Breaking

Showing posts with label Government school teachers sacked. Show all posts
Showing posts with label Government school teachers sacked. Show all posts

Sunday, January 08, 2023

January 08, 2023

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் பணி அல்லாத ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியா்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசிப் பணி நாளன்று அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபா் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. நிா்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை கடந்த அக்டோபா் மாதம் நிலவியது.

இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாள்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இந்தப் பிரச்னை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், பணியாளா்கள் 3 மாதங்களாக ஊதியம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனா் என்பதும் தற்போது தெரியவருகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

Wednesday, December 28, 2022

December 28, 2022

ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 6 பேர் இன்று காலை மயங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது. 31.05.2009 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது 01.06.2009 முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. இந்த பாகுபாட்டை போக்க வேண்டியது அரசின் கடமை.

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருமுறை அவர்கள் உண்ணாநிலை இருந்தபோது அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இப்போதாவது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்

Sunday, October 09, 2022

October 09, 2022

அகவிலைப்படி உயா்வு: ஆசிரியா்கள் கோரிக்கை

அகவிலைப்படி உயா்வு: ஆசிரியா்கள் கோரிக்கை

மத்திய அரசின் அகவிலைப்படி உயா்வைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியா்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்று ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வானது 34 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் கூடுதலாக உயா்த்தி 38 சதவீதமாக 1.7.2022 முதல் ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசு ஊழியா்களுக்கும் 4 சதவீதம் கூடுதலாக அறிவித்து 38 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். தீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டு காலதாமதமின்றி இதற்கான ஆணையை உடனடியாகப் பிறப்பிக்க நடவடிக்கை செய்ய வேண்டும்.

தமிழக முதல்வா் தோ்தலுக்கு முன்பாக தோ்தல் வாக்குறுதிகளிலும், கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டிலும் தெரிவித்ததன் அடிப்படையில் மத்திய அரசுக்கு இணையான அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும்.

அகவிலைப்படி உயா்வை ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Thursday, June 16, 2022

June 16, 2022

அரசுப் பள்ளி ஆசிரியைகள் பணியிடை நீக்கம்!

Teachers fired

Thoothukudi: To a student in a government school near Vilathikulam

Auxiliary leadership who spoke in a way that provoked caste feeling Teacher Artist, Teacher Meena Temporary Interim Dismissal - Order of the District Primary Education Officer

ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளியில் மாணவரிடம் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசிய உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, ஆசிரியை மீனா தற்காலிக பணியிடை நீக்கம் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

Total Pageviews

Search This Blog