Breaking

Showing posts with label EMPLOYMENT News. Show all posts
Showing posts with label EMPLOYMENT News. Show all posts

Wednesday, March 15, 2023

March 15, 2023

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 18.03.23

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 18ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றன.

இந்த முகாம் பற்றி, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Wednesday, March 01, 2023

March 01, 2023

உயர்நீதிமன்றத்தில் குரூப்-பி வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.3.2023


உயர்நீதிமன்றத்தில் குரூப்-பி வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பாட்னா உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் (குரூப்-பி) பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant (Group-B Post)

காலியிடங்கள்: 550 

சம்பளம்: ரூ.44,900 - ரூ.1,42,400

வயது வரம்பு: 1.1.2023 தேதியின் படி 18 முதல் 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் குறைந்தது 6 மாத கால கம்பியூட்டர் அப்ளிகேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கொள்குறிவகை கேள்விகளைக் கொண்ட முதற்கட்டத்தேர்வு, விரிவான விடையளிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்ட இரண்டாம் கட்டத்தேர்வு, கம்பியூட்டர் திறனறிவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதற்கட்டத்தேர்வு 30.04.2023 அன்று பிகாரில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.patnahighcourt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.3.2023

Friday, February 24, 2023

February 24, 2023

தெற்கு ரயில்வே - சென்னை கோட்டம் - வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பபிக்க 14.03.2023

தெற்கு ரயில்வே - சென்னை கோட்டம்

முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர், தெற்கு ரயில்வே, சென்னைகோட்டம், சென்னை - 600003 அவர்கள், மேதகு இந்தியக்குடியரசுத் தலைவரின் சார்பிலும் அவருக்காகவும் வ. உ. சி. நகர் (VOC), நந்தியம்பாக்கம் (NPKM), புட்லூர் (PTLR), செஞ்சிபனம்பாக்கம் (SPAM), பரனூர் (PWU) மற்றும் | அன்வர்த்திகான்பேட்டை (AVN) ரயில் நிலையத்தில் நிறுத்த முகவர் (ஹால்ட் ஏஜன்ட்) நியமனம் செய்வதற்காக, விண்ணப்பங்களை வரவேற்கிறார்.

வ. எண். 1 முதல் 6 வரை உள்ளவற்றுக்கு: காலம்: 5 ஆண்டுகள்.

பிணை வைப்புத் தொகை: இல்லை.

விண்ணப்ப படிவக் கட்டணம்: இல்லை.

விண்ணப்ப படிவத்தை வாங்கிக் கொள்ள வேண்டிய அலுவலகத்தின் முகவரி: கோட்ட ரயில்வே மேலாளர் / வர்த்தகம், என்ஜிஓ இணைப்பு கட்டிடம், 2வது மாடி, பூங்கா நகர், தெற்கு ரயில்வே, சென்னை - 600 003.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேதியும் நேரமும் 14.03.2023 (செவ்வாய்கிழமை) அன்று 10.00 மணி முதல் 14.00 மணி வரை

விண்ணப்ப படிவம் திறக்கப்படுதல்: 14.03.2023 (செவ்வாய்கிழமை) அன்று 14.30 .

விரிவான தகவல்கள் காணக்கூடிய இணையதள www.sr.indianrailways.gov.in

முகவரி:

விண்ணப்பங்கள் பெறப்படும் தேதியும் விண்ணப்பம் திறக்கப்படும் தேதியும் பின்னர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டால் அவை அதற்கடுத்த வேலை நாளில் நடைபெறும்.

