ஒரே கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம்; ஐஐடி மெட்ராஸ் சாதனை
2018-19ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும். 14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் இதில் அடங்கும். நடப்பு ஆண்டில் 61 எம்பிஏ மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், ஐஐடி மெட்ராஸின் மேலாண்மைக் கல்வித்துறை 100 விழுக்காடு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. 2021-22ம் ஆண்டில் நடந்த வளாக வேலைவாய்ப்புகளை தேர்வு செய்தவர்களில் 80 விழுக்காடு மாணவர்கள் இதே ஆண்டில் பணிபுரிவதற்கு நியமனங்களை பெற்றுள்ளனர்.