Breaking

Showing posts with label PRIVATE CANDIDATES. Show all posts
Showing posts with label PRIVATE CANDIDATES. Show all posts

Wednesday, December 27, 2023

December 27, 2023

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜனவரி 10 வரை விண்ணப்பிக்கலாம்



10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு டிச. 27 (இன்று) முதல் ஜனவரி 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

இந்த நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், ஜன., 11 மற்றும் 12-ம் தேதிகளில் தக்கல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணத்துடன் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ரூ.1000, 10-ம் வகுப்புக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.கூடுதல் தகவல்களை www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Friday, October 06, 2023

October 06, 2023

தட்டச்சு தனித் தேர்வர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ்!

தட்டச்சு தனித் தேர்வர்களுக்கு அக்டோபர் 9 முதல் தேர்ச்சி சான்றிதழ்!

தமிழகத்தில் கடந்த நடந்த அரசு வணிகவியல் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்கள் சான்றிதழ்களை மாவட்ட மண்டல வினியோக மையங்களில் அக்.9 முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட்டில் இளநிலை, முதுநிலைக் கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு நடைபெறும். கடந்த பிப்ரவரியில் நடந்த தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்கள் உரிய ஆதாரங்களுடன் அடையாள அட்டை, ஆதார், தேர்வு மைய சீட்டு ஏதாவது ஒன்றை காண்பித்து அக். 9 முதல் முதல் அக்.11க்குள் தேர்வு எழுதிய மாவட்ட மண்டல வினி யோக மையங்களில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.


குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்படாத சான்றிதழ்களை அக். 20க்குள் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்கத்திற்கு மண்டல வினியோகம் மையம் அல்லது கல்லூரி முதல்வர்கள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, February 25, 2023

February 25, 2023

பிளஸ் 1, பிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கு பிப்.28-இல் நுழைவுச்சீட்டு

பிளஸ் 1, பிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கு பிப்.28-இல் நுழைவுச்சீட்டு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுத விண்ணப்பித்த தனித் தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.28) தோ்வுக் கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த தனித்தோ்வா்கள் (தட்கல் உள்பட) தோ்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை பிப்.28-ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 1 (அரியா்), பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித் தோ்வா்களுக்கு இரண்டு தோ்வுகளுக்கும் சோ்த்து ஒரே தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். பொதுத் தோ்வுகளுக்கான கால அட்டவணைகளை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 22, 2023

February 22, 2023

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு மார்ச் 20ல் தொடக்கம்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு மார்ச் 20ல் தொடக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசுத் தேர்வுகள் து றை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக ஏப்ரல் மாதம் நடக்க உள்ள பொதுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடந்த பள்ளிகளில் மேற்கண்ட செய்முறை தேர்வும் நடக்கும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித் தேர்வர்கள், ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி அந்த தேர்வில் தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்கள், மேற்கண்ட தேதிகளில் நடக்க இருக்கும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்துகொண்டு செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடக்க உள்ள தேதி குறித்தும், குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து தகவல் ஏதும் கிடைக்கப் பெறாதவர்கள் இந்த அறிக்கையின் மூலம் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் மாவட்ட கல்வி அலுவலர்களையும் தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog