Breaking

Showing posts with label SALARY/INCREMENT. Show all posts
Showing posts with label SALARY/INCREMENT. Show all posts

Wednesday, November 24, 2021

November 24, 2021

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பள பட்டியல் தயாரிப்பில் சிக்கல்

தமிழக அரசின் நிதித் துறை இணையதள 'டேட்டா'க்களில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பள பட்டியல் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 15ம் தேதியை கணக்கிட்டு, சம்பள பட்டியல் தயாரிக்கப்படும்.இந்த பட்டியல், அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.

பின், 25ம் தேதிக்குள் அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கருவூலங்களில் தாக்கல் செய்யப்படும்.நிதித் துறையின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும், 16ம் தேதி முதல், பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கும். இந்நிலையில், இந்த மாத சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் துவங்கிய நிலையில், ஒரு வாரமாக நிதித் துறையின் இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்னையால், பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை. ஒரு வார தாமதத்துக்கு பின், நேற்று இணையதளம் செயல்பட துவங்கியது. அதிலும் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சுய விபர டேட்டாக்கள் முழுமையாக காண்பிக்கப்படாமல், தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இணையதளத்தில் காட்டும் டேட்டாக்கள் உள்ளவர்களுக்கும் சம்பள பட்டியல் தயாரிக்க முடியாமல், சர்வர் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நிதித் துறையின் மாவட்ட கணக்கு அதிகாரிகளிடம், ஊழியர்கள் புகார் அளித்தாலும் பிரச்னை தீரவில்லை என்பதால், இந்த மாத சம்பளம் தாமதமாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளதாக, அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Wednesday, November 10, 2021

Saturday, August 07, 2021

August 07, 2021

41 கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு - பல்கலை.கள் ஊதியம் வழங்க கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழகத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளில், 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என்று 2018-ம்ஆண்டு ஜூன் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 41 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.

இந்நிலையில், அந்த கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாககல்லூரி முதல்வர்களுக்குக் கல்லூரி கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன் அனுப்பியசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலிருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும்ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான ஊதியத்தைச் சார்ந்த பல்கலைக்கழகங்களே வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, தங்கள் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பளத்தைப் பல்கலைக்கழக பதிவாளரை அணுகிப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 24, 2021

July 24, 2021

சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு – உபி அரசு அறிவிப்பு!

உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாநிலத்தின் முதன்மை மொழியை வளர்க்கும் விதமாக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு அதிக அளவிலான சமஸ்கிருத ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

சமஸ்கிருத ஆசிரியர்கள்:
ஒவ்வொரு மாநிலத்தில் தங்களின் தாய் மொழியை வளர்ப்பதற்கு அரசு பல திட்டங்களையும் அறிவிக்கும். அதன் மூலம் மக்களிடையே மொழி ஆர்வம் அதிகரிக்கும் என்று அரசுகள் கருதுகிறது. மேலும் பல சலுகைகளையும் மொழி ஆர்வம் அதிகரிக்கும் வகையில் அரசுகள் அறிமுகப்படுத்தும். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் சமஸ்கிருத மொழியை மேம்படுத்தும் வகையிலும், பண்டைய மொழியைக் கற்கும் முறையை நெறிப்படுத்துவதற்கும் சமஸ்கிருத ஆசிரியர் ஆட்சேர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சமஸ்கிருத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மாநிலம் முழுவதும் சமஸ்கிருத ஆசிரியர் சேர்ப்புக்கான பெரிய அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கோடை விடுமுறை காலத்தை தவிர்த்து, 2021-22 மற்றும் 2022-23 ஆகிய கல்வி அமர்வுகளுக்கு சமஸ்கிருத ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் சமஸ்கிருத மேல்நிலை பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்கள் கௌரவ அடிப்படையில் ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆசிரியர்கள் நேர்காணல் சமஸ்கிருத செயல்முறையிலேயே நடத்தப்படும். நடுத்தர அளவிலான ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000 மற்றும், அதற்கு கீழான நிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, July 21, 2021

July 21, 2021

நாடு முழுவதும் மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ஊதிய குறியீடு

இந்தியாவில் புதிய ஊதிய குறியீடு மசோதாவின் மூலம் நிறுவனங்களில் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

புதிய ஊதிய குறியீடு:

மத்திய அரசு கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் புதிய ஊதியக் குறியீட்டை நிறைவேற்றியிருந்தது. அதன்படி, வருகிற 2021 ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விதி அமலுக்கு வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதி அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் அளவு குறையும். புதிய விதியின்படி, ஊழியர்களுக்கான கிராவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை குறைத்துள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ் கிராச்சுட்டியின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் அடிப்படை சம்பளத்தின்படித்தான் கிராச்சுட்டி கணக்கிடப்படுகிறது. மேலும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் கிராச்சுட்டியின் அளவும் அதிகரிக்கும். கிராச்சுட்டி தவிர நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பும் அதிகரிக்கும். இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களின் சேமிப்பு அதிகரிக்கும். இந்த திட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் மூன்று தொழிலாளர் குறியீடுகள், தொழிற்துறை இணைப்புகள், வேலையின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான விதிகளை மாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

Wednesday, July 07, 2021

July 07, 2021

இந்திய பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை – மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக அரசு துறைகளில் பணி புரிபவர்களுக்கே சில சிறப்பு சலுகைகளுடன், லட்ச கணக்கில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை ஒவ்வொருவர் வாங்கும் சம்பள விவரம் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது.

மாத சம்பளம்

அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையுடன், கை நிறைய சம்பளம், அரசு சலுகைகள் உள்ளிட்ட பலவும் கிடைக்கிறது. ஒரு அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கே இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுகிறது என்றால் அரசை நடத்தும் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு கிடைக்கும் மரியாதையுடன், அவர்களது மாத வருமானம் எவ்வளவு இருக்கும் என்றே நம்மால் கணிக்க இயலாது. அந்த வகையில் நீங்கள் அறியாத அரசு அதிகாரத்தில் உள்ளவர்களின் சம்பளம், மற்றும் சலுகைகள் உள்ளிட்ட விவரங்கள் தற்போது பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரத்தில் உள்ள முதல் நபர் யார் என்றால் அது ஜனாதிபதி தான். ஒரு மாதத்துக்கு மட்டும் இவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் 5 லட்சம் ரூபாய். இந்த தொகை அவரது சம்பளத்தில் கொடுக்கப்படும் முதன்மை தொகையாகும். இது தவிர ஜனாதிபதிக்கு இன்னும் பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக இந்த சம்பள பட்டியலில் 2 ஆவதாக இணைந்திருப்பவர் நம் நாட்டின் துணை ஜனாதிபதி. இவருக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

இதுவே ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஆளுனர்களுக்கு 3.50 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக நம் நாட்டின் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவர் என்றால், அது பிரதமர் தான். அதன் படி பிரதமருக்கு கொடுக்கப்படும் மாத சம்பளம் 2.80 லட்சம் ரூபாயாகும். மற்றொரு பக்கத்தில் காண்கையில் பிரதமர் பதவியில் இருந்து பதவி காலம் முடிந்த ஒருவர், அவரது வாழ்நாள் முழுவதும் தங்குவதற்கு இலவச இடம் கொடுக்கப்படுகிறது. இதோடு பிரதமருக்கு என இலவச மருத்துவ செலவுகளுடன் 14 அலுவலக பணியாளர்கள் கொடுக்கப்படுவார்கள். இது தவிர 6 எக்ஸ்க்யூட்டிவ் வகுப்பு விமான டிக்கெட்டுகள், பதவியில் இருந்து விலகிய பிறகு முதல் 5 ஆண்டுகளுக்கு இலவச ரயில் டிக்கெட்டுகள் உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இது தவிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மாதந்தோறும் 2,80 லட்சம் ரூபாயும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவருக்கும் 2.50 லட்சம் ரூபாயும், தலைமை தேர்தல் ஆணையருக்கு 2.50 லட்சம் ரூபாயும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு 2,50 லட்சம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. தவிர இவர்களுக்கு மருத்துவ செலவுகள், இருப்பிடம், போக்குவரத்து என அனைத்துக்கும் சிறப்பு சலுகை கொடுக்கப்படுகிறது. இறுதியாக தமிழக முதல்வருக்கு சம்பளம் 2.20 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதில் உத்தர பிரதேச முதல்வருக்கு அதிகபட்சமாக 3.65 லட்சம் ரூபாயும், மஹாராஷ்டிரா முதல்வருக்கு 3.40 லட்சம் ரூபாயும், ஆந்திர பிரதேச முதல்வருக்கு 3.35 லட்சம் ரூபாயும் கொடுக்கப்படுகிறது. இவற்றில் மிக குறைந்த வருமானத்தை தெலுங்கானா, பெங்கால், நாகலாந்து உள்ளிட்ட மாநில முதல்வர்கள், 1.10 லட்சம் ரூபாயாக பெற்று கொள்கின்றனர். இது தவிர இந்த அரசு அதிகாரிகளுக்கு மேலும் பல சலுகைகள் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 10, 2021

June 10, 2021

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு
தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு 30 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல்-மந்திரி சந்திர சேகர் ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது ஊதிய உயர்வு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் 9 லட்சத்து 21 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள்.

Wednesday, June 09, 2021

June 09, 2021

ஒரு நாள் சம்பளம் ஜூன் மாதத்திலும் பிடித்தம் செய்க – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஜூன் மாத ஊழியத்திலும் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொரோனா கொடுந்தொற்று நிவாரணப் பணிக்கு பயன்படித்திக் கொள்ளமாறு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் சா. அருணன் வெளியிட்ட அறிக்கை, தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டு வர இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நன்றி உணர்வோடு பாராட்டுகிறது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு.
கொரோனா கொடுந்தொற்று தடுப்புப் பணி, உபகரணங்கள் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கேட்டுக்கொண்டோம். அதனையேற்று மே மாதம் ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும், தொடர்ந்து கொரோனா பணிக்கு நிதி தேவைப்படுவதை அறிகிறோம். ஆதலால் முன்கள பணியாளர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஜூன் மாதம் ஊதியத்தில் இருந்தும் ஒருநாள் ஊதியத்தை பிடித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ள ேவண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, June 06, 2021

June 06, 2021

வருமான வரித்துறையின் புதிய இணையதளம் நாளை அறிமுகம்!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு புதிய இணைய தளத்தை வருமான வரித்துறை நாளை அறிமுகப்படுத்துகிறது.
https://www.incometax.nic.in என்ற புதிய வலைதளத்தில் மின்னணு முறையில் எளிதாகவும், விரைவாகவும் கணக்குகளை தாக்கல் செய்ய முடியும்.
- நிதியமைச்சகம்

Saturday, June 05, 2021

June 05, 2021

விடுமுறை நாட்களிலும் சம்பளம் வரும்! - RBI

விடுமுறை நாட்களிலும் சம்பளம் வரும்!
"தற்போதுள்ள நடைமுறைகளின்படி விடுமுறை நாட்களில், சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை, வங்கிகள் பயனாளர்களின் கணக்கில் வரவு வைக்காது. ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வரவு வைக்கப்படும்" - ஆர்.பி.ஐ

Thursday, June 03, 2021

June 03, 2021

காவல்துறையினருக்கு ₹5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - செய்தி வெளியீடு எண்:213 - நாள்:03.06.2021

செய்தி வெளியீடு எண்:213
நாள்:03.06.2021
செய்தி வெளியீடு
கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு

கோவிட்-19 பெருந்தொற்று, உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.
அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். கோவிட்-19 பெருந்தொற்று, உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக காவல்துறைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு முன்களப் பொருட்படுத்தாது பணியாளர்கள் கடமையாற்றி தங்களது இன்னுயிரையும் வருகின்றனர். அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் காவல்துறையைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 ஆளிநர்களுக்கு ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வீதம் ஊக்கத் தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
June 03, 2021

“தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது”- மாவட்ட நிர்வாகம் அதிரடி

தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்; உபி மாவட்ட நிர்வாகம் அதிரடி
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரும்பான்மையான மக்கள் முன்வரவில்லை.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மே மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என மாவட்ட தலைமை வளர்ச்சி அதிகாரி சார்சிட் கவுர் அறிவித்துள்ளார். மாவட்ட மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்திரா விஜய் சிங், வாய்மொழியாக தடுப்பூசி இல்லையென்றால் சம்பளம் இல்லை என்று கூறியதை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்துவதாக அவர் கூறினார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டு, தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மே மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மாவட்ட கருவூல அதிகாரி மற்றும் பிற துறை தலைமை அதிகாரிகள், தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை சேகரிக்கத்தொடங்கி உள்ளனர். இதையடுத்து அரசு ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை நிறுத்திவிடுவார்களோ என்று தடுப்பூசி போட விரைந்துள்ளனர் என்றும் அதிகாரி சார்சிட் கவுர் கூறி உள்ளார்.

Thursday, May 27, 2021

May 27, 2021

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் கொரேனா நிவாரணத்திற்காக பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியீடு.

ஒரு நாள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட நாள் ஊதியம் பிடித்தம் ஆசிரியர் & அரசு ஊழியர் விருப்பத்தின் பேரில் கொரோனா நிவாரணத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான அரசாணை வெளியீடு

Wednesday, May 19, 2021

May 19, 2021

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு உத்தரவு.

முதல்வரின் நிவாரண நிதிக்கு தமிழக ஐஏஎஸ் கேடரில் பணியாற்றுவோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் கோவிட்-19ல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கேடரில் பணியாற்றுவோர் கொரோனவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் ஒரு நாள் சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் விருப்பம் தெரிவித்தும் கடிதம் வரப்பெற்றிருந்தது. இதையடுத்து தமிழக அரசும் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்யும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிதியை மே அல்லது ஜூன் மாதத்தில் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள அரசாங்க உத்தரவைப் பார்க்கவும். அனைத்து RJDS / PAOS / TO களும் உங்கள் மாவட்டத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் டி.டி.ஓ.எஸ்ஸைத் தொடர்பு கொள்ளவும், தமிழ்நாடு மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடு / நிவாரண நடவடிக்கைகளுக்கு 2021 மே மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தின் பங்களிப்பைக் குறைப்பதற்காக அவர்களுக்கு வழிகாட்டவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. . அத்தகைய விலக்கு அவர் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்

Thursday, May 13, 2021

May 13, 2021

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை இம்மாதமே பிடித்தம் செய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதல்வருக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மனமுவந்து வழங்கும் ஒரு நாள் ஊதியத்தை இம்மாதமே பிடித்தம் செய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதல்வருக்கு வேண்டுகோள் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் உயிர்கொல்லி தொற்றான கொரோனாவை தமிழக மண்ணில் வீழ்த்துவதற்கு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் மாண்புமிகு புதிய முதல்வரை தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மனதார வாழ்த்துகிறது, பாராட்டுகிறது. அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளுக்கும் எங்கள் சங்கம் தோள் கொடுத்து துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனாவை அழித்து ஒழித்திட மாண்புமிகு முதலமைச்சர் திரட்டும் நிவாரண நிதிக்கு, ஒரு நாள் ஊதியத்தை வழங்குகிறோம் என்று நாங்கள் எல்லாம் அங்கம் வகிக்கும் ஒட்டுமொத்த ஜேக்டோ-ஜியோவே அறிவித்திருப்பதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே நாங்கள எல்லாம் மனமுவந்து கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கும் இந்த ஒரு நாள் ஊதியத்தை இம்மாத ஊதியத்திலேயே பிடித்தம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம். இவ்வாறு நாங்கள் வழங்கும் ஒரு நாள் ஊதியம் என்பது சுமார் 200 கோடிக்கு மேலாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, May 10, 2021

May 10, 2021

ஜேக்டோ-ஜியோ சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு - பத்திரிக்கைச் செய்தி 10.05.2021

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) (Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது ஒருநாள் ஊதியமான ரூ.150 கோடியினை வழங்க முடிவு ஜாக்டோ ஜியோ அறிவிப்பு. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அர்ப்பணிப்பு உணர்வோடு களப் பணியாற்றும் தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றுவதற்கான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உயர்திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ மீண்டும் தனது நெஞ்சார்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக உக்கிரமாக உள்ளது. இந்திய அரசும் தற்போது மக்களின் அறுதிப் பெரும்பான்மையோடு அரியணையில் அமர்ந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசும் கொரோனாவினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளன. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களோடு தமிழகத்தில் அனைத்துத் துறைப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர். இந்திய அரசிற்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கும் நோயினை எதிர்கொள்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு போதிய நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய ஒரு அசாதாரணமாக சூழ்நிலையில், தமிழகத்திலுள்ள 12 இலட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு-அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ஒருநாள் ஊதியத்தினை கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது. கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளில் தங்களின் உயிரையும் துச்சமென மதித்து, நோய் பாதிக்கப்பட்டோரை அந்த பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவத் துறை தொழில்நுட்பப் பணியாளர்கள், உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கும் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ள அனைத்து சுகாதார துாய்மை ஊழியர்களுக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறைப் பணியாளர்களுக்கும் ஜாக்டோ ஜியோ தனது மனமார்ந்த பாராட்டுதல்களையும் நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது. இப்பணியாளர்களுக்கு தோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு சானிடைசர், முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு அம்சங்களை வழங்கிட தமிழக அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கேட்டுக் கொள்கிறது. - மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
May 10, 2021

முதல்வர் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும்: அரசாணை வெளியிட கோரிக்கை

முதல்வர் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும் - அரசாணை வெளியிட கோரிக்கை! கரோனா பாதிப்பு உள்ளவர் களுக்கும், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும் உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு, தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அரசாணை வெளியீடுமாறுதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் டி.ஆர்.ஜான் வெஸ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கி றோம். கரோணா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில்,அரசின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசுக்கு கை கொடுக்க முடிவு செய்துள்ளோம், கரோனா இரண்டாவது அலை யில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும், மக் களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவி லியர்கள், தூய்மைப் பணியாளர் களுக்கு உதவும் நோக்கிலும், ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். முதல்வர் இது தொடர்பாக, உரிய தமிழக ஆணை பிறப்பிக்குமாறு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog