Breaking

Showing posts with label 10th Class General Examination. Show all posts
Showing posts with label 10th Class General Examination. Show all posts

Tuesday, November 28, 2023

November 28, 2023

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு?

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு? 10th, 11th and 12th General Examination - Decision to give marks according to attendance record?



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான வழிகாட்டுதல் விதிகளை, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களின் வருகைப்பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, குறைந்தபட்சம், 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும். அதில், 80 சதவீதம் வரை பள்ளிக்கு வந்தவர்களுக்கு, 1 மதிப்பெண்ணும்; 80 முதல் 100 சதவீதம் வந்தவர்களுக்கு, 2 மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன.

நாட்டு நலப்பணி திட்டம், அறிவியல் மன்றம் உள்ளிட்ட, 33 மன்றங்களில், ஏதாவது, மூன்றில் பங்கேற்றவர்களுக்கு, 2 அகமதிப்பீடு வழங்கப்படும்.

தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டும், வருகைப்பதிவுக்கு அதிகபட்சம், 5 மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு, 5 மதிப்பெண்களும் வழங்கலாம். இந்த விதிகளின்படி, பள்ளிகளுக்கு நீண்டநாள் வராதவர்களுக்கு, அக மதிப்பீடு மதிப்பெண் கிடைக்காது

Monday, January 30, 2023

January 30, 2023

10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு Individual candidates who failed to apply for 10th, 11th, 12th general examination can apply by Takkal mode: Directorate of Government Examinations Notification

நடைபெறவுள்ள மார்ச், ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, தக்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே 26.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை), ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் தற்போது தக்கல் முறையில் இன்று 30.01.2023 முதல் 01.02.2023 வரையிலான நாட்களில் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் (Government Examinations Service centres) நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் இணையதளத்தில் அறிவுரைகள் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் www.dge1.tn.gov.in என்ற இனையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Saturday, June 04, 2022

June 04, 2022

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு

Students who have not written 10th class general examination in Tamil Nadu should participate in the re-examination immediately Primary education officers to head teachers as action is required Have ordered.

General examinations for 10th and 10th class students across Tamil Nadu are over The task of editing the farewell letter has begun.

Of these general examinations, 1.95 lakh belong to Class 12 and 2.25 lakh belong to Class 10.

A total of 6,79,467 students out of 2.58 lakh students of Class XII did not appear for the examination.

Subsequently, students who did not appear for the general examination were allowed to appear for the sub-examination To all District Primary Education Officers seeking action Has been ordered.

In this case, the 10th class general examination will be held in July for students who have not written Primary education for head teachers as action must be taken to participate in re-examination Officers have ordered. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக மறுதேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 10. 11. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்த பொதுத் தேர்வுகளில், 12ஆம் வகுப்பை சேர்ந்த 1.95 லட்சம், 10ஆம் வகுப்பை சேர்ந்த 2.25 லட்சம், 11ஆம் வகுப்பை சேர்ந்த 2.58 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 6,79,467 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Wednesday, June 01, 2022

June 01, 2022

+1, +2 விடைத்தாள் திருத்தும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

சேலத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி உள்ளது.

இந்நிலையில், சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், திடீரென பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கமாக, ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில், விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஒதுக்கப்படும் என்றும், தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விருப்பப்படும் மையங்கள் ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

June 01, 2022

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு :விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்குகிறது.

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது.

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்க உள்ளதால் தேர்வு முடிவுகள் விரைந்து அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

Wednesday, May 18, 2022

May 18, 2022

பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு.

ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்

கொரோனாவிற்கு பின் நடந்த அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ல் கொரோனா பரவல் துவங்கியது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக பள்ளி திறக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். பள்ளி விடுமுறையால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பல மாணவர்கள் பிழைப்பிற்காக பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

தற்போது நடக்கும் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கை 1.18 லட்சமாக உள்ளது. இதன்படி 10 ம் வகுப்பு படிக்கும்12 லட்சம் பேரில் 42,000, பிளஸ் 1 படிக்கும் 9 லட்சம் பேரில் 43,533,பிளஸ் 2ல் 10 லட்சம் பேரில்32,600என 1 லட்சத்து 18 ஆயிரத்து 133 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

கொரோனாவிற்கு முன்னர் வரை நடந்த அரசு தேர்வுகளில் இறப்பு, இடைநிற்றல் என சொற்ப அளவிலேயே மாணவர் 'ஆப்சென்ட்' இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு எழுத தகுதி பெற்ற 31 லட்சம் பேரில் 1.18 லட்சம் மாணவர் 'ஆப்சென்ட்' ஆனது கல்வித்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்கள் விபரம், வேலைக்கு சென்றால் அவர்களை பள்ளிக்கு அழைத்து வருதல், பிற காரணங்களை அறிந்து பள்ளிக்கு வரவைத்தல் பணிகளுக்காக கலெக்டர்கள் மூலம் அரசு விபரத்தை சேகரிக்கிறது, என்றார்.

Thursday, April 21, 2022

April 21, 2022

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - - மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது அறிவுரைகள் வழங்குவது சார்ந்து.
நடைபெறவுள்ள மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 22.04.2022 பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ / மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

Total Pageviews

Search This Blog