Breaking

Showing posts with label TNPSC GROUP I EXAM. Show all posts
Showing posts with label TNPSC GROUP I EXAM. Show all posts

Wednesday, April 01, 2026

Tuesday, April 01, 2025

Saturday, March 30, 2024

Friday, April 28, 2023

Tuesday, August 30, 2022

Tuesday, August 23, 2022

August 23, 2022

92 இடங்களுக்கான குரூப் -1 தேர்வுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்!

92 இடங்களுக்கான குரூப் -1 தேர்வுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஆக்டோபர் 30-ல் நடக்கும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர். 92 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 1 பிரிவில் 18 துணை ஆட்சியா், 26 துணை எஸ்.பி., 25 வணிகவரி உதவி ஆணையாளா், 13 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா், ஏழு ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அதிகாரி என 92 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப முதல்நிலைத் தோ்வு அக். 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வரும் 27-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணியிலிருந்து 29-ஆம் தேதி இரவு 11.59 மணி வரையிலும் விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும்.

Monday, August 22, 2022

August 22, 2022

குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்ஸி குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வு மூலம் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரித்துறை), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் 92 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கான பட்டயப்படிப்பு அல்லது இணைக் கல்வித் தகுதியுடன் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் ஆக.22. இதற்கான முதல்நிலைத் தோ்வு அக்.30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் பயனடையும் வகையில் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் செப்.2-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பவா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தோ்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Friday, July 15, 2022

Wednesday, June 29, 2022

Friday, February 25, 2022

Wednesday, February 23, 2022

February 23, 2022

TNPSC - குரூப் 2, 2ஏ தோ்வு அறிவிக்கை வெளியீடு: முழு விவரம்

குரூப் 2, 2 ஏ தோ்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பினை கடந்த வாரம் வெளியிட்ட அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தேர்வு குறித்த அறிவிக்கை இன்று வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 2022, மார்ச் 23ஆம் தேதி வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 5,143 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.

பிப்ரவரி 23ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் - 2022, மார்ச் 23. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் - 2022, மே 21ஆம் தேதி. முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்.. முதல்நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - Group 2,2A Notification 2022 - Download here...

Tuesday, February 22, 2022

February 22, 2022

TNPSC - தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வின் தேர்வு மையம் குறைப்பு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release) - 22/02/2022 - PDF

Monday, February 21, 2022

February 21, 2022

TNPSCன் முக்கிய அறிவிப்பு!

TNPSC முக்கிய அறிவிப்பு!

குரூப் 2 , குரூ 2 ஏ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் , TNPSC @ 60600TLITE 60 OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் , அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | TNPSC - Department Exam 2022 - Question And Answer

ஆதார் எண் இணைத்து , OTR கணக்கு மூலமாகவே நாளை மறுநாள் ( பிப் .23 ம் தேதி ) முதல் குரூப் 2 , குரூ 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Saturday, February 05, 2022

February 05, 2022

இலவச இணைய வழி TNPSC பயிற்சி வகுப்பு - பதிவு செய்ய Click Here

"அடையாளம்" இலவச இணைய வழி TNPSC பயிற்சி வகுப்பில் (சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியோர், மாற்றுத்திறனாளிகள்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 6 முதல் நடைபெறும்.

பதிவு செய்ய: Click Here
February 05, 2022

மே மாதம் குரூப் - 1 தேர்வு நடத்த திட்டம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

மே மாதம் குரூப் - 1 தேர்வு நடத்த திட்டம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

''குரூப் - 1 தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் கூறினார். விழுப்புரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான துறைத் தேர்வு பிப்., 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது.

எழுத்து தேர்வுதேர்வில் புதிய நடைமுறையாக 1 முதல் 3ம் தேதி வரை மற்றும் 7 முதல் 8ம் தேதி வரை கம்ப்யூட்டர் முறையில் ஆன்-லைன் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், சர்வே மற்றும் வருவாய்த் துறைகளுக்கு எழுத்துத்தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 4 முதல் 6ம் தேதி வரை மற்றும் 9ம் தேதிகளில் எழுத்துத் தேர்வும் நடக்கிறது.

ஓராண்டாக விடைத்தாள் முழுமையாக கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.தேர்வு எழுதுபவர்களுக்கும், விடைத்தாள் திருத்துபவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால், நேர்மையான முறையில் விடைத்தாள் திருத்தப்படுகிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி., மூலம் இந்தாண்டு 32 வகை தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. ஆதார் எண் கட்டாயம்

குறிப்பாக, குரூப் - 1 தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும். மேலும், குரூப் - 4 தேர்வு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அனைத்து போட்டி தேர்வுகளிலும், தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி தேர்வில், 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 30 நிமிடத்திற்கு முன் வர வேண்டும். இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வு எழுதுபவர்களில் 60 சதவீதம் பேர், ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் பிப்., 28ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
February 05, 2022

திட்டமிட்டபடி குரூப் 1 மெயின் தேர்வு நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அரசு துறைகளில் பணியாற்றி வருவர்களுக்கான பதவி உயர்வுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 48 வகையான தேர்வுகளுக்கான எழுத்து தேர்வை நேற்று நடத்தியது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களில் இந்த தேர்வு நடந்தது. மொத்தம் 8,000 பேர் இந்த தேர்வை எழுதினர். இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:டிஎன்பிஎஸ்சி நடத்தியுள்ள துறை தேர்வுக்கான ரிசல்ட் ஏப்ரல் இறுதியில் வெளியிடப்படும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒரு முறை நிரந்தரப்பதிவு(ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேசன்) வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் குறித்த விவரங்களை வருகிற 28ம் தேதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்று கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். குரூப் 1 பதவியில் 66 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வுக்கான மெயின் தேர்வு திட்டமிட்டப்படி மார்ச் 4, 5, 6ம் தேதி நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது. குரூப் 1 மெயின் தேர்வை 3800 பேர் எழுத உள்ளனர். குரூப் 2, குரூப்2 ஏ பதவியில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த மாதம் மத்தியில் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியானதில் இருந்து 75 நாட்களுக்குள் எழுத்து தேர்வு நடைபெறும். குரூப் 4 பதவியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட 75 நாளில் எழுத்து தேர்வு நடைபெறும். வழக்கமாக போட்டி தேர்வுகள் காலை 10 மணியில் இருந்து 1 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ் தேர்வு நடத்துவதால் போட்டி தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் தேர்வுகளில் காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வு நடைபெறும். மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் தேர்வுகள் ஆப்ஜெக்டிவ் வடிவிலும், மற்ற தேர்வுகளில் விளக்கும் வகையிலும் இருக்கும். இதில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். கூடுதலாக பெறப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களும், போட்டி தேர்வுக்கான கால்குலேசன் பண்ணுவதற்கு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Total Pageviews

Search This Blog