Thursday, February 09, 2023

February 09, 2023

சிவில் முடித்தவர்களுக்கு வாய்ப்பு... 1083 பணியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.3.2023

சிவில் முடித்தவர்களுக்கு வாய்ப்பு... 1083 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு மார்ச் 4 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 
பணி: பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் 
காலியிடங்கள்: 794

பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 236

பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 18

பணி: வரைவாளர் நிலை.III
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400

பணி: முதலாள்.நிலை.II
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 32, 37 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.3.2023

Monday, January 02, 2023

January 02, 2023

அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.1.2023

அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான Skilled Artisan பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

பணி: Skilled Artisan

காலியிடங்கள்: 7

துறைவாரியான காலிடங்கள் விவரம்:  
1. M.V. Mechanic (Skilled) - 4
2. M.V. Electrician (Skilled) - 1
3. Copper & Tinsmith (Skilled) - 1
4. Upholster (Skilled) - 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

எம்.வி.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி, 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indiapost.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.1.2023

Friday, December 30, 2022

December 30, 2022

Today Education And Employment News - 30.12.2022 ( 202 Pages ) - PDF

Today Education And Employment News - 30.12.2022 ( 202 Pages )
202-பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு....

இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் - 30-12-2022

Today Education And Employment News ( 30.12.2022 -

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, December 20, 2022

December 20, 2022

டெக்னிக்கல் உதவியாளர் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம்: மாதம் ரூ.21.000

டெக்னிக்கல் உதவியாளர் வேலை: வேதியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய மசாலா வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு வேதியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். 27/2022

பணி மற்றும் இதர விவரங்கள் பார்ப்போம்: 

நிறுவனம்: இந்திய மசாலா வாரியம்(Spieces Board India)

பணி: டெக்னிக்கல் உதவியாளர் (Technical Assistant)

சம்பளம்: மாதம் ரூ.21.000

தகுதி: வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் மண் பகுப்பாய்வு, வேளாண் பரிசோதனை மற்றும் கள நிலையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Indian Cardamom Research Institute (ICRI), Spices Board, Myladumpara, Idukki District, Kerala 685 553 (Ph: 04868- 237206, 237207)

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2022 அன்று காலை 10 மணி நேர்முகத் தேர்வு தொடங்கி நடைபெறும்.

Saturday, December 17, 2022

December 17, 2022

ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.01.2023


ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஈப்பு ஓட்டுநர் - 1

சம்பளம்: மாதம் 19,500 - 62,000

வயதுவரம்பு: 01.7.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 42 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதள www.ncs.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணை்த்து 
விண்ணப்பிக்க வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முவரி: 
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சி பிரிவு) 3 ஆவது தளம், திருச்சிராப்பள்ளி-620 001


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.1.2023 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
December 17, 2022

TNPSC மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு பணி

டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்காவது பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நான்காம் தொகுதி தோ்வுகள் தவிா்த்து, ஓராண்டு முழுவதும் 10 தோ்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தோ்வுகளுக்கான கல்வித் தகுதிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். ஒவ்வோா் ஆண்டும் இத்தகைய கல்வித்தகுதியை பெற்று கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவா்களின் எண்ணிக்கை சுமாா் 20 லட்சம். அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 67.61 லட்சம். அவா்களில் ஒரு சதவீதத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட, 68 ஆயிரம் பேருக்கு அரசுப் பணிகள் வழங்க வேண்டும்.

ஆனால், அடுத்த ஆண்டில் 10 போட்டித் தோ்வுகள் மூலம் 1754 பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை கிடைக்கும். தொகுதி நான்கு தோ்வின் மூலம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தமாக 7 ஆயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கிடைக்காது.

எனவே, தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

Thursday, November 03, 2022

November 03, 2022

வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி காலி பணியிடங்கள் - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022


வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள ஐ.டி. ஆபீசர், வேளாண் பீல்டு ஆபீசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர், பணியாளர் அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி என 710 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது வங்கி பணியாளர் தேர்வாணையம்(ஐபிபிஎஸ்) இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 710

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: I.T. Officer (Scale-I) - 44 
தகுதி: கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகியவற்றில் 4 ஆண்டு பொறியியல், தொழில்நுட்பப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Agricultural Field Officer (Scale I) - 516
தகுதி: வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், பால்வள அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, வேளாண்மை ஆகியவற்றில் 4 ஆண்டு பட்டம். சந்தைப்படுத்தல், கூட்டுறவு - வங்கி, வேளாண்-வனவியல், வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், உணவு அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், பட்டு வளர்ப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Rajbhasha Adhikarai (Scale I) - 25
தகுதி: ஹிந்தியில் முதுகலைப் பட்டம் அல்லது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Law Officer (Scale I) - 10 
தகுதி: சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் (எல்எல்பி) பெற்று பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: HR/Personnel Officer (Scale I) - 15
தகுதி: இளங்கலைப் பட்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பணியாளர் மேலாண்மை, தொழில்துறை உறவுகள், சமூகப் பணி, தொழிலாளர் சட்டம் ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Marketing Officer (Scale I) - 100
தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது மார்க்கெட்டிங்கி பிரிவில் முழுநேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது மார்க்கெட்டிங்க் பிரிவில் இரண்டு ஆண்டு முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21.11.2022 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சார்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டண்ததை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். இங்கே கிளிக் செய்யவும்.

November 03, 2022

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில்(என்டிபிசி) நிரப்பப்பட உள்ள 864 இன்ஜினியயர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: இன்ஜினியர் எக்சியூட்டிவ்

காலியிடங்கள்: 864

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ல், மெக்கானிக்கல், இன்ஸ்ஸ்ருமென்டேசன், மைனிங் பிரிவுகளில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2022 நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: careers.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022

Thursday, October 27, 2022

October 27, 2022

தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வாளர் வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2022

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மீன்வளத்துறையில் ஆய்வாளர் வேலை!

தமிழக அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர், துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுயானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 88

பணி: ஆய்வாளர் - 64

தகுதி: மீன்வள அறிவியல் பிரிவில் பட்டம் அல்லது விலங்கியல், உயிரியல், கடலோர மீன்வளர்ப்பு, கடலியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: துணை ஆய்வாளர் - 24

தகுதி: மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ அல்லது விலங்கியல், மீன்வள அறிவியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளும், மற்ற பிரிவினக்கு வயதுவரம்பில் உச்சவரம்பில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: நிரந்தர பதிவுக்கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2022

மேலும் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
October 27, 2022

கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நவம்பர் 10 விண்ணப்பிக்க கடைசி தேதி

கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை.

பி.எட் தகுதியுடன் பி.இ(கணினி அறிவியல்) அல்லது பி.எஸ்சி(கணினி அறிவியல்) அல்லது பிசிஏ அல்லது பி.எஸ்சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம், சேலம் - 636005 என்ற முகவரியில் நவம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
October 27, 2022

TNPSC மூலம் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் சுகாதாரத்துறை அலுவலர் பணிக்கான அறிவிப்பாண வெளியீடு

TNPSC மூலம் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் சுகாதாரத்துறை அலுவலர் பணிக்கான அறிவிப்பாணை வெளியீடு!

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு!

TNPSC மூலம் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் சுகாதார அலுவலர் பணிக்கான அறிவிப்பாணை வெளியீடு! தகுதி உள்ளவர்கள் நவம்பர் 19ம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்!

Wednesday, October 26, 2022

October 26, 2022

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள 23 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Head Constable (Education and Stream Counsellor)

காலியிடங்கள்: 23 (ஆண்கள் - 20, பெண்கள்-3)

வயதுவரம்பு: 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022

மேலும் விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Saturday, October 15, 2022

October 15, 2022

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்: ஆட்சியர்களுக்கு கடிதம்

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்: ஆட்சியர்களுக்கு கடிதம்

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வறுமை, குடும்பை சூழல், நிதிப் பற்றாக்குறைஆல் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடரவில்லை.

மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021-22 ஆம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள்ள மற்றும் அவர்களது பெற்றோருக்கான வழிகாட்டல்சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நெறிப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog