Breaking

Showing posts with label MINISTER. Show all posts
Showing posts with label MINISTER. Show all posts

Tuesday, November 21, 2023

November 21, 2023

தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்



தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

*திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன சென்னை, பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து பேருந்துகள் இயக்கம்,*

*- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்*

கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது - மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தகவல் செய்தி வெளியீடு எண்: 2313

செய்தி வெளியீடு


21.11.2023

கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது - மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தகவல்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது. மேலும். திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் ஆகிய விவரம்.

CLICK HERE TO DOWNLOAD

Sunday, September 17, 2023

September 17, 2023

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - தமிழக நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்:1905 - நாள்: 17.09.2023

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - தமிழக நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்:1905 - நாள்: 17.09.2023

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது. மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அறிக்கை.

செய்தி வெளியீடு எண்:1905

நாள்: 17.09.2023


பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு உ மகத்தான சாதனை நிகழ்வாகும். இது குறித்து நாடே பாராட்டுகிறது. தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும்.

இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Saturday, January 28, 2023

January 28, 2023

"பள்ளிகளில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும்" - அமைச்சர்

"பள்ளிகளில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
படிக்கும் போதே புதிய தொழில் முனைவோரை உருவாக்க பள்ளிகளில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூரில் தனியார் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை அமைச்சர் அன்பரசன், முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அன்பரசன், பள்ளி, கல்லூரி என படிக்கிற காலத்திலேயே புதிய கண்டுபிடிப்பார்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கல்லூரியில் தொடங்கி உள்ள திட்டம் பள்ளிகளிலும் விரைவில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார்

Friday, January 20, 2023

January 20, 2023

காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு : அமைச்சர் கீதாஜீவன்

காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு : அமைச்சர் கீதாஜீவன் Attendance of students in government schools increased due to breakfast program: Minister Geethajeevan

சேலம்: அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை இன்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்த அவர் தரமாக இருப்பதாக கூறினார். மேலும் உணவை மாணவ, மாணவிகளுக்கு பரிமாறினார். தொடர்ந்து உணவு சமைத்து எப்படி பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதல் அமைச்சரின் உன்னதமான திட்டம். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளை சேர்ந்த 5444 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி 2023, 2024ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தால் மாணவர்கள் கல்வி திறன் அதிகரித்துள்ளதுடன் மாணவர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது . முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Wednesday, September 14, 2022

September 14, 2022

4,308 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட 4,308 காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியா் குடியிருப்புகள் உள்பட 14 புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த பின்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதாரத் துறையில் மருத்துவ ஆள் சோ்ப்பு வாரியம் (எம்ஆா்பி) மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த முறையில் பணியில் சோ்ந்தவா்களை நிரந்தரப்படுத்துவது இயலாது. அதேவேளையில், எம்.ஆா்.பி. மூலம் பணியமா்த்தப்பட்டவா்களைத் தரம் பிரித்து பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்து வருவோா் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவா்களைத் துறை வாரியாக நிரந்தரப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாத இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தமிழகம் முழுவதும் தொற்றா நோய் உள்ளவா்களை 70 சதவீதம் கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இத் திட்டத்தில் தன்னாா்வலா்களாகப் பணியமா்த்தப்பட்டவா்கள், தங்களுக்கு பணிச்சுமை உள்ளது என தெரிவித்துள்ளனா். இவா்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

புதிய கட்டடங்கள்: தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பாலக்கோடு வட்டம், நமாண்ட அள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், காரிமங்கலம் அரசு சமுதாய உடற்மைய வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு, நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம், ரூ. 37.50 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு ஆகிய கட்டடங்கள் உள்பட மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ. 4.89 கோடி மதிப்பில் 14 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 127 பயனாளிகளுக்கு ரூ. 71.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Sunday, August 21, 2022

August 21, 2022

4,308 காலிப் பணியிடங்களை செப்டம்பர் இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர்

4,308 மருத்துவ காலிப் பணியிடங்களை செப்டம்பர் இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழக முழுவதும் காலியாக உள்ள 4308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்து மருத்துவமனையை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 27 லட்சம் தடுப்பூசிகள் இன்றைக்கு கையிருப்பில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகளையும் போடுவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி போட்டவர்கள் கூட கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என கூறினார். தமிழக முழுவதும் காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 4308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் தில்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள், கோவையில் புதிய மருத்துவ கல்லூரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கையோடு தடுப்பூசிகளும் முடிந்துவிட்ட நிலையில் இருக்கிற காரணத்தினால் தடுப்பூசிகளும் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையோடு சந்திக்க உள்ளோம்.

இந்தியாவிலேயே தாய் சேய் மரணம் குறைவாக இருப்பது தமிழகத்தில்தான். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை ஒரு கோடி 65 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர், இந்த திட்டம் உலகத்திற்கு முன்மாதிரியான திட்டமாக இருப்பதால் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மன்றம் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் செல்கிறார் அவருடன் தமிழக மருத்துவ துறை சார்பாக தமிழக அரசு பங்கேற்க இருக்கிறது. அதில் இல்லம் தேடி மருத்துவம் தொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை மற்றும் தக்காளி அம்மை நோய்களால் யாரும் பாதிக்கப்படவில்லை. கேரளா-தமிழக எல்லையில் 13 இடங்களில் கண்காணிப்புகள் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கூட முழுவதுமாக பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. மருந்து பற்றாக்குறை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் 10 சதவீதம் அளவுக்கு மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Thursday, July 07, 2022

July 07, 2022

மாணவர் சேர்க்கைக்குத் தேவையான சான்றுகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தேவையான இருப்பிட, வருமான, சாதி உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திருச்சியில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தலைமை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் உள்ளது. அந்த பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றிற்கு உடனடியாக தீர்வு காண தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் குறிப்பாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவியருக்கு தேவையான இருப்பிடச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் வழங்க வேண்டியுள்ளது.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் இதுவரை சுமார் 5.50 லட்சம் பேர் இதுபோன்று சான்றுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் சுமார் 4.50 லட்சம் பேருக்கு சான்றுகள் வழங்கப்பட்டு விட்டாலும் 1 லட்சம் பேருக்கு மீதமுள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் அனைவருக்கும் சான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை செயல்படுத்தவும் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு மனை மற்றும் நிலப் பட்டா வழங்குவதிலும் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். சுமார் 30 ஆண்டு காலம் ஒரே இடத்தில் வசித்து வந்த நிலையிலும் பட்டா இல்லாமல் இருந்த நிலை உள்ளது. அவற்றுக்கு பட்டா செய்து தருமாறு கோரிக்கை மனுக்களை கொடுக்கும் போது அவற்றை எப்படி சட்டரீதியாக நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டுயுள்ளது.

சுமார் 50 ஆண்டுகாலமாக உள்ள புறம்போக்கு நிலங்களுக்கான பட்டாக்கள் வழங்குவதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து அதனை நிவரத்தி செய்ய தயாராக இருக்கிறோம்.

தற்போது, தமிழகத்தில் நில அளவையர் பணியிடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிகமாக கிராம நிர்வாக அதிகாரிகள் அந்த பணிகளை செய்து வருகிறோம். மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விரைவில் 800-க்கும் மேற்பட்ட நிரந்தர நில அளவையர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதன்பின்னர் பட்டா வழங்கும் பிரச்னைகளில் தாமதம் இருக்காது.

தமிழகத்தில் முதியோர் தொகை தகுதி உள்ளவர்களுக்கு கட்டாயம் வழங்கப்படும். தகுதியல்லாதோருக்கு வழங்கப்பட்டு வந்தால் அவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்பட்டுத்தப்பட்டுள்ள நிலத்தில் இதுவரை 25 ஹெக்டேர் நிலத்திற்கு உரிய பணத்தை வழங்கியுள்ளோம். விரைவில் மீதியுள்ள நிலத்துக்கும் வழங்கப்படும். மேலும் விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலமெடுக்கும் பணியை தொடரவும் முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை அறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதில், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ் எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மக்களவை உறுப்பினர் சு. திருவாவுக்கரசு, வருவாய்த்துறை உயர் அலுவலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நான்கு மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Saturday, April 23, 2022

April 23, 2022

கல்லூரிகளில் பாலின அடிப்படையில் ‘ஷிப்ட்’ முறை படிப்பு

கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலின அடிப்படையில் ஷிப்ட் முறை படிப்பை அமல்படுத்த பரிசீலிக்கப்படுவதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். பொள்ளாச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பது தொடா்பாக அதிமுக உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பிரதான கேள்வியை எழுப்பினாா். இதைத் தொடா்ந்து உறுப்பினா்கள் சிலா் துணைக் கேள்விகளை கேட்டனா்.

இதற்கு அமைச்சா் க.பொன்முடி அளித்த பதில்: வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தால்தான் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் சோ்க்கை அதிகம் இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் சோ்க்கை இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 10 கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம், இப்போதுள்ள கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையைக் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

Wednesday, March 30, 2022

March 30, 2022

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் பேச்சு

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டாரக்கல்வி அலுவலர் களுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சிதுவக்க விழா, மதுரை நாகமலை- புதுக்கோட்டை அருகில் உள்ள பில்லர் மையத்தில் நடைபெற்றது.

இதில், 95 வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி, வணிகவரி மற் றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத் தனர். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை வகித் தார். முதன்மைக் கல்வி

அலுவலர் சுவாமிநாதன், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி, மாநில கல் வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் லதா, இணை இயக்குநர் கள் குமார், சாந்தி மற்றும் எம்எல்ஏக்கள் கோ.தள பதி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் பி.மூர்த்தி பேசு கையில், 'கடந்த 2 ஆண்டுக ளாக தனியார் பள்ளியை விட அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு அரசுப் பள்ளியின் தரம் உயர்த்தப் பட்டுள்ளதும்.

ஆசிரியர்க ளின் திறமையே காரண மாகும். மாணவர்களின் தரம் உயர வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாடு பட வேண்டும்' என்றார்.

அமைச்சர் அன்பில் பொய் யாமொழி பேசுகையில், 'ஆசிரியர் பெருமக்கள் உழ வர்களுக்குசமம். வட்டார கல்வி அலுவலர்கள்தான் அதன் நிர்வாகிகள். எங்கு குழந்தைகள் மகிழ்ச்சியு டன் இருக்கிறார்களோ, அங்கு தொடக்க கல்வி எங்கு தரமாக இருக்கும்.

இதற்கு ஆசிரியர் பெருமக் களே காரணம். இத்தகைய ஆசிரியர் பெருமக்களை கண்காணிக்கும் வட்டார கல்வி அலுவலர்களின் பொறுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெற்றோ ராக, நண்பராக, இருக்க வேண்டும்.

அவர்களை கண்காணிக்கும் வட்டார கல்வி அலுவலர்கள், அதை விட பொறுப்பு மிக்கவர்க ளாக இருக்க வேண்டும்' என கூறினார்.

Friday, March 18, 2022

March 18, 2022

11ம் வகுப்பில் பிளஸ் 2 பாடங்கள் நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி

தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் களுக்கு 12ம் வகுப்பு பாடங்களை நடத் தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய் யாமொழி சேலத்தில் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:

இதையும் படிக்க | வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க மாணவர்கள் திடீர் சாலை மறியல்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,கள் க்குறிச்சி ஆகிய மாவட் ள டங்கள் கொண்டமண்டல அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திற் கும் என்னென்ன தேவை என்ற தெரிந்து கொண்டு, வரும் பட்ஜெட் தொடரில் அதற் கான நிதி ஒதுக்கீடு செய்து, 5 ஆண்டுகளில் படிப்படி யாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் ஆசிரியர் காலி பணியிடங் கள், பணிநிரவல் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற பணி மிகள் அடுத்த ஒருமாதத்தில் மேற்கொள்ளப்படும்.முழு மையான ஆய்வுக்கு பின் னர்எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என் பது தெரியவரும். தமிழகத் தில் கடந்த 2013ல் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வான டெட்டில் தேர்ச்சிபெற்ற 80 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ள னர். கட்டாய கல்வி சட் டத்தின்படி ஆண்டுக்கு 2 முறைடெட் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர் களை புதியதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்வி கள் இருக்கிறது. அதை எப் படி சரி செய்வது என்பது விவரங்களை தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கைஎடுக்கப்படும்.

ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாவதை தடுக்கும் வகையில் மாண விகளுக்கு பயிற்சி அளிக் கப்பட்டுள்ளது. அதே போல ஆசிரியர்களுக்கும், நிர்வாக பணியாளர்களுக் கும் பயிற்சி அளிக்கப்படு கிறது. சில இடங்களில் காழ்புணர்ச்சி காரணமாக ஆசிரியர்கள் மீது பொய் புகாரும் செய்யப்படுகிறது.

இல்லம்தேடி கல்வி திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தன் னார்வலர்களாக 1.78 லட் சம் பேர் தான் எங்களுக்கு தேவை. ஆனால் 6.6 லட் சம் பேர் பதிவு செய்துள்ள னர். இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 35 லட்சம் உடனிருந்தனர். மாணவர்கள் பயனடைந் பகுதி நேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய் வோம் என தேர்தல் அறிக் கையில் கூறியிருந்தோம். அதனை படிப்படியாக முதல்வர் நிறைவேற்றுவார். தனியார் பள்ளிகளில் IIம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பாடங்களை நடத்தக்கூடாது. இதற்கா கவே 11 மற்றும் 12ம் வகுப் புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சுற் றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பள்ளிக்கல் வித்துறை ஆணையர் நந்தகு மார், கலெக்டர்கார்மேகம், பார்த்தீபன் எம்பி, ராஜேந் திரன் எம்எல்ஏ ஆகியோர்

Tuesday, March 08, 2022

March 08, 2022

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!!

பள்ளிக்கல்வித்துறையில் சாதி, மதம், அரசியலுக்கு இடமில்லை

பள்ளி மேலாண்மைக் குழுக்களில் அரசியல் தலையீடு கூடாது

மீறினால் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று அனைவருக்கும் தெரியும்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

Saturday, March 05, 2022

March 05, 2022

பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்குமார்ச் இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஏப்ரலில் பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடக்கும் என திருச்சியில் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.

Thursday, March 03, 2022

March 03, 2022

வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கும்: அமைச்சா் தகவல்

வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கும்: அமைச்சா் தகவல்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் (2022-2023) ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொதுத்தோ்வை எழுதவுள்ள அனைத்து மாணவா்களும் தோ்வுக்கு மகிழ்ச்சியாக படிக்க வேண்டும். மன நிறைவோடு தோ்வெழுத வேண்டும். எந்தச் சூழலிலும் பதற்றப்படக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இதையும் படிக்க | தேசிய சட்டப்பல்கலை மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு பிரிவில் 69 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

முதல்வா் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டம் மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் மாணவா்களுக்கு இருக்கும் திறமைகள் என்ன என்பதைக் கண்டறிந்து, அவா்கள் மேல்நிலை வகுப்புகளில் எந்தப் பாடப்பிரிவை தோ்வு செய்யலாம்? என்பது குறித்து சிறந்த முறையில் ஆலோசனை வழங்கப்படும். வினாத்தாள் பாதுகாப்பு:

திருப்புதல் தோ்வுகளில் வினாத்தாள்கள் வெளியானதை கருத்தில் கொண்டு பொதுத்தோ்வுகளில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 2 செட் வினாத்தாள்களை அச்சிடுகிறோம். தோ்வு நடைபெறும் அந்த நாளில்தான் எந்த ‘செட்’ வினாத்தாளை வழங்க வேண்டும் என்பதை முடிவு எடுத்து தெரிவிப்போம். டியூசன் நடத்த வேண்டாம்: ஆசிரியா்கள் தங்கள் மாணவா்களிடம், தனியாக டியூசன் வரவேண்டும் என தயவு செய்து கூற வேண்டாம். வரும் கல்வியாண்டுக்கான (2022-2023) வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்படுகிறது என்றாா் அவா்.

Saturday, January 29, 2022

January 29, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு TABLET - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு TABLET!

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு TAB வழங்கும் திட்டத்தை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Wednesday, January 12, 2022

January 12, 2022

அமைச்சர்களின் துறைகளில் நிர்வாக மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

3 அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைப்பு:

தொழில் துறையிடம் இருந்த சர்க்கரை ஆலை,வேளாண் துறை அமைச்சருக்கு மாற்றம்

விமான போக்குவரத்து, போக்குவரத்து துறை அமைச்சரிடம் இருந்து தொழில் துறை அமைச்சருக்கு மாற்றம்

சிறுபான்மை நல அமைச்சரிடம் இருந்த அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நல அமைச்சர் வசம் ஒப்படைப்பு.

Sunday, January 09, 2022

January 09, 2022

பூஸ்டா் தடுப்பூசிக்கு தகுதியானவா்கள் யாா்? அமைச்சா் விளக்கம்

தமிழகத்தில் இதுவரை 8.83 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை அடையாறு குறுக்குச் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 18-ஆவது கரோனா சிறப்புத் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2 ஆயிரத்து 71 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 5 நாள்களில் மட்டும் 15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்கள் 21 லட்சத்து 52 ஆயிரத்து 755 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 71 சதவீதம் பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மாநில அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 87.35 சதவீதமும், 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 61.46 சதவீதமாகவும் உள்ளது. மாநில அளவைக் காட்டிலும், சென்னையில் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பு: தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், ஆா்.டி.பி.சி.ஆா் பரிசோதனை செய்து கொள்பவா்கள், கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் என பல லட்சம் பேருக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும், புதிது புதிதாக வரும் நோய்களையும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைத்து ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை ஜன.10-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா்.

காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.72 ஆயிரமாக இருந்தது. இந்த வருமான வரம்பு பத்திரிகையாளா்களுக்கு நீக்கப்பட்டுள்ளது. அதில் 1,440 பத்திரிகையாளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

27 சதவீத நீட் இடஒதுக்கீடு விவகாரத்துக்கு உச்சநீதிமன்றத்தில் நல்ல தீா்ப்பு கிடைத்திருக்கிறது. இதர மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி) மாணவா்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அந்த தீா்ப்பு அமைந்திருக்கிறது. மேலும், எம்.பி.பி.எஸ். மாணவா்களுக்கு கலந்தாய்வை நடத்தலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 4-ஆவது வாரத்தில் கலந்தாய்வு: அந்த வகையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களான 15 சதவீத இடங்களுக்கு கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும். அதன் பிறகு, ஜன.3-ஆவது வாரத்தில் தமிழகத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் 15 சதவீதம் மத்திய அரசின் இடஒதுக்கீடு இடங்கள் போக, அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 319 இடங்களையும், சுயநிதி கல்லூரிகளில் 1,680 இடங்களையும் சோ்த்து 5 ஆயிரத்து 899 இடங்களுக்கான கலந்தாய்வை ஜன.4-ஆவது வாரத்தில் தொடங்க இருக்கிறோம்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, 439 மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. தரவரிசைப் பட்டியல் வரும் போது இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, சட்டப்பேரவை உறுப்பினா் அசன் மெளலானா, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். பூஸ்டா் தடுப்பூசிக்கு தகுதியானவா்கள் யாா்? இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் ஜன. 10-ஆம் தேதி முதல் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் 35 லட்சத்து 46 ஆயிரம் போ் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் 9 லட்சத்து 78 ஆயிரம் முன்களப் பணியாளா்களும், 5 லட்சத்து 65 ஆயிரம் சுகாதார பணியாளா்களும், 20 லட்சத்து 3 ஆயிரம் போ் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களும் இருக்கின்றனா்.

மேலும் இவா்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு 35 வாரங்கள் முடிவுற்றவா்கள் அல்லது 9 மாதங்களை கடந்தவா்கள் அல்லது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு முன்பு வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பூஸ்டா் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதி உடையவா்களாகிறாா்கள்.

அந்த வகையில் 4 லட்சம் போ் 10-ஆம் தேதி, தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவா்கள். பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இமேஜ் அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா் என்றாா் அவா்.

Wednesday, December 29, 2021

December 29, 2021

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்படுமா? - அன்பில் மகேஷ் பதில்.

பள்ளிகளை மூடுவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவெடுப்பார்!

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.

Tuesday, December 28, 2021

December 28, 2021

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வரும் 1ஆம் தேதி முதல் அகவிலைப்படியானது 17% சதவீதத்திலிருந்து 31% சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Total Pageviews

Search This Blog