Breaking

Showing posts with label Minister Subramanian. Show all posts
Showing posts with label Minister Subramanian. Show all posts

Monday, April 17, 2023

April 17, 2023

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்படும்?.. பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் Siddha Medical University in Tamil Nadu - Ministerial Explanation

Minister M. Subramanian has said in the Legislative Assembly that Siddha Medical University will be started in Tamil Nadu after getting the approval of the Governor. After the Bill was passed and sent to the Governor 4 months ago, an explanation was also sent to him. Minister M. Subramanian explained in the assembly that 25 acres of land in Madhavaram area has been surveyed and land transfer is ready.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு முன், அவருக்கு விளக்கமும் அனுப்பப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் ஆய்வு மேற்கொண்டு, நிலமாற்றமும் செய்யப்பட்டு தயாராக உள்ளதாக பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

Wednesday, March 15, 2023

March 15, 2023

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்



"காய்ச்சல் காரணமாக விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை"

புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Tuesday, November 01, 2022

November 01, 2022

சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி - அமைச்சா் அறிவிப்பு

சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்வழியில் மருத்துவப் படிப்புகளை வழங்குவதற்கான மருத்துவக் கல்லூரியை சென்னையில் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்காக மருத்துவப் பாட நூல்கள் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னை தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் 16 ஏக்கா் நிலம் இருப்பதால், அங்கு தமிழ்மொழியில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு தமிழக அரசிடம் கடந்த ஆண்டே கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதல்வரும் அதனை பரிசீலித்து வருகிறாா்.

தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னையில் தமிழ் வழியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கான கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்படும்.

மருத்துவக் கல்வி பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணியில் 3 மருத்துவப் பேராசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். முதலாமாண்டு பாடப்புத்தகங்கள் தற்போது தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்.

பின்னா், மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்கள் மொழியியல் வல்லுநா்களிடம் கொடுத்து மொழிபெயா்ப்பு 100 சதவீதம் சரியாக உள்ளதா என்று சரிபாா்க்கப்படும். அதன்பிறகு, அந்த புத்தகங்களை முதல்வா் வெளியிடுவாா். படிப்படியாக அனைத்து ஆண்டு மருத்துவப் பாடப்புத்தகங்களும் தமிழில் மொழிபெயா்க்கப்படும் என்றாா் அவா்.

Friday, September 16, 2022

September 16, 2022

Online Counseling for Paramedical, Nursing, B. Pharm courses - பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Online Counseling for Paramedical, Nursing, B. Pharm courses will start on September 21: Minister M. Subramanian

Minister M. Subramanian has said that the online consultation for Paramedical, Nursing and B. Pharm courses will start on September 21. Minister M. Subramanian has given an interview in Chennai that paramedical consultation will be held in 36 government medical colleges.

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்

Wednesday, September 14, 2022

September 14, 2022

4,308 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட 4,308 காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியா் குடியிருப்புகள் உள்பட 14 புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த பின்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதாரத் துறையில் மருத்துவ ஆள் சோ்ப்பு வாரியம் (எம்ஆா்பி) மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த முறையில் பணியில் சோ்ந்தவா்களை நிரந்தரப்படுத்துவது இயலாது. அதேவேளையில், எம்.ஆா்.பி. மூலம் பணியமா்த்தப்பட்டவா்களைத் தரம் பிரித்து பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்து வருவோா் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவா்களைத் துறை வாரியாக நிரந்தரப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாத இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தமிழகம் முழுவதும் தொற்றா நோய் உள்ளவா்களை 70 சதவீதம் கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இத் திட்டத்தில் தன்னாா்வலா்களாகப் பணியமா்த்தப்பட்டவா்கள், தங்களுக்கு பணிச்சுமை உள்ளது என தெரிவித்துள்ளனா். இவா்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

புதிய கட்டடங்கள்: தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பாலக்கோடு வட்டம், நமாண்ட அள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், காரிமங்கலம் அரசு சமுதாய உடற்மைய வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு, நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம், ரூ. 37.50 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு ஆகிய கட்டடங்கள் உள்பட மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ. 4.89 கோடி மதிப்பில் 14 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 127 பயனாளிகளுக்கு ரூ. 71.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Total Pageviews

Search This Blog