Breaking

Showing posts with label NMC. Show all posts
Showing posts with label NMC. Show all posts

Saturday, October 21, 2023

October 21, 2023

MBBS கலந்தாய்வு செல்லாது: NMC அறிவிப்பு!



செப்.30-க்குப் பிறகு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

நடப்பாண்டில் செப்.30-ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு: நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை செப்.30-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடி கலந்தாய்வு மூலம்எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் செயல்பாடுகள் ஆணையத்தின் விதிகளுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் புறம்பானது. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது. ஒருவேளை மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்திருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, January 24, 2023

January 24, 2023

மருத்துவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: என்எம்சி விளக்கம்

மருத்துவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: என்எம்சி விளக்கம்

மருத்துவப் பயிற்சியில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவிகள், மகப்பேறு விடுப்பில் செல்லும்போது அவா்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கத் தேவையில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகப்பேறு விடுப்பு கால ஊக்கத் தொகை குறித்த பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் என்எம்சிக்கு வந்தடைந்தன. அதனடிப்படையில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பில் செல்வதற்கான நெறிமுறைகள் மாநில அரசு விதிகளுக்குள்பட்டவை. அவா்கள் பணியில் இருக்கும்போது ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அதேவேளையில் விடுப்பில் செல்லும்போது அது பொருந்தாது.

Tuesday, October 04, 2022

October 04, 2022

ராகிங் புகாா்கள் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல்: என்எம்சி

ராகிங் புகாா்கள் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல்: என்எம்சி - Exclusive email for filing raging complaints: NMC

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியுள்ளது.

அதன்படி, அந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவா்களும், அவா்களது பெற்றோரும் நேரடியாகப் புகாா்களை அனுப்பலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளைத் தடுக்க டாக்டா் அருணா வானிகா் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி மாணவா்கள், அவா்களது பெற்றோா் அளித்த புகாா்கள் மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான ராகிங் செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதனிடையே, ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள், தங்களது கல்லூரி வளாகங்களில் விரிவாக கொண்டு சோ்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.

Wednesday, September 07, 2022

September 07, 2022

மருத்துவக் கல்லூரிகளில் CCTV கேமரா: NMC வழிகாட்டுதல்கள் வெளியீடு

மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமரா: என்எம்சி வழிகாட்டுதல்கள் வெளியீடு

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கல்லூரி வளாகம் முழுவதும் 25 கேமராக்களை உரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பொருத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எம்சி இயக்குநா் பங்கஜ் அகா்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் ஒரு கேமராவும், நோயாளிகள் பதிவு இடத்தில் இரு கேமராக்களும், புறநோயாளிகள் பிரிவில் 5 கேமராக்களும் பொருத்த வேண்டும்.

விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், அவசரசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துதல் அவசியம். மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 25 கேமராக்கள் இருத்தல் வேண்டும்.

‘4 கே’ துல்லியத்தன்மையுடன் அவை பொருத்தப்பட வேண்டும். இந்த அறிவிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், அதுதொடா்பாக பல்வேறு சந்தேகங்களை தொடா்ந்து என்எம்சியிடம் மருத்துவக் கல்லூரிகள் எழுப்பி வருகின்றன.

அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Total Pageviews

Search This Blog