RANK LIST
June 11, 2024
Showing posts with label RANK LIST. Show all posts

Tuesday, June 11, 2024
Thursday, September 07, 2023
RANK LIST
September 07, 2023
பொறியியல் படிப்புகளில் துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.60 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22 முதல்செப்.3-ம் தேதி வரை இணையவழியில் நடந்தது. இதன் முடிவில் 90,201 இடங்கள் நிரப்பