Breaking

Showing posts with label TAMILNADU. Show all posts
Showing posts with label TAMILNADU. Show all posts

Saturday, January 17, 2026

Thursday, February 06, 2025

Tuesday, January 30, 2024

January 30, 2024

நாளை முதல் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் - பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள்



நாளை முதல் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் - பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் Tamil Nadu Govt appeals to make full use of public camps - new scheme 'Finding You in Your Home' from tomorrow

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய* *'உங்களைத் தேடி உங்கள் ஊரில்'* *எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது - பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள்

செய்தி வெளியீடு எண்: 193 30.01.2024

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி, முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் இல்லம் தேடி கல்வி திட்டம் மக்களைத் தேடி மருத்துவம் நான் முதல்வன் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 புதுமைப் பெண் முதலமைச்சரின் காலை உணவு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு.

அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலைநிமிரச் செய்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் நாளை (31.01.2024) புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம். சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மேலும் முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர் கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள். மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். அரசின் சேவைகளை எளிதாகவும். விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் துறை அலுவலர்கள் பொது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்

Tuesday, November 14, 2023

November 14, 2023

Polytechnic diploma exams - தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் ஒத்திவைப்பு!



Polytechnic diploma exams in Tamil Nadu postponed due to heavy rains - தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.

Tuesday, September 05, 2023

September 05, 2023

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!



Tamil Nadu government letter to the governor regarding the appointment of the university vice-chancellor!

ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்



66 "மாநில பல்கலையில் துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை பின்பற்றினால் போதுமானது; துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை” – பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக அளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றின்னால் போதும் என்றும், உறுப்பினரை புதிதாக சேர்க்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, August 15, 2023

August 15, 2023

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை

தலைமைச் செயலகம் - கடும் இட நெருக்கடி - முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவு கோட்டையான அரசினர் தோட்ட ஓமந்துாரார் வளாகத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலக வளாகத்திற்கு உடனடியாக தலைமைச் செயலகத்தினை இடம் மாறுதல் செய்தல் தொடர்பாக. -



வணக்கம்.

தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக தலைமைச் செயலக பழைய கட்டடத்தில் பணியாளர்கள் எளிதாக நடமாட முடியாத நிலை உள்ளது. தீ விபத்துகள் ஏற்பட்டால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. இதை எல்லாம் தவிர்க்கும் வகையில், மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவு தலைமைச் செயலகமான, ஓமந்துாரார் வளாகத்திற்கு தலைமைச் செயலகத்தினை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைந்து எடுத்திட வேண்டும் என கடந்த 19-01-2023 அன்று நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது தலைமைச் செயலக பழைய கட்டடத்தில் இட நெருக்கடி மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. மேலும், என்பது பணியாளர்களின் இரு சக்கர / நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதும் மிகவும் சிரமமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நாமக்கல் கவிஞர் மாளிகையின் உறுதித்தன்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது. சில தளங்களில் மேற்புற பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவது நிகழ்ந்தவண்ணம் உள்ளது. அனைத்துத் தளங்களிலும் மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைக்கப்பட்டு, அசுத்தக் காற்று வெளியேறுவதற்கான முறையான அமைப்புகள் இல்லாது அக்கட்டடத்திற்கு குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரமற்ற நிலை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது கனவுத் திட்டடமான தலைமைச் செயலகத்தினை ஓமந்துாரார் வளாகத்தில் அமைத்தார். ஆனால், அவரது கனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, முத்தமிழ் அறிஞரின் கனவினை நனவாக்கும் வாய்ப்பு என்பது உருவாகியுள்ளது. தலைமைச் செயலகப் பணியாளர்களின் நலனையும் மாண்புமிகு அமைச்சர்கள்- சட்டமன்ற உறுப்பினர்களின் நலனையும் பொது மக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தினை எளிதில் அணுகக்கூடிய வகையிலும் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவரின் தலைமைச் செயலகக் கனவினை நிறைவேற்றும் வகையிலும், உடனடியாக தலைமைச் செயலக வளாகத்தினை அரசினர் தோட்ட வளாகத்திலுள்ள ஓமந்துாரார் கட்டடத்திற்கு இட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக கொள்கிறோம்.

Monday, July 24, 2023

July 24, 2023

முறைகேடாக பதவி உயர்வு பெற்ற 45 பேர் பதவி இறக்கம்! - தமிழக அரசு உத்தரவு..

முறைகேடாக பதவி உயர்வு பெற்ற 45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்! வட்டாட்சியர்களாக மாற்றி தமிழக அரசு உத்தரவு..

முறைகேடாக பதவி உயர்வு பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட 45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் 2014 முதல் 2019 வரை நடைபெற்ற வட்டாட்சியர் பதவி உயர்வு நடவடிக்கைகளில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பதவி உயர்வு பட்டியலில் தகுதியான நபர்களின் பெயர் இடம்பெறவில்லை என்றும் முறையிடப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.



முறைகேடாக பதவி உயர்வு பெற்ற துணை ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நீதிமன்ற உத்தரவின் படி 45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “மாண்பமை உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்புரை வழங்கியது.

மாண்பமை உச்சநீதிமன்ற வழங்கிய ஆணையின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆணைகளின்படி, தற்போது வட்டாட்சியர்களாகப் பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022ஆம் அண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது

Friday, April 07, 2023

April 07, 2023

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வை ஏப்.28-க்குள் முடிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்



1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வை ஏப்.28-க்குள் முடிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம்மாதம் 28-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் ஏப்ரல் 5-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நேற்று (ஏப்.6) தொடங்கி இம்மாதம் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம்மாதம் 28-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வை 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு 17-ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு, உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wednesday, March 15, 2023

March 15, 2023

எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியீடு - தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?

நாட்டில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் பிகாா் மாநிலம் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கடுத்து அருணாசல பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன.


மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி எழுத்துபூா்வமாக இந்தப் பதிலைத் தெரிவித்தாா்.



‘எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கல்வியில் பாலின மற்றும் சமூக இடைவெளிகளைப் போக்கவும் ‘முழுமையான கல்வித் திட்டம் (சமக்ர சிக்ஷா அபியான்)’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னதாக, முதியோரிடையே எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்தும் விதமாக முதியோா் கல்வித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. குறிப்பாக நக்ஸல்கள் பாதிப்புடைய மாவட்டங்கள் மற்றும் 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்கள் எழுத்தறிவு 50 சதவீதத்துக்கும் கீழுள்ள 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 404 மவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் இந்த முதியோா் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 12-ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் நாட்டின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதத்தை 80 சதவீதம் அளவுக்கு உயா்த்தவும், எழுத்தறிவு பாலின இடைவெளியை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி, முதியோா் கல்வித் திட்டம் 2018 மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதன் மூலமாக நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 2010 முதல் 2018 மாா்ச் மாதம் வரை ஆண்டுக்கு இருமுறை தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) சாா்பில் நடத்தப்பட்ட அடிப்படை எழுத்தறிவு ஆய்வுத் தோ்வில் 7.64 கோடி போ் தோ்ச்சி பெற்று, எழுத்தறிவு பெற்றவா்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது’ என்று அன்னபூா்ண தேவி தெரிவித்துள்ளாா்.



அவா் அளித்துள்ள எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் விவரங்களின்படி கேரளம் முதலிடத்திலும், பிகாா் மாநிலம் கடைசி இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் 80.09 சதவீதத்துடன் தமிழகம் 14-ஆவது இடத்தில் உள்ளது.

எழுத்தறிவு விகிதம்: முதல் 10 இடங்கள்



1. கேரளம் 94%



2. லட்சத் தீவுகள் 91.85%



3. மிஸோரம் 91.33%



4. கோவா 88.7%



5. திரிபுரா 87.22%



6. டாமன் டையூ 87.1%



7. அந்தமான் நிகோபாா் தீவுகள் 86.63%



8. தில்லி 86.21%



9. சண்டீகா் 86.05%



10. புதுச்சேரி 85.85%



பட்டியலில் கடைசி 5 இடங்கள்



32. தெலங்கானா 66.5%



33. ஜாா்க்கண்ட் 66.4%



34. ராஜஸ்தான் 66.1%



35. அருணாசல பிரதேசம் 65.3%



36. பிகாா் 61.8%

Tuesday, February 07, 2023

February 07, 2023

பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி 17 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேலும் ஓராண்டிற்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற நிலை காலம் காலமாக தொடர்வதை அனுமதிப்பது அன்னை தமிழுக்கு இழைக்கப்படும் இரண்டகமாகும்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006-ஆம் ஆண்டு ஜூன் 9-ம் நாள் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவே இப்படி ஒரு சட்டத்தை முதல்வர் கருணாநிதி தலைமையிலான அன்றைய அரசு கொண்டு வந்தது. அச்சட்டத்தின்படி 2006-ம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு, 2007-ம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு, 2008-ம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு என படிப்படியாக தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015-16ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015-16ம் ஆண்டில் தமிழ் கட்டாயப்பாட சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை உயர்நீதிமன்றத்தால் 2021-22 வரை நீட்டிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்த தடையை நீட்டிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதை எதிர்த்து மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் மீது தான் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தகுதியின் அடிப்படையிலானது அல்ல; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து முடிக்க இயலாது என்ற அடிப்படையில் தான் இந்த இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வரும் ஜூலை 11-ம் தேதி தொடங்கும் வாரத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணையை நடத்தவுள்ள உச்சநீதிமன்றம், அதன்பின் இறுதித் தீர்ப்பை வழங்கும். ஆனால், 2016-ம் ஆண்டில் கட்டாயப் பாடமாகியிருக்க வேண்டிய தமிழ் மொழி, அந்த தகுதியை அடைய இன்னும் ஒராண்டு ஆகுமே? என்பது தான் கவலையளிக்கிறது.

தமிழகத்தில் தமிழை கட்டாயப்பாடமாக கற்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மொழிச் சிறுபான்மை பள்ளிகள் கோருவதில் நியாயமும் இல்லை; அறமும் இல்லை. மொழிச் சிறுபான்மை பள்ளிகளில் படிப்போர் அனைவரும் மொழிச் சிறுபான்மையினர் அல்ல. மொழிச் சிறுபான்மையினராகவே இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படித்து தான் ஆக வேண்டும். ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாகவும், இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றை விருப்பப்பாடமாகவும் கற்பிக்கும் பள்ளிகள், தமிழ்நாட்டு அரசின் உதவிகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, தமிழை மட்டும் கட்டாயப் பாடமாக கற்பிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது; உரிமையும் கிடையாது. அதுமட்டுமின்றி, தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் நடைமுறையில் சிறுபான்மை பள்ளிகள் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப்பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகங்களும் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும். அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோருவது எவ்வகையில் நியாயம்?

தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக, அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போதே சிறுபான்மை பள்ளிகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்,‘‘அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ எனத் தீர்ப்பளித்தது. சிறுபான்மை பள்ளிகளின் கோரிக்கை நியாயமற்றது என்பது அவற்றின் நிர்வாகங்களுக்கே தெரியும். ஆனால், அந்த பள்ளிகளின் முயற்சிகளை முறியடிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது தான் ஏமாற்றமளிக்கிறது. தமிழ் கட்டாயப் பாடத்தை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், நடப்பாண்டிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்கும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.

தமிழக அரசு வழங்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் பெயர்கள் அப்படியே அச்சிடப்படும் நிலையில், தமிழ் என்று இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் மொழிப்பாடம் என்று குறிப்பிடப்படுவதை காண சகிக்கவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி, அடுத்த ஆண்டிலிருந்தாவது பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 17, 2022

December 17, 2022

'தமிழகத்திலேயே பாட நூல்களை அச்சடிக்க ஏற்பாடு’

'தமிழகத்திலேயே பாட நூல்களை அச்சடிக்க ஏற்பாடு’

பாட நூல்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவா் ஐ. லியோனி தெரிவித்தாா்.

சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பாட நூல்கள் அச்சிடுவோா் நலச் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் உதயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவா் ஐ. லியோனி பேசியதாவது:

தற்போது பாட நூல்கள் தமிழகத்தில் உள்ள அச்சகங்களில் 92 சதவீமும், வெளிமாநில அச்சகங்களில் 8 சதவீமும் அச்சிடப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் தமிழகத்திலேயே அச்சிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஒப்பந்தப்புள்ளி பெற வேண்டுமென்றால், அது சா்வதேச ஒப்பந்தப்புள்ளியாக பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. தற்போது அதிகாரிகளிடம் வெளிமாநிலத்தினா் புத்தகம் அச்சிட ஒப்பந்தப்புள்ளி பெற்றாலும், அவா்களது அச்சகம் தமிழகத்தில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன். அதிகாரிகளும் இதற்கு ஒப்புதல் வழங்க உள்ளனா்.

எனவே, வரும் காலங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புத்தகங்கள் அனைத்தும் நமது மாநிலத்திலேயே அச்சிடப்படும். இதனிடையே, அச்சு மை உள்ளிட்டவை விலை உயா்ந்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தப்புள்ளி பெறும் போது, தற்போதய அச்சடிப்புக் கட்டணத்தைவிட 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, புத்தகங்கள் விநியோகம் செய்யும் மையங்கள் அதிகரித்துவிட்டன. இதனால், போக்குவரத்துச் செலவு அதிகமாகிறது என சங்கம் கூறியுள்ளது.

அதிகப்படியான செலவுக்கு ரசீது கொடுத்தால் பாட நூல் கழகம் அந்தத் தொகையை வழங்கத் தயாராக உள்ளது. மேலும், புத்தகங்கள் அச்சிட காகிதம் காலதாமதமின்றி வழங்க நடவடிகை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பாட நூல் அச்சிடுவோா் சங்கச் செயலா் குமரேசன் நன்றி கூறினாா்.

December 17, 2022

தமிழகத்தில் பள்ளிசெல்லா குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அந்த மாணவர்களை மீண்டும் பள்ளிகள் அல்லது சிறப்பு வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நடப்பாண்டில் பள்ளி செல்லாத குழந்தைகள் அல்லது இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

அதன்படி, குழந்தைகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க களப்பணி ஆற்ற வேண்டும். வரும் 19ம் தேதி முதல் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலமாக குழுக்கள் அமைத்து ஜன.11ம் தேதி வரை இந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், முன்னறிவிப்பின்றி தொடர்ந்து ஒரு மாதம் வரை பள்ளிக்கு வராத குழந்தைகள், அதிகமாக விடுமுறை எடுத்து பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகள் ஆகியோர் பள்ளி செல்லாக் குழந்தைகளாக கருதப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog