IIT
January 13, 2026
Showing posts with label IIT. Show all posts

Tuesday, January 13, 2026
Thursday, February 13, 2025
Tuesday, September 24, 2024
Wednesday, June 12, 2024
Thursday, May 30, 2024
Thursday, April 18, 2024
Saturday, April 13, 2024
Thursday, April 11, 2024
Monday, April 08, 2024
Saturday, March 23, 2024
Tuesday, March 19, 2024
Monday, February 19, 2024
Wednesday, February 14, 2024
IIT Chennai students
February 14, 2024
சென்னை ஐஐடி-யின் தான்சானியா கிளையில் பி.எஸ்., எம்.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
சென்னை ஐஐடி-யின் தான்சானியா கிளையில் பி.எஸ்., எம்.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! B.S., M.Tech., Tanzania branch of IIT, Chennai. Apply for courses!
சென்னை ஐஐடி-யின் முதலாவது வெளிநாட்டு வளாகமான சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தில் பிஎஸ் மற்றும் எம்டெக் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடி சான்சிபார் 2024-25 கல்வியாண்டுக்கான இரண்டாவது தொகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்கப்படும் இரு பாடத்திட்டங்கள்- பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, எம்டெக் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (B.S. in Data Science and AI & M.Tech in Data Science and AI). பிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 15 ஏப்ரல் 2024. ஸ்கிரீனிங் தேர்வு 9 ஜூன் 2024 அன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை). எம்டெக் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 மார்ச் 2024. தேர்வு செயல்முறையின் பல்வேறு நிலைகள், மதிப்பீட்டின் விவரங்கள், ஸ்கிரீனிங் சோதனை முறை, கட்டண அமைப்பு, முக்கிய நாட்கள், விரிவான பாடத்திட்டம், தகுதி அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு வரங்களை https://www.iitmz.ac.in/IITMZST_Information_Brochure_2024_v1.1.pdf என்ற இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இரு பாடப்பிரிவுகளின் தனித்துவ அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்த சென்னை ஐஐடி சான்சிபாரின் பொறியியல் - அறிவியல் பள்ளிப் பொறுப்பு இயக்குநர் மற்றும் டீன் பேராசிரியை ப்ரீத்தி அகலாயம் கூறும்போது, “ஐஐடிஎம் சான்சிபாரில் இருந்து கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். இப்பிராந்தியத்தில் கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவரவும், திறன் அடிப்படையிலான கல்வியில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களை இணைக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐஐடி சான்சிபாரில் இரண்டாம் தொகுப்பு மாணவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதோடு, விண்ணப்பம், தேர்வு செயல்முறைகளில் அவர்கள் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தேர்வு மையங்களைச் சேர்த்து விரிவுபடுத்த இக்கல்வி நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறு பிராந்தியங்கள், மத்திய கிழக்கு, தெற்காசியா ஆகிய பகுதிகளில் உள்ள 19 சர்வதேச மையங்களில் ஆன்லைன் ஸ்கிரீனிங் சோதனைகள் நடைபெறும். உள்நாட்டு மையங்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் அணுகும் வகையில் தேர்வு மையங்களை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது. 2023-ல் சான்சிபார் வளாகம் தொடங்கப்பட்டபின் இந்தியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியிலும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இந்த பிராந்தியத்தின் கல்விமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தவும், திறன் அடிப்படையிலான கல்விக்கான தேடலில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதையும் இக்கல்வி நிறுவனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை: இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரிவான மூன்று நிலைகளைக் கொண்டதாகும். விண்ணப்பிப்போரின் குறைந்தபட்ச கல்வித் தகுதி மட்டுமின்றி, விண்ணப்பதாரர்களின் இணைப் பாடத்திட்டம், பாடநெறியைக் கடந்த நற்சான்றிதழ்கள் போன்றவையும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த துணைத்திறன்கள் 10 சதவீத அளவுக்கு கணக்கிடப்பட்டு, தேர்வு முறையின் முதல் கட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். இரண்டாம் கட்டமாக, ஸ்கிரீனிங் சோதனை (IITMZST) மூலம் பல்வேறு பாடங்களில் மாணவர்களின் திறன்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணக்கிடப்படுகின்றன. முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இந்த மூன்றாம் கட்ட சோதனை 30 சதவீத அளவுக்கு கணக்கில் கொள்ளப்படும்.
பிஎஸ் படிப்புக்கான தேர்வுமுறை ஆங்கிலம், புரிதல், பகுப்பாய்வுத் திறன், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். ஸ்கிரீனிங் தேர்வுக்கு அதிகபட்சமாக 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். எம்டெக் படிப்பிற்கான ஸ்கிரீனிங் தேர்வு 31 மார்ச் 2024 அன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை) நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம் தொழில்நுட்பத் திறனாய்வு, பொதுத் திறனாய்வு (Technical Aptitude and General Aptitude) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஸ்கிரீனிங் தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண் 60. தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்

Friday, February 09, 2024
IIT Chennai students
February 09, 2024
சென்னை ஐஐடி-யில் பயிலும் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் 100% நிதி உதவி

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும், சமூகப் பொறுப்புணர்வு நிதி கூட்டாளர்களும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு 100 சதவீத நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக வழங்க முன்வந்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி, மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்காக அளித்துவரும் கணக்கிலடங்கா நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை ஆதரவுகளில் 'மெரிட்-கம்-மீன்ஸ்' (MCM) உதவித் தொகையும் ஒன்று. எஸ்சி/எஸ்டி மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்தாலும் அவர்களின் பெற்றோரின் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின்கீழ் இந்திய அரசு அளித்துவரும் மூன்றில் இரு பங்கு கல்விக் கட்டணத் தள்ளுபடியுடன் 'எம்சிஎம்' கல்வி உதவித் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் / பொதுப்பிரிவினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தகுதியுள்ள பிடெக்/ இரட்டைப் பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்குப் பெறுவார்கள். இந்த ஆதரவின் மூலம் மாணவர்கள் தங்களின் பணப்பிரச்சினைகள், கல்விக் கடன்கள் பற்றிய கவலைகள் இன்றி படிப்பிலும் எதிர்காலக் கல்வியைத் தொடருவதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.
இத்தகைய நிதியுதவியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "தேவையுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு இயன்றவரை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதனை செயல்படுத்த உதவிய நன்கொடையாளர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.
இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 490 மாணவர்களுக்கு ரூ.3.26 கோடி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டான 2023-24ல் 495 மாணவர்களுக்கு ரூ.3.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையான ரூ.66,667 இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கல்வியாண்டின் இரு செமஸ்டர்களுக்கும் சரிபாதியாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் நலனுக்கான பங்களிப்புக்காக முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்த சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, "நிதித் தேவையுள்ள எந்த மாணவரும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு முழு கல்வித்தொகை பெறுவதில் விடுபடவில்லை என்பதில் எங்களது அலுவலகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இத்திட்டத்தை செயல்படுத்த ஆதரவளித்த அனைத்து முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனக் கூட்டாளர்களுக்கு மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.
பணபிரச்சினையால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து விடுபட எம்சிஎம் கல்வி உதவித்தொகை எவ்வாறு உதவியது என்பது குறித்து அதனால் பயன்பெற்ற சென்னை ஐஐடி மாணவர் ஜி.அக்சித் கூறுகையில், "எனது குடும்பத்தில் முறையான பொறியியல் பட்டம் பெற்ற முதலாவது நபர் நான்தான். இதனால் என் குடும்பம் பெருமையடைந்தது. எனது குடும்பத்திற்கு எவ்வித சுமையையும் ஏற்படுத்தாமல் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணத்தை செலுத்த சென்னை ஐஐடி-ன் கல்வி உதவித்தொகைகள் உதவுகின்றன” என்றார்.
மாணவி எஸ்.சாய்ஸ்ரீ கூறும்போது, "சென்னை ஐஐடி-ல் என்னை சேர்த்தே ஆக வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு முன்பே அவர் இங்குதான் பணிபுரிந்து வந்தார். தினக்கூலியாக வேலை செய்தபோது ஐஐடி மெட்ராஸ்-ஐ சுற்றிப்பார்த்த அவர், இது மிகவும் மதிப்புவாய்ந்த கல்வி நிறுவனம் என்பதைக் கண்டார். எனவே, என்னை இங்கே படிக்க வைத்தே தீருவது என்பது அவரது கனவாக இருந்தது. அந்தக் கனவுதான் உண்மையிலேயே சென்னை ஐஐடி-ல் நான் நுழைவதற்கும் காரணமாக அமைந்தது. பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்ற விவரங்களை சென்னை ஐஐடி இணையதளத்தில் பார்வையிட்டபோது, முன்னாள் மாணவர்களின் கல்வி உதவித்தொகை வாயிலாக ஏசிஆர் அலுவலகம் கட்டண விலக்கு பெற்றுத் தருவது தெரிய வந்தது. இங்கு நான் சேர்ந்தபின், இந்த கல்வி உதவித்தொகை குறித்து இமெயில் மூலம் எனக்குத் தகவல் வந்தது” என்றார். அனீஷ் அமுலோஜு கூறுகையில், “தற்போது நிதிச்சுமை நீங்கிவிட்டதால் எனது படிப்புகள், இலக்குகள், கனவுகள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கவும், கவனம் செலுத்தவும் முடிகிறது. அத்துடன் என் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் குறித்து சிந்திக்க முடிகிறது” எனக் குறிப்பிட்டார். சோஹம் ஷா கூறும்போது, “முதலில் கல்வி உதவித்தொகை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாதபோது, அதுபற்றி தேடத் தொடங்கலாம் என சிந்தித்தோம். ஆனால், உதவித் தொகை பற்றிய மின்னஞ்சல் வந்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கல்வி உதவித் தொகை கிடைத்தன் மூலம் படிப்பைப் பற்றியும், ஹார்வர்டு போன்ற எந்த கல்வி நிறுவனத்திலும் மேற்படிப்பைத் தொடருவது பற்றியும் சிந்திக்கும்போது குடும்பத்தின் பணப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தக் கூடாது, மாறாக கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தது. எனது வேலையை நான் முறையாக செய்யும் பட்சத்தில், மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் போன்ற எத்தனையோ பேர் எனக்கும், பிற மாணவர்களுக்கும் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி-ல் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் கல்வியைத் தொடரும் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஃபெலோஷிப் வடிவில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவரவர் கல்வித்திறன் அடிப்படையில் முன்னாள் மாணவர்களின் நிதியுதவித் தொகை கிடைக்கும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-ல் முழு கல்விக் கட்டணத் தள்ளுபடி உண்டு. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ள எஸ்சி/எஸ்டி மாணவர்கள் எம்.ஏ. பாடத்திட்டத்தில் சேரும்போது, அவர்களுக்கு இலவச மெஸ் வசதி, மாதம் ரூ.250 பாக்கெட் அலவன்ஸ், கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கான வாடகை ஆகியவற்றை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், ரூ. 4.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ள எம்.ஏ. பாடத்திட்ட மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு தகுதி கல்வி உதவித்தொகையும் (Merit Scholarship) வழங்கப்பட்டது. இதுதவிர, சென்னை ஐஐடி பிடெக் பாடத்திட்டத்தில் சிறந்த மாணவர்களுக்கு NCERT, மத்திய-மாநில அரசுகளால் அனுமதிக்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கல்வி உதவித்தொகை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering - GATE) மூலம் எம்.டெக் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பகுதிநேர கற்பித்தல் உதவியாளர்கள் (HTTA) என்ற முறையில் மாதந்தோறும் ரூ.12,400 வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தகுதி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.
பொறியியல் முழுநேர பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கப்படும் கல்வியாளர்களுக்கு பகுதிநேர கற்பித்தல்/ஆராய்ச்சி உதவியாளர்கள் (HTRA) என்ற முறையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.37,000 வீதமும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42,000 வீதமும் அனுமதிக்கப்படுகிறது. ஆராய்ச்சி அறிஞர்கள் சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்க நிதியுதவி வழங்கி இக்கல்வி நிறுவனம் ஊக்குவிக்கிறது. எம்.எஸ், பிஎச்டி கல்வியாளர்களுக்கு பதிவுக் கட்டணம் உள்பட ரூ.1,50,000 உச்சவரம்பாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

Wednesday, January 31, 2024
New syllabus
January 31, 2024
AI இளநிலை படிப்பு சென்னை ஐஐடி -யில் ஜூலை மாதம் தொடக்கம்
AI இளநிலை படிப்பு சென்னை ஐஐடி -யில் ஜூலை மாதம் தொடக்கம் AI Undergraduate course at IIT Chennai starting in July:
சென்னை ஐஐடியில் வாத்வானி தரவு அறிவியல்' மற்றும் செயற்கைநுண்ணறிவு' (ஏஐ) மையத்தை தொடங்குவதற்கான அறிமுக நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நிறுவனவளாகத்தில் நேற்று நடைபெற்றது.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, முதல்வர் மகேஷ் பஞ்சக்னுலா, ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில்தரவு அறிவியல் மற்றும் செயற்கைநுண்ணறிவு துறை அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த துறையின் அடுத்தகட்டவளர்ச்சிக்காக தற்போது ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக்டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, ரூ.110 கோடி நிதி அளித்திருக்கிறார்.
அடுத்து வரும் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிலே இந்த துறை முதலிடத்திலும், உலக அளவில் முதல் 5 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு.
இதையொட்டி தரவு அறிவியல்,செயற்கை நுண்ணறிவுத் துறையில்மருத்துவம், வேளாண்மை, உற்பத்திஉள்ளிட்டவைகளில் தனி கவனம்செலுத்தி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். சென்னை ஐஐடியில் ஏற்கெனவே பி.எஸ். தரவு அறிவியல் ஆன்லைன் படிப்பில் 25 ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், உலக அளவில் முதல்முறையாக இளநிலை படிப்புகளில் பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுஎன்ற படிப்பையும் ஜூலை மாதம்தொடங்க உள்ளோம். இந்த படிப்பானது போதிய அளவு வேலை வாய்ப்பை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இந்தப் படிப்புக்கான மாணவர்சேர்க்கை ஜேஇஇ நுழைவுத்தேர்வுவழியாகவே நடத்தப்படும். முதல்கட்டமாக 30 இடங்களுடன் இந்த படிப்புஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, முதுநிலை எம்.டெக். தரவு அறிவியல் - செயற்கை நுண்ணறிவு படிப்பும் தொடங்கப்படும். இதற்கான மாணவர்சேர்க்கை கேட் தேர்வு மூலம் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, November 28, 2023
SUSPENDED
November 28, 2023
ஆராய்ச்சி மாணவர் தற்கொலை - சென்னை ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்!
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம்.
மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
சென்னை ஐஐடி பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம்! சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் பேராசிரியர், மாணவரை உள்ளடக்கி 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மார்ச் 31ல் ஆராய்ச்சி மாணவர் சச்சின் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பேராசிரியர் ஆசிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவர்களின் பாதுகாப்பு, வளாகத்தில் நெறிசார்ந்த நடைமுறைகளை கண்காணிப்பது, மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது, கற்றலுக்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பான பொறுப்புகளை கையாள ஐபிஎஸ் அதிகாரி ஜி.திலகவதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 17, 2023
IIT
August 17, 2023
IIT மாணவர்கள் தற்கொலை: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!
சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின் குமார் கடந்த 31-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சைக்குஉள்ளானது.
இதில், மாணவரின் வழிகாட்டிப் பேராசிரியருக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைச் சென்னை ஐஐடி அமைத்தது. அந்தக் குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சபிதா, ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கீத்து உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
இந்தக் குழு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பல்வேறு கருத்துகளைப் பெற்றது. பல்வேறு கட்ட விசாரணைகளின் அடிப்படையில், 700 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை அந்தக் குழு தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த அறிக்கையை திலகவதி தலைமையிலான குழுவினர் ஐஐடி இயக்குநர் வீ.காமகோடியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்வதுடன், அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் உட்பட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த அறிக்கையை பொது வெளியில் வெளியிட்டு, தொடர் நடவடிக்கைகளை ஐஐடி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஐஐடி நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிறுவன தலைமை அந்த அறிக்கையை மறு ஆய்வு செய்து,கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கும். நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர், பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தப் பரிந்துரைகள் பொது வெளியில் பகிரங்கமாக வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.