Breaking

Showing posts with label விண்ணப்பிக்கலாம். Show all posts
Showing posts with label விண்ணப்பிக்கலாம். Show all posts

Tuesday, August 02, 2022

August 02, 2022

வீரதீரச் செயல்களுக்கான சிறுவா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீரதீரச் செயல்களுக்கான சிறுவா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீரதீரச் செயல்களுக்கான சிறுவா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட 6 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு ஹொய்சளா விருது(சிறுவா்கள்), கேளடி சென்னம்மா விருது (சிறுமிகள்) ஆகியவற்றை கா்நாடக அரசு வழங்கி கௌரவித்துவருகிறது. ஆபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்ற அறிவுக்கூா்மையோடு செயல்பட்டு வீரதீரத்தை வெளிப்படுத்தும் சிறுவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நிகழ்வுகள் 2021 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2022 ஜூலை மாதத்திற்குள் நடந்ததாக இருக்க வேண்டும். 2004 ஆக. 1-ஆம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகள் மட்டுமே விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுடன் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கமும், பட்டயமும் வழங்கப்படும். மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று, நிறைவுசெய்து செப்.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை கன்னடத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
August 02, 2022

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி: தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி: தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில்முனைவோருக்கு கோவிட் நிவாரண உதவி வழங்கும் புதிய திட்டத்தை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு (2022 - 2023) செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கோ் 1-இன்படி, 2020-2021, 2021-2022 ஆகிய 2 ஆண்டுகளில் கரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோா் தாமாகவோ, தமது சட்டப்பூா்வ வாரிசுகள் மூலமோ ஏற்கெனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோன்று இன்னொரு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறலாம்.

இதில், திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம். இயந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். நிதி உதவி பெற பயனாளா் 55 வயதுக்கு மேற்படாதவராகவும், குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த நிறுவனங்களும் பயன் பெறலாம் என்பதால், கடந்த இரு ஆண்டுகளில் வணிகம் பாதிப்படைந்த உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தானியங்கி பணிமனைகள், அழகு நிலையங்கள் போன்ற சேவைத் தொழில் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். 2020-க்கு முன்னா் அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கிய நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.

கோ் 2-இன்படி, கரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு அல்லது நவீனமயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 2020 மாா்ச் 23-ஆம் தேதிக்குப் பின்னா் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கலுக்கான இயந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், வேலூா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 - 2242413, 2242512 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 01, 2022

August 01, 2022

சென்னை ஐஐடியில் பிஎஸ் பட்டப்படிப்பு: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் (அ) ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும்

சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியது. கேட் மதிப்பெண், வயது, அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் நீக்கி, தரமான உயர்கல்வியை படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த பட்டப்படிப்பைத் தொடரலாம். அதன்படி, 10ம்வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சிப் பெற்றவர்கள், 12ம் வகுப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலைப் படிப்பைத் தொடர்பவர்கள், ஏதேனும் பணிகளில் வேலை செய்பவர்கள் என அனைவரும் இந்த இணையவழி பட்டப்படிப்பைத் தொடரலாம்.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, பல் நுழைவு வெளியேறுதல் சுதந்திரமும் (Multiple Entry Exit options) இந்த பாடத்திட்டத்தில் அளிக்கப்பட்ட்டது.

அதன்படி, அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme) என்ற மூன்று வெவ்வேறு நிலைகளிலும் மாணவர்கள் வெளியேறலாம். அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் இருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில், இந்த பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், இந்த பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2022-ல் ஆரம்பமாகும் பிஎஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 19 ஆகஸ்ட் 2022 கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
August 01, 2022

300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: பாரிவேந்தர் எம்.பி.

பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 300 மாணவர்களுக்கு 4ஆம் ஆண்டாக இலவச உயர்கல்வி ஏழ்மை நிலையிலுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எஸ்.ஆர்.எம் பல்கலக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

www.srmist.edu.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 3 - 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் -பாரிவேந்தர் எம்.பி.

Thursday, July 28, 2022

July 28, 2022

மீன்வள படிப்புகள் - வழங்கப்படும் படிப்புகள்& கல்வி வளாகங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 8


மீன்வள படிப்புகள்

தமிழகத்தில் மீன்வள படிப்புகளுக்கு என ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக பல்கலைக்கழகம், மீன்வளம் சார்ந்த உயர்தர கல்வி, ஆராய்ச்சி, ஊட்டச்சத்து மிக்க உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அறிமுகம்

நாகப்பட்டினத்தில் செயல்படும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 

மீன்வளம் சார்ந்து பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் இந்த நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. தற்போது, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பில் அறிவியல் சார்ந்த பாடங்களை படித்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.


