பழைய கிளைக் குறியீடு மற்றும் புதிய கிளைக் குறியீட்டைப் பயன்படுத்தி கணக்குப் பரிமாற்றத் தகவலைச் சரிபார்க்க வேண்டும். அடுத்து, 'Confirm' என்பதைக் கிளிக் செய்யவும்.

* அதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். ஒரு புதிய பக்கத்திற்கு சென்று, அங்கு நீங்கள் OTP ஐ உள்ளிட்டு 'Confirm' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

* இறுதியாக, திரையில் "Your branch transfer request has been successfully registered" என்று ஒரு அறிவிப்பைக் காண்பிக்கும்.

* இதற்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு விரைவில் மாற்றப்படும், மேலும் உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போம் எண்ணுக்கு அனுப்பப்படும் செய்தியின் மூலம் அதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

Thursday, November 24, 2022

November 24, 2022

மாணவர்களிடம் வங்கித் துறை திறன்களை வளர்க்க உள்தணிக்கையாளர் அமைப்புடன் உயர் திறன் மேம்பாட்டு மையம் ஒப்பந்தம்

மாணவர்களிடம் வங்கித் துறை திறன்களை வளர்க்க உள்தணிக்கையாளர் அமைப்புடன் உயர் திறன் மேம்பாட்டு மையம் ஒப்பந்தம்

இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் மாநாட்டை தமிழக நிதித் துறை செயலர் என்.முருகானந்தம் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவர்களிடம் வங்கி, நிதி நிர்வாகம் சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் சென்னை பிரிவு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. படம்: பு.க.பிரவீன்

சென்னை: கல்லூரி முடிக்கும் மாணவர்களிடம் வங்கி மற்றும் நிதித் துறைக்கு தேவையான திறன்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் - இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பு (ஐஐஏ)இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில் நேற்று இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக நிதித் துறைசெயலர் என்.முருகானந்தம்தொடங்கி வைத்தார். இதில், தணிக்கை துறை, தொழில் துறைசார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தணிக்கை துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்துஉரையாடினர்.

மாநாட்டை தொடங்கி வைத்து என்.முருகானந்தம் பேசும்போது, “தணிக்கை துறை மிகப் பெரும் மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. முன்பு, நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்ப்பதற்கு தணிக்கையாளர்கள் தேவைப்பட்டனர். ஆனால், இப்போது நிறுவனத்தை பாதுகாப்பாக முன்னகர்த்திச் செல்வதற்கு தணிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தணிக்கை துறையும் விரிவடைந்து வருகிறது. நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை மாணவர்களிடம் வளர்த்தெடுப்பது தமிழக அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது” என்றார்.

ஐஐஏ சென்னை பிரிவின் தலைவர் ரவி வீரராகவன் பேசும்போது, “வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தமிழக இளைஞர்களை அதிகஎண்ணிக்கையில் பணியில் அமர்த்த உள்ளன. இந்தச் சூழலில், இந்நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பும் இணைந்துள்ளது. இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தின் வங்கி, நிதி சேவைப் பிரிவின் இயக்குநர் சாய் சுமந்த் கூறும்போது, “வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு துறையில் 10,000 தமிழக இளைஞர்களை பணிக்கு எடுக்க முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிவழங்கும் முயற்சியில் இறங்கிஉள்ளோம். ஐஐஏ உடனான இந்த ஒப்பந்தம் அத்தகைய முயற்சிகளில் ஒன்று” என்றார். வங்கி, நிதி சேவை, காப்பீடு துறைகளில் 10,000 இளைஞர்களை பணிக்கு எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்.

Friday, November 04, 2022

November 04, 2022

சமீபத்தில் ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம்- காணாமல் போனது இது எப்படி நடந்தது?

சமீபத்தில் ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம்- காணாமல் போனது இது எப்படி நடந்தது?
1. அந்தப் பெண் தனது வங்கிக் கணக்குடன் இணைத்திருந்த மொபைல் எண்ணை 4 ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை.

