salary hike
April 01, 2024
Showing posts with label Pay Hike. Show all posts

Monday, April 01, 2024
Monday, February 12, 2024
Pay Hike
February 12, 2024
சமக்ரசிஷா ஊழியர்களுக்கு 5 % ஊதிய உயர்வு
சமக்ரசிஷா ஊழியர்களுக்கு 5 % ஊதிய உயர்வு 5 % pay hike for Samakrasisha employees
சென்னை, பிப். 11: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்ரசிஷா)கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோக்ராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உத வியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.
நிகழாண்டு பிப்.1-ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமல் படுத்தப்படும். அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகர் கள், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது என அந்த சுற்றறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
Monday, September 04, 2023
Pay Hike
September 04, 2023
ஆசிரியர் தினம் - ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழகம் முழுவதும் 164 அரசு கல்லூரிகளில் உள்ள 7,374 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு;
அரசு பொறியல் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தி உத்தரவு;
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.20,000ஆக உயர்த்தி உத்தரவு தமிழக கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர் களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர் மதிப்பூதியம் ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ஆக உயர்வு!
அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ20 ஆயிரம் ஆக உயர்வு!
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ஆக உயர்வு!

Monday, February 06, 2023
Pay Hike
February 06, 2023
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?

புதுடில்லி: மத்திய அரசு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விலைவாசி உயர்வை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்பட்டு, உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ௩௮ சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கடந்த முறை திருத்தமானது, செப்டம்பர் ௨௮ல் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை ௧ முதல் அமல்படுத்தப்பட்டது. இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலர் சிவகோபால் மிஷ்ரா கூறியதாவது:
தொழிற்சாலை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு, ௨௦௨௩, ஜன., ௩௧ல் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில், ௪.௨௩ சதவீதம் அகவிலைப்படி அதிகரிக்க வேண்டும். எனவே, அகவிலைப்படி உயர்வானது நான்கு சதவீதமாக இருக்கும். அதாவது, நடப்பு ௩௮ சதவீதத்தில் இருந்து ௪௨ சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த உயர்வு, ஜன., ௧ முதல் அமல்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, January 01, 2023
Pay Hike
January 01, 2023
திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2021 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிப்பு
திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2021 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிப்பு - 18-month reduction in salary hike from June 2022 after DMK takes office
திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து நிலுவையிலுள்ள 18 மாத கால அகவிலைப்படியை, அரசு நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (Tamil Nadu Graduate Teachers Association) பொதுச்செயலளார் பேட்ரிக் ரெய்மாண்ட் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2022 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிப்பு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலளார் பேட்ரிக் ரெய்மாண்ட் இன்று (ஜன.1) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சம வேலைக்கு சம ஊதியத்திற்காக (Equal Pay for equal Work) போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் (TN Teachers Hunger strike in Chennai) கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கு நிதித்துறை செயலாளர் (செலவினம்) தலைமையில் தமிழ்நாடு அரசு, குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், குழுவிற்கான கால வரையறை நிர்ணயம் செய்து நியாயமான கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து, மேலும் கால தாமதம் செய்யாமல் தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை உணர்ந்து 2009-ல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். அகவிலைப்படியில் பாரபட்சம்:
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு ஜனவரி 2023 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு பின்னர், ஒன்றிய அரசு ஜூலை 2021 முதல் அகவிலைப் படி உயர்வு வழங்கியது. தமிழ்நாடு அரசு ஜூலை 2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி உயர்வை ஏப்ரல் 2022 முதல் வழங்கப்படும் என அறிவித்தது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் இருந்து வந்த கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்தார். அதில் 6 மாதம் அகவிலைப்படி பறிக்கப்பட்டது.
மேலும் ஒன்றிய அரசு, ஜனவரி 2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வினை வழங்கியது. இவ்வாறு, தமிழ்நாடு அரசு ஆறு மாதங்கள் காலம் தாமதமாக 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்கியது. இதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆறு மாதம் அகவிலைப் படி உயர்வினை இழந்தார்கள்.ஏமாற்றமான அறிவிப்பு: கடந்த 2022 ஜூலை மாதம் ஒன்றிய அரசின் ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வை வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி உயர்வினை தற்பொழுது 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நலனைக் காக்கும் அரசு, கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று சொல்கிற தமிழ்நாடு அரசு 3 முறை அகவிலைப்படி அறிவிப்பில் 18 மாத காலமாக அகவிலைப் படி உயர்வினை பறித்து இருக்கிறது.கரோனா தொற்றுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை உயர்ந்துள்ளது என நிதியமைச்சர் கூறிவரும் நிலையில், கரோனா நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2022 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, தமிழ்நாடு அரசு நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.

Thursday, September 29, 2022
Tamil Nadu Govt Servant
September 29, 2022
01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டுதல் சார்பாக
01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டுதல் சார்பாக - On behalf of Tamil Nadu Govt Servant teachers requesting immediate payment of 4% discount from 01.07.2022 with advance date and balance
பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம்,
சென்னை -600 009
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வணக்கம்.
பொருள் - 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டுதல் சார்பாக
தங்களின் தலைமையிலான தமிழக(திமுக) அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுநாள் வரை தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு உரிய காலத்தில் முன் தேதியிட்டு வழங்கப்படவில்லை.இதனால் தங்கள் தலைமையிலான தமிழக (திமுக) அமைய வேண்டும் என வாக்களி்த்த தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ர்கள் மிகுந்த வருத்தத்திலும் ஆதங்கத்திலும் உள்ளனர்.விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு அறிவித்துள்ளது.ஆகவே தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ர்களுக்கும் 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன். கால தாமதமின்றி அரசாணை வெளியிட்டு வழங்கிட தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை சார்பில் தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தங்கள் தலைமையிலான அரசு ,அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ர்களின் நலன் காக்கும் அரசு என இன்னும் நம்புகிறோம்,ஆனால் தங்கள் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 1 1/2 ஆண்டு ஆட்சியில் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ர்களின் அடிப்படை உரிமையான அகவிலைப்படி உயர்வு உரிய காலத்தில் தர மறுக்கப்பட்டதும் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை பறிக்கப்பட்டதும் நீங்காத வடுவாக எங்கள் உள்ளங்களில் இடம்பெற்றுவிட்டது. "தாமதிக்கப்பட்ட நீதி,மறுக்கப்பட்ட நீதியாகும்" எனும் முதுமொழியை தங்கள் தலைமையிலான ஆட்சி எங்களுக்கு உணர்த்தி வருகிறது.தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கிடவும்,தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் அச்சாணியாகவும் விளங்கும், அயராது உழைக்கும் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களின் அடிப்படை உரிமையான அகவிலைப்படி உயர்வு 4% ஐ உடனே 01.07.2022 முதல் முன் தேதியிட்டு நிலுவைத.தொகையுடன் வழங்கிட தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை உரிய காலத்தில் வழங்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதையும்,அகவிலைப்படி நிலுவைத்தொகையினை பறிக்கும் செயலில் ஈடுபடவேண்டாம் எனவும் தங்களை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்
இவண்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை
மாநில அமைப்பு
Wednesday, September 28, 2022
Pay Hike
September 28, 2022
அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் - Central Cabinet approves hike in allowances today
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜூலை - டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்
Friday, September 09, 2022
What is incentive increment?
September 09, 2022
3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு
Order of the Joint Director of School Education seeking details of those who have filed a case for the 3rd Incentive Pay Hike - It is also ordered that the 3rd Incentive Pay Hike should not be allowed in the future.
3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)