Breaking

Showing posts with label government arts and science colleges. Show all posts
Showing posts with label government arts and science colleges. Show all posts

Friday, September 02, 2022

September 02, 2022

கல்லூரிக் கல்வி - 2022-23 - ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன

G.O-213-அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்

அரசுக் கல்லூரிகளில் 20% வரை இடங்கள் அதிகரிப்பு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, August 09, 2022

August 09, 2022

கவனம் பெறும் கலைக் கல்லூரிகள்: தமிழ் இலக்கியத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

தமிழகத்தில் பொறியியல் போன்ற தொழில் படிப்புகளை விட கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

சமீப ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வருகின்றன. குறைந்த கட்டணம் என்பதால் அரசு, அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் (காலை சுழற்சி வகுப்புகள்) சேர மாணவர்கள் விரும்புகின்றனர். கலைப் பிரிவுவில் தலா ஒரு வகுப்பிற்கு 60 பேரும், அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 40 மாணவ, மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 3 அல்லது 4 மடங்கு விண்ணப்பங்கள் வருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல் , தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை அடங்கிய மதுரை மண்டலத்திலுள்ள 29 அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் 2022 - 23-ம் கல்வியாண்டிற்கு பல இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 73,260 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 14, 430 மட்டுமே. 5 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக கல்லூரி கல்வி இணை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும் தமிழ் இலக்கியம், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி ஐடி பாடங்களில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அரசு கல்லூரி, மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, திருமங்கலம் அரசு கல்லூரிகளில் தமிழ் இலக்கிய பாடத்தில் சேர போட்டி அதிகரித்துள்ளது. திருமங்கலம் அரசு கல்லூரியில் ஏ மற்றும் பி தமிழ் பாட பிரிவுகளுக்கு தலா 60 பேர் மட்டுமே சேர்க்க முடியும் என்றாலும், 1,200 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பிற அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் 3 மடங்கு அதிகமானோர் தமிழ் பாடப்பிரிவில் சேர விரும்பியுள்ளனர். அரசு போட்டித் தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம், எளிதில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இப்பாடப்பிரிவை தேர்ந்தெடுகின்றனர் என, தமிழ்துறை பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, போலீஸ் எழுத்துத் தேர்வுகளில் தமிழ் இலக்கியங்களில் இருந்து கூடுதல் வினாக்கள் இடம் பெறுகின்றன. அரசு வேலை வாய்ப்பிலும் தமிழுக்கான முக்கியம் கருதியே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ் இலக்கியம், மொழியியல் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’’என்றார்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும்

*🛑⚡அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும்.*

*தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் தொடங்கியது.*

*கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது.*

*மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது.* *இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.*

*அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 163 கல்லூரிகளில் ஆக.5 முதல் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

*விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.*

Sunday, July 31, 2022

July 31, 2022

அரசு கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 27ஆம் தேதி நிறைவடைந்தது.



அதில் 4.07 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் செய்துள்ளனா். முதல்முறையாக கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.



மூன்று வகையான தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் வெளியிடும் என்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, July 11, 2022

July 11, 2022

கோவை அரசு கலைக் கல்லூரியின் மவுசு... ஒரே நேரத்தில் இத்தனை விண்ணப்பங்களா?

கோவை அரசு கலைக் கல்லூரியின் மவுசு... ஒரே நேரத்தில் இத்தனை விண்ணப்பங்களா?

கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டில், கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 7-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால், மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி சிபிஎஸ்இ பள்ளி தேர்வு முடிவுகள் வந்த 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பலர் விண்ணப்பித்தனர்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்ட 170 ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் முதல் முறையாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Friday, July 08, 2022

July 08, 2022

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளிவந்த பிறகு 5 நாள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்று அவகாசம் முடிந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Total Pageviews

Search This Blog