Tuesday, April 14, 2026
Thursday, August 03, 2023
போலி பல்கலை. பட்டம் செல்லாது: UGC எச்சரிக்கை
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியாது. எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த விவரங்களையும், போலிபல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களையும் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதேநேரம், யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tuesday, September 20, 2022
Fake interviews to provide employment! warning - வேலைவழங்குவதாக போலி நேர்முகத்தேர்வுகள்! எச்சரிக்கை
வேலை வழங்குவதாகக் கூறி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் மூலம் பணம் சிலர் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடங்களுக்காக எந்தவொரு அறிவிப்பையும் விடவில்லை என்றும், இதனால், வேலை தேடுபவர்கள் போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், சில மர்ம நபர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு போலி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள். நேர்முகத் தேர்வில் பணி வாய்ப்புக்காக பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
பணியிடங்களை நிரப்புவதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தேர்வர்களிடம் பணம் பெறுவதில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியிடங்கள் குறித்து அறிந்துகொள்ள ஜெட் கேரியர்ஸ் (JetCareers) என்ற இணையப் பக்கத்தை பின்தொடரலாம். ஜெட் ஏர்வேஸ் பணியிடங்கள் குறித்து சமூகவலைதளத்தில் அல்லது மின்னஞ்சல்களில் வரும் அறிவிப்புகளை பரிசீலனை செய்துகொள்ளுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