2. ஆனால் அதை அவளது KYC இலிருந்து நீக்குமாறு வங்கிக்கு தெரிவிக்கவில்லை.

3. இப்போது, அந்த பயன்படுத்தப்படாத மொபைல் சிம் எண் மொபைல் நிறுவனத்தால் மூடப்பட்டு மற்றொரு நபருக்கு வழங்கப்படுகிறது.

4. மொபைல் நிறுவன பாலிசியின்படி, எந்த எண்ணையும் 6 மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால், அதை கொடுக்கலாம்.

5. இப்போது புதிய எண்ணைப் பெற்றவருக்கு வங்கியின் வழக்கமான இன்சுமிங் எஸ்எம்எஸ் வரத் தொடங்கியது. அவர் என்ன செய்தார் என்றால்

அவர் ஒரு இணைப்பு மூலம் வங்கியின் தளத்தை அணுகினார். மற்றும் கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் என்று எழுதினார்.

இப்போது வங்கியில் இருந்து லிங்கின் OTP அங்கீகரிப்புக்காக அவர் கைவசம் உள்ள எண்ணுக்குச் சென்றது, அவர் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, இன்டர்நெட் பேங்கிங் மூலம் அந்தப் கணக்கிலிருந்து பெண்ணின் அனைத்துப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டார்.

எனவே, நீங்கள் பயன்படுத்தாத உங்கள் பழைய செல்பேசி எண்ணை இணைத்திருந்தால், வங்கிக்குச் சென்று வங்கி விதிகளின் படி அந்த எண்ணைஉடனே நீக்க வேண்டும்.

தயவு செய்து மேற்கூறியவற்றை மனதில் கொள்ளுங்கள். ஆறு மாதங்களாக உங்கள் பயன்படுத்தப்படாத மொபைல் எண்ணை வேறொருவருக்கு மீண்டும் ஒதுக்கலாம்.

இந்த உண்மை நம்மில் பலருக்கு புதிய தகவலாக இருக்கலாம். இது மிகவும் முக்கியமானது. கவனமாக சிந்தியுங்கள்..

Thursday, November 03, 2022

November 03, 2022

வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி காலி பணியிடங்கள் - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022


வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள ஐ.டி. ஆபீசர், வேளாண் பீல்டு ஆபீசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர், பணியாளர் அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி என 710 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது வங்கி பணியாளர் தேர்வாணையம்(ஐபிபிஎஸ்) இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 710

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: I.T. Officer (Scale-I) - 44 
தகுதி: கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகியவற்றில் 4 ஆண்டு பொறியியல், தொழில்நுட்பப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Agricultural Field Officer (Scale I) - 516
தகுதி: வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், பால்வள அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, வேளாண்மை ஆகியவற்றில் 4 ஆண்டு பட்டம். சந்தைப்படுத்தல், கூட்டுறவு - வங்கி, வேளாண்-வனவியல், வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், உணவு அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், பட்டு வளர்ப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Rajbhasha Adhikarai (Scale I) - 25
தகுதி: ஹிந்தியில் முதுகலைப் பட்டம் அல்லது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Law Officer (Scale I) - 10 
தகுதி: சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் (எல்எல்பி) பெற்று பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: HR/Personnel Officer (Scale I) - 15
தகுதி: இளங்கலைப் பட்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பணியாளர் மேலாண்மை, தொழில்துறை உறவுகள், சமூகப் பணி, தொழிலாளர் சட்டம் ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Marketing Officer (Scale I) - 100
தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது மார்க்கெட்டிங்கி பிரிவில் முழுநேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது மார்க்கெட்டிங்க் பிரிவில் இரண்டு ஆண்டு முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21.11.2022 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சார்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டண்ததை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். இங்கே கிளிக் செய்யவும்.

November 03, 2022

வங்கி நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2022

வங்கி நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய நிதி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பேங்க் நோட் பிரஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை டெக்னீசியன்(பிரிண்டிங்க்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 02/2022

பணி: Junior Technician (Printing)

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.18,780 - 67,390

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் லித்தோ ஆஃப்செட் மெஷின் மைண்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைன்டர், ஆஃப்செட் பிரிண்டிங், பிளேட்மேக்கிங், எலக்ட்ரோபிளேட்டிங், ப்ளேட் மேக்கர் கம் இம்போசிட்டர் ஆகிய பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://bnpdewas.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2022

Tuesday, September 20, 2022

September 20, 2022

மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்கள் தள்ளுபடி: SBI அறிவிப்பு

மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்கள் தள்ளுபடி: SBI அறிவிப்பு!

, பாரத ஸ்டேட் வங்கி(SBI) மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான குறுஞ்செய்தி(SMS) கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்களிடையே மொபைல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்த அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.

USSD சேவைகளை பயன்படுத்தி பயனாளிகள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் வசதியாக பணப் பரிவர்த்தனை செய்யலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி;

மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்களை இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, பயனாளிகள் தற்போது எந்த கட்டணமுமில்லாமல் வசதியாக பணப் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அனுப்புதல், கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் மற்றும் UPI பின்னை மாற்றுதல் உள்ளிட்ட எந்த கூடுதல் செலவும் இல்லாமல் பயனர்கள் சேவை பெற முடியும் என SBI அறிவித்துள்ளது.

Wednesday, July 27, 2022

July 27, 2022

SBI WhatsApp Banking : இனி Whatsapp-இல் கூட SBI வங்கி சேவையை பெறமுடியும்.. நீங்க செய்யவேண்டியது இதுதான்!

முதலில் நீங்கள் registration செய்ய வேண்டும் . அதற்கு WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு வங்கி கணக்கு எண்ணை பதிவிட்டு......

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய WhatsApp வங்கி சேவைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பேலன்ஸ், பண பரிவர்த்தனை விவரம் உள்ளிட்ட சில மினி அறிக்கைகளையும் பார்க்கலாம். வாட்ஸ் அப் மூலம் பாதுகாப்பான வங்கி சேவைகளை பெறலாம் என பாரத ஸ்டேட் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்காக தனது புத்தம் புதிய வாட்ஸ்அப் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதால், அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகளை அவர்கள் அறிந்து கொள்வது அவசியம். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம். எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளை பயன்படுத்துவது எப்படி ?

முதலில் நீங்கள் registration செய்ய வேண்டும் . அதற்கு WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு வங்கி கணக்கு எண்ணை பதிவிட்டு, 7208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். மொபைல் எண் வங்கி இணைப்பில் பதிவு செய்யப்பட்ட எண்ணாக இருக்க வேண்டும் .

எஸ்எம்எஸ் அனுப்பிய பிறகு, நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளில் பதிவு செய்யப்படுவீர்கள். 90226 90226 என்ற எஸ்பிஐ எண்ணிலிருந்து உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.அந்த எண்ணை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

SBI - 90226 90226 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ஹாய் எஸ்பிஐ என்று செய்தி அனுப்பவும் அல்லது பயன்பாட்டில் நீங்கள் முன்னதாக பெற்ற செய்திக்கு பதில் அனுப்பவும். இப்போது நீங்கள் கீழ்கண்ட குறுஞ்செய்தியை பெறுவீர்கள் . அதன் மூலம் உங்களுக்கு தேவையான சேவையை தேர்வு செய்து நொடிப்பொழுதில் உங்களின் தேவையை அறிந்துக்கொள்ளலாம்.

Saturday, July 02, 2022

July 02, 2022

வாடிக்கையாளர் கவனத்திற்கு.. இந்த மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை..!

இந்த மாதத்தில் (ஜூலை) பல்வேறு பொது பண்டிகைகள் மற்றும் விழாக்கள் வருவதையொட்டி, சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்து மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் படி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விடுமுறை காலம் மாநிலங்களுக்கு, மாநிலம் வேறுபடும் என்றாலும் பொது விடுமுறைகள் அனைத்திலும் அனைத்து மாநில வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் படி விடுமுறைப் பட்டியல்:

ஜூலை ஒன்றாம் தேதி (இன்று) நடைபெறும் ரதயாத்திரையை முன்னிட்டு ஒடிசா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும், கர்ச்சி பூஜையை முன்னிட்டு ஜூலை 7-ம் தேதி திரிபுரா மாநில வங்கிகளுக்கும், இட் உல் அஸாவை முன்னிட்டு ஜம்மு & காஷ்மீர் வங்கிகளுக்கு ஜூலை 11-ம் தேதியும், பானு ஜெயந்தியை முன்னிட்டு ஜூலை 13-ம் தேதி சிக்கிம் மாநில வங்கிகளுக்கும், பெ தியன்க்லாமை முன்னிட்டு ஜூலை 14-ம் தேதி மேகாலயா மாநிலத்திற்கும், ஹரேலாவை முன்னிட்டு ஜூலை 16-ம் தேதி உத்தரகாண்ட் வங்கிகளுக்கும், கெர் பூஜாவை முன்னிட்டு ஜூலை 26-ம் தேதி திரிபுரா மாநில வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவைகள் இல்லாமல், இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை ஆகியவையும் வருவதால் வங்கிகள் 14 நாட்கள் செயல்படாது என்றும், விடுமுறை நாட்களில் அக்கவுண்ட் க்ளோஸ் செய்யப்பட்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறைகள் வருவதால் பண பரிவர்த்தனைகளை செய்ய விரும்புவர்கள் முன்பே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு வங்கிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு தான் விடுமுறை என்றாலும் ஆன்லைன் சேவை தொடர்ந்து செயல்படும்.

பெரும்பாலான வங்கி சார்ந்த பணிகள் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வரும் நிலையில், வங்கிக்கு நேரடியாகச் சென்று சேவைகளைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இது இடையூறாக இருக்கும்.

விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் திறக்கப்படும் போது கூட்டம் அலைமோதும் என்பதால், முன்கூட்டியே வங்கி பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Wednesday, June 29, 2022

June 29, 2022

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு : 226 பணியிடங்களுக்கு அழைப்பு!

நாடு முழுவதும் உள்ள ஐடிபிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்புபடி Manager - Grade B, Assistant General Manager (AGM) - Grade C, Deputy General Manager (DGM) - Grade D ஆகிய பணிகளை நிரப்ப தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இந்த பணிகளுக்கு மொத்தம் 226 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் வரும் 10.07.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி தகுதி:

• Degree/ B.Tech/ B.E/ B.Sc/ Master Degree/ Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

• விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை:

• Preliminary Screening & Personal Interview ஆகிய தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்ப முறை:

• ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே ஒரு சமயத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

• SC/ ST/ PWD பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200/- .

• மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1000/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

• ஆன்லைன் (Online). எப்படி விண்ணப்பிப்பது?

https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Specialists-Officer-22-23.pdf

Saturday, June 25, 2022

June 25, 2022

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.6.2022

 
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 21

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:  Chief Technology Officer - 1
பணி:  Senior Enterprise Architect - 1
பணி:  Solution Architect (Software) - 1
பணி:  Database Analyst-cum-Designer - 1
பணி:  UI/UX Designer & Developer - 1
பணி:  Senior Software Engineer (Full Stack Java) - 2
பணி:  Software Engineer (Full Stack Java) - 2
பணி:  Business Intelligence Report Developer - 1
பணி:  QA Engineer - 1
பணி:  Data Designer - 1
பணி:  BI Designer - 1
பணி:  Business Analysts - 2
பணி:  Application Analysts - 2
பணி:  ETL Developers - 2
பணி:  Power BI Developers - 2

தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தனியாக தகுதிகள், வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பொறியியல் துறையில் ஐடி, கணினி அறிவியல், இசிஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
தேர்வு செய்யப்படுபம் முறை : பணி அனுபவம் மற்றும்  நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : வங்கியின் அதிகாரப்பூர்வ www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவைத்தவர்கள் ரூ. 50 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  30.6.2022

மேலும் விபரங்கள் அறிய www.nabard.org  அல்லது https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1306224740advertisement.pdf என்ற ஸிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Total Pageviews

Search This Blog