வழங்கப்படும் படிப்புகள்:


பி.எப்.எஸ்சி., - பிஷரீஸ் சயின்ஸ்


பி.டெக்., - பிஷரீஸ் இன்ஜினியரிங்


பி.டெக்., - எனர்ஜி அண்டு என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்


பி.டெக்., - பயோடெக்னலாஜி


பி.டெக்., - புட் இன்ஜினியரிங்


பி.பி.ஏ., - பிஷரீஸ்  எண்டர்பிரைசஸ் மேனேஜ்மெண்ட்


பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் பிஷ் புராசெசிங் டெக்னாலஜி


பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் அக்குவாகல்ச்சர்


பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் பிஷ்ஷிங் டெக்னாலஜி

கல்வி வளாகங்கள்:

1. பிஷரீஸ் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - தூத்துக்குடி

2. டாக்டர். எம்.ஜி.ஆர். பிஷரீஸ் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - திருவள்ளூர்

3. டாக்டர். எம்.ஜி.ஆர். பிஷரீஸ்  காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - நாகப்பட்டினம்

4. காலேஜ் ஆப் பிஷரீஸ் இன்ஜினியரிங் - நாகப்பட்டினம்

5. இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் பயோடெக்னாலஜி - சென்னை

6. டி.என்.ஜே.எப்.யூ., பிஷரீஸ் பிசினஸ் ஸ்கூல் - சென்னை

7. காலேஜ் ஆப் பிஷ் நியூட்டிரிஷன் அண்டு புட் டெக்னாலஜி - சென்னை

8. பாராபுரொபஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் டெக்னாலஜி - சென்னை

9. பாராபுரொபஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்குவாகல்ச்சர் டெக்னாலஜி - சென்னை

10. பிஷரீஸ் டிரைனிங் இன்ஸ்டிடியூட் - ராமநாதபுரம்

விண்ணப்பிக்கும் முறை: www.tnjfu.ac.in/ugadmissions.php எனும் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 

முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், தமிழக அரசு பள்ளிகளில் படித்தவர்கள், மீனவர் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் ஆகியோருக்கென சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. வெளிநாடுவாழ் இந்தியர்களும் பி.எப்.எஸ்சி., மற்றும் பி.டெக்.,- பிஷரீஸ் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சேர்க்கை பெறலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 8

விபரங்களுக்கு: 

இ-மெயில்: ugadmission@tnjfu.ac.in

இணையதளம்: www.tnjfu.ac.in

Monday, July 11, 2022

July 11, 2022

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 39 பணியிடங்கள்... +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி தேதி: 29.07.2022

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)

பணியின் பெயர்: Junior Operator

பணியிடங்கள்: 39

தகுதி: +2 (HMV License வைத்திருப்பது அவசியம்)

விண்ணப்பிக்கும் முறை: Online

கடைசி தேதி: 29.07.2022

மேலும் தகவலுக்கு> https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/2646820ebdc44bf193e6ae6c32eb3f60.pdf

விண்ணப்பிக்க>https://ioclsrmd.onlinereg.in/skandhareg22/Hom
July 11, 2022

ஜிப்மர் நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.17000 சம்பளத்தில்... 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஜிப்மர்

பணியின் பெயர்: Data Entry Operator, Multi Tasking Staff

பணியிடங்கள்: 03

விண்ணப்பிக்கும் முறை: Online

கடைசி தேதி: 17.07.2022

தகுதி: டிகிரி/12th/10th

சம்பளம்: ரூ.17000

மேலும் தகவலுக்கு> https://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20notice%20-%20RVRDL-%20DEO%20MTS.pdf
July 11, 2022

மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மத்திய அரசின் ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு, தகுதியான பள்ளி மாணவர்களின் பெயரை செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை சார்பில் ஆண்டுதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இன்ஸ்பயர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் விருதுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

எனவே, 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வகுப்புக்கு 5 பேரையும், நடுநிலைப் பள்ளிகளில் 3 பேரையும் பதிவு செய்யலாம். அதிகப்படியான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்தப்படும். எனவே, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யும்போது, மாணவர்கள் பெயரிலான தனி கணக்காக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog