Breaking

Showing posts with label Professional Theater Companies. Show all posts
Showing posts with label Professional Theater Companies. Show all posts

Saturday, August 20, 2022

August 20, 2022

தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி - விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக அரசின் கன்னடம் மற்றும் கலாசாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாடகக்கலையை ஊக்குவித்து, அதைக் காப்பாற்றும் நோக்கத்தில் தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை கன்னடம் மற்றும் கலாசாரத்துறை செயல்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதியுதவியை பெறத் தகுதியான தொழில்முறை நாடக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடக நிறுவனத்தை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இயக்குநா், கன்னடம் மற்றும் கலாசாரத்துறை, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு என்றமுகவரிக்கு செப்.10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ய்ஹக்ஹள்ண்ழ்ண்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog