Breaking

Showing posts with label Chennai IIT Description. Show all posts
Showing posts with label Chennai IIT Description. Show all posts

Thursday, April 11, 2024

Wednesday, February 14, 2024

February 14, 2024

சென்னை ஐஐடி-யின் தான்சானியா கிளையில் பி.எஸ்., எம்.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை ஐஐடி-யின் தான்சானியா கிளையில் பி.எஸ்., எம்.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! B.S., M.Tech., Tanzania branch of IIT, Chennai. Apply for courses!

சென்னை ஐஐடி-யின் முதலாவது வெளிநாட்டு வளாகமான சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தில் பிஎஸ் மற்றும் எம்டெக் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடி சான்சிபார் 2024-25 கல்வியாண்டுக்கான இரண்டாவது தொகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்கப்படும் இரு பாடத்திட்டங்கள்- பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, எம்டெக் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (B.S. in Data Science and AI & M.Tech in Data Science and AI). பிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 15 ஏப்ரல் 2024. ஸ்கிரீனிங் தேர்வு 9 ஜூன் 2024 அன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை). எம்டெக் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 மார்ச் 2024. தேர்வு செயல்முறையின் பல்வேறு நிலைகள், மதிப்பீட்டின் விவரங்கள், ஸ்கிரீனிங் சோதனை முறை, கட்டண அமைப்பு, முக்கிய நாட்கள், விரிவான பாடத்திட்டம், தகுதி அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு வரங்களை https://www.iitmz.ac.in/IITMZST_Information_Brochure_2024_v1.1.pdf என்ற இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இரு பாடப்பிரிவுகளின் தனித்துவ அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்த சென்னை ஐஐடி சான்சிபாரின் பொறியியல் - அறிவியல் பள்ளிப் பொறுப்பு இயக்குநர் மற்றும் டீன் பேராசிரியை ப்ரீத்தி அகலாயம் கூறும்போது, “ஐஐடிஎம் சான்சிபாரில் இருந்து கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். இப்பிராந்தியத்தில் கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவரவும், திறன் அடிப்படையிலான கல்வியில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களை இணைக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐஐடி சான்சிபாரில் இரண்டாம் தொகுப்பு மாணவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதோடு, விண்ணப்பம், தேர்வு செயல்முறைகளில் அவர்கள் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தேர்வு மையங்களைச் சேர்த்து விரிவுபடுத்த இக்கல்வி நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறு பிராந்தியங்கள், மத்திய கிழக்கு, தெற்காசியா ஆகிய பகுதிகளில் உள்ள 19 சர்வதேச மையங்களில் ஆன்லைன் ஸ்கிரீனிங் சோதனைகள் நடைபெறும். உள்நாட்டு மையங்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் அணுகும் வகையில் தேர்வு மையங்களை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது. 2023-ல் சான்சிபார் வளாகம் தொடங்கப்பட்டபின் இந்தியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியிலும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இந்த பிராந்தியத்தின் கல்விமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தவும், திறன் அடிப்படையிலான கல்விக்கான தேடலில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதையும் இக்கல்வி நிறுவனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை: இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரிவான மூன்று நிலைகளைக் கொண்டதாகும். விண்ணப்பிப்போரின் குறைந்தபட்ச கல்வித் தகுதி மட்டுமின்றி, விண்ணப்பதாரர்களின் இணைப் பாடத்திட்டம், பாடநெறியைக் கடந்த நற்சான்றிதழ்கள் போன்றவையும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த துணைத்திறன்கள் 10 சதவீத அளவுக்கு கணக்கிடப்பட்டு, தேர்வு முறையின் முதல் கட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். இரண்டாம் கட்டமாக, ஸ்கிரீனிங் சோதனை (IITMZST) மூலம் பல்வேறு பாடங்களில் மாணவர்களின் திறன்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணக்கிடப்படுகின்றன. முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இந்த மூன்றாம் கட்ட சோதனை 30 சதவீத அளவுக்கு கணக்கில் கொள்ளப்படும்.

பிஎஸ் படிப்புக்கான தேர்வுமுறை ஆங்கிலம், புரிதல், பகுப்பாய்வுத் திறன், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். ஸ்கிரீனிங் தேர்வுக்கு அதிகபட்சமாக 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். எம்டெக் படிப்பிற்கான ஸ்கிரீனிங் தேர்வு 31 மார்ச் 2024 அன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை) நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம் தொழில்நுட்பத் திறனாய்வு, பொதுத் திறனாய்வு (Technical Aptitude and General Aptitude) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஸ்கிரீனிங் தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண் 60. தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்

Tuesday, August 02, 2022

August 02, 2022

சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

சென்னை: கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் 3 ஆண்டு படிப்பாக இருந்த பி.எஸ்.புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்தை ஐஐடி மெட்ராஸ் தற்ேபாது 4 வருட படிப்பாக மாற்றியுள்ளது. சென்னை ஐஐடியில் பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் என்ற 3 வருட படிப்பை, பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என மாற்றி 4 ஆண்டு பட்டப் படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8 மாத கால பணி பயிற்சியோ, ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும். மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில், தற்போது 12ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதும் இல்லை என்பதால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பெருவாரியான தமிழக மாணவர்கள், அதற்கடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போதுவரை 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 115 தேர்வு மையங்களில் நேரடியாகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2022ல் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.itm.ac.in என்ற இணையமுகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.

Friday, July 29, 2022

July 29, 2022

சென்னை ஐஐடி-யில் ‘ஏஐ4 பாரத் நிலேகனி’ மையம்: ரூ.36 கோடி நிதியுதவி அளிப்பு

இந்திய மொழி தொழில்நுட்பத்தை மேம்படுத்த சென்னை ஐஐடி-யில் ‘ஏஐ4 பாரத் நிலேகனி’ மையம்: ரூ.36 கோடி நிதியுதவி அளிப்பு

இந்திய மொழி தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்தி சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘ஏஐ4பாரத் நிலேகனி மையம்’ சென்னை ஐஐடி.யில் தொடங்கப்பட்டுள்ளது. ரோஹிணி மற்றும் நந்தன் நிலேகனி ஆகியோா் நிலேகனி தொண்டு நிறுவனம் மூலம் இந்த மையத்துக்கு நிதியுதவியாக ரூ.36 கோடி வழங்கியுள்ளனா்.

இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் மூலம் பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மையம் செயல்படும். இது தொடா்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மையத்தை நந்தன் நிலேகனி திறந்து வைத்தாா். தொடக்க நிகழ்வாக மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழில்முனைவோா் பங்கேற்ற பயிலரங்கில் இந்திய மொழித் தொழில்நுட்பங்களை கட்டமைப்பதற்கான வளங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ‘ஓபன் சோா்ஸ்’ மொழியை கட்டமைக்கும் சென்னை ஐஐடி.யின் முன்முயற்சியாகவே ஏஐ4பாரத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, மிதேஷ் கப்ரா, பிரத்யுஷ் குமாா், அனூப் குஞ்சுக்குட்டன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் இந்திய மொழித் தொழில்நுட்பத்துக்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனா். இயந்திர மொழிபெயா்ப்பு , தானியங்கிப் பேச்சு அறிதல் போன்றவற்றுக்கான அதிநவீன மாதிரிகளும் இதில் அடங்கும்.

மையத்தைத் தொடக்கிவைத்து நந்தன் நிலேகனி பேசியதாவது: கூட்டு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடிமக்களுக்கான அனைத்து சேவைகளும், தகவல்களும் அவரவா் தாய்மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் ‘டிஜிட்டல் இந்தியா பாஷினி மிஷன்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பணியில் விரைந்து செயல்பட்டு பாஷினி மிஷன் இலக்கை எட்டும் வகையில் ஏஐ4பாரத் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கும் என்றாா். நீலேகனி மையத்தின் பணிகள் குறித்து சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இணைப் பேராசிரியா் மிதேஷ் எம்.கப்ரா கூறியதாவது:

வளமான பன்முகத்தன்மை கொண்ட மொழிகளைக் கொண்ட இந்தியாவில், விரிவடைந்து வரும் டிஜிட்டல் உலகுக்கு ஏற்ப சாமானிய மக்கள் பயனடையும் வகையில் மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். மொழித் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஆங்கிலமும், மேலும் சில மொழிகளும் கணிசமான அளவில் முன்னேறியுள்ள நிலையில், இந்திய மொழிகள் பின்தங்கியுள்ளன. இந்த இடைவெளியைக் குறைப்பதுதான் இந்த மையத்தின் நோக்கமாகும்.

இந்த மையம் உருவாக்கியுள்ள பல்வேறு அதிநவீன ‘ஓபன் சோா்ஸ்’ வளங்கள் எவரும் பயன்படுத்தக் கூடியவை. இதன் மாதிரிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா். இதில் சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Friday, July 15, 2022

July 15, 2022

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்..!!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்..!!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநில கல்லூரி 3வது, லயோலா கல்லூரி 4வது இடம் பிடித்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரிக்கு 6ம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது

Tuesday, May 10, 2022

May 10, 2022

கல்வி உதவித்தொகையில் பாரபட்சம்? - சென்னை IIT விளக்கம்

Scholarships - Do not discriminate

Scholarships are available not only for the EWS category, but also for the general category and the OBC category

100% tuition exemption for SC, ST category

Chennai IIT Description

கல்வி உதவித்தொகை - பாரபட்சம் பார்ப்பதில்லை

EWS பிரிவினருக்கு மட்டுமல்ல, பொதுப்பிரிவினர், OBC பிரிவினருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது

SC,ST பிரிவினருக்கு 100% கல்விக்கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது

சென்னை IIT விளக்கம்

Total Pageviews

Search This Blog