Friday, September 16, 2022
Thursday, September 01, 2022
இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறை
அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பிளஸ் 2 வகுப்புகளில் உருது, பிரெஞ்சு படித்த மாணவர்கள், தமிழ் கற்க வேண்டிய கட்டாயமாகிறது. தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.
புகார்: ஆனால், சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என தகவல்கள் வெளியானதை அடுத்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் மொழி கட்டாயம் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2 ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்.
விலக்கு:
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 2-ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ்மொழி தேர்வு கட்டாயம் இடம்பெற வேண்டும். அதற்காக தமிழ் மொழி பாடத்திட்டங்களை சரிவர பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்து முறைப்படுத்தி தமிழ் தேர்வுகளை நடத்த வேண்டும்.
சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்துள்ள தகவலை அடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Thursday, August 18, 2022
தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணியை விரைவுபடுத்த உத்தரவு
தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழக அரசின் இ- சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்ததற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலமாக சாா்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இதையடுத்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பகிரப்படும். பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களின் நம்பகத்தன்மையை தலைமை ஆசிரியா்கள் சரிபாா்த்து உறுதிசெய்ய வேண்டும். அதன்பின் தகுதியானவா்களுக்கு மட்டும் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய காரணத்தை தலைமையாசிரியா்கள் தெரிவிக்க வேண்டும்.
அதேபோன்று, அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளும், அந்தந்த மாவட்ட ‘எமிஸ்’ இணையதள ஒருங்கிணைப்பாளா்களுடன் இணைந்து செயல்படவும், பணிகளை ஆசிரியா்கள் சிறப்பாக செய்வதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவுபடுத்தவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்களுக்கு இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை தவறாமல் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் க.நந்தகுமாா்.
Monday, August 08, 2022
தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வு: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500
தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மரபு பற்றிய அறிவும் இலக்கிய ஆற்றலும் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் தமிழ் ஒலிம்பியாடு தேர்வு மிக முக்கியமானது.
தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
10-ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.
2022-2023-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (சிபிஎஸ்இI ஐஎஇஎஸ்இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள், 01.10.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/-சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறது.
Wednesday, July 27, 2022
Tuesday, June 28, 2022
Saturday, May 21, 2022
Monday, March 28, 2022
10th தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு - PDF
Thursday, March 24, 2022
Wednesday, March 23, 2022
Friday, March 18, 2022
தமிழக பட்ஜெட் 2022 - கல்வித்துறை அறிவுப்புகள் ( Current Update...)
இதையும் படிக்க | வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க மாணவர்கள் திடீர் சாலை மறியல்
தமிழக பட்ஜெட்டில்பள்ளி கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 736 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இல்லம் தேடிக் கல்விக்கு 200 கோடி ஒதுக்கீடு.
* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 120 கோடி ஒதுக்கீடு. அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
- நிதி அமைச்சர் பிடிஆர் அரசுப்பள்ளி அல்லாத பள்ளிகளில் 1-10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வரும் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.
இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- நிதி அமைச்சர் பிடிஆர்
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1000ரூ ஊக்கத்தொகை வழங்கப்படும் - நிதியமைச்சர்
அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் கல்வி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். * நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் இல்லம் தேடிக்கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
* மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு.
* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
* அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் அன்பழகன் பெயரில் திட்டம் அறிவிப்பு, புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.1300 கோடி ஒதுக்கீடு.
* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
* 15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்குவதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு.
* அரசு பள்ளி அல்லாத பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கம் இலவச பாட புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு. * மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு.
* சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு.
* அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்
* ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் ரூ.7,000 கோடியில் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.
* புத்தக வாசிப்பை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் ரூ.5.6 கோடியில் புத்தகக் காட்சிகள்.
* அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.205 கோடி ஒதுக்கீடு.
* இந்த ஆண்டு பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,300கோடி ஒதுக்கீடு.
Tuesday, March 15, 2022
Tuesday, March 01, 2022
Thursday, February 10, 2022
12th Tamil - Revision Test Answer Key ( 09.02.2022 )
இதையும் படிக்க | கலந்தாய்வு சிறப்பு செய்தி!
பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு முழுமையான விடைக்குறிப்பு கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. Click Here என்ற பட்டனை Click செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
12th Tamil - Revision Test Answer Key ( 09.02.2022 ) - Download here
Tuesday, February 08, 2022
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை ?
Saturday, February 05, 2022
Wednesday, February 02, 2022
'காவலர் தேர்வில் இனி தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்'
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தால் பட்டுமே காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுகளுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். அப்போதுதான் காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இதனால் தமிழ்நாடு காவலர் தேர்வில் இனிமேல் இரண்டு தேர்வுகள் நடைபெறும். அதில் தேர்வு 1-ல், தமிழ் பாடத்தில் 80 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
தேர்வு 2-ல் வழக்கம்போல் நடைபெறும் தேர்வு. பொது அறிவு 50 வினாக்களும், உளவியல் கேள்விகள் 30 கேட்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களுக்குத் தனியாக நடத்தப்படும் இந்த தமிழ்த் தகுதி தேர்வு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, January 09, 2022
தமிழ் பட்ட மேற்படிப்பை ஆந்திராவில் படிக்க வாய்ப்பு
இது, தமிழகத்தில் இருந்து 15 கி.மீ., கிருஷ்ணகிரியில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு, தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசுவோர் அதிகளவில் வசிக்கின்றனர்.தஞ்சை தமிழ் பல்கலையின் முதல் துணைவேந்தரான வ.ஐ.சுப்ரமணியன் முயற்சியால், குப்பத்தில் 1997ல், திராவிட பல்கலை துவக்கப்பட்டது. 2005 முதல் தமிழ்த் துறை இயங்கி வருகிறது. இலவச கல்விஇதில், எம்.ஏ., - எம்.பில்., - பி.எச்டி., பிரிவுகள் உள்ளன. இங்கு சேரும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், உணவு கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செலுத்துகிறது.காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை வகுப்புகள் நடக்கும். மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளும் இலவசமாக கற்பிக்கப்படும். இது, மொழிபெயர்ப்பு பணிகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் வசதியாக இருக்கும். மேலும், முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் நிதியுதவியை யும் அளிக்கின்றன.இதுகுறித்து, பல்கலையின் பேராசிரியர் மாரியப்பன் கூறியதாவது:இங்கு ஆண்டுதோறும் 30 மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது. துவக்கத்தில், தமிழக மாணவர்களிடம் இதற்கு போட்டி இருந்த நிலையில் தற்போது, இதுகுறித்த தகவல்களை கூட, தமிழ் வளர்ச்சித் துறையும், தமிழக அரசும், கல்லுாரி மாணவர்களுக்கு தெரிவிப்பதில்லை. கால நீட்டிப்புஇதனால், ஒவ்வொரு ஆண்டும் 10க்கும் குறைவான மாணவர்களே சேர்கின்றனர். கடந்த ஆண்டு, பல்கலையை ஆய்வு செய்த ஆந்திர அரசின் கல்விக் குழு, மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தால், துறையை மூடிவிட பரிந்துரைத்துள்ளது. இதை உணர்ந்து மாணவர்களை அதிகம் சேர்க்க, தமிழ் பேராசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த ஆண்டுக்கான சேர்க்கை தேதி முடிந்த நிலையில், வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளோம். வேறு மாநிலத்துக்குச் சென்றால், படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணத் தேவையில்லை. இங்கு, அதிகளவில் தமிழர்கள் வசிப்பதோடு, பேராசிரியர்களும் உறுதுணையாக இருப்பர். இந்த வாய்ப்பை தமிழக மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, January 05, 2022
பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு
தமிழ் வழியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு..!!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எம்.பி.சி, பட்டியல் இன மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான பி.சி. மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் உண்டு எனவும் சுயநிதி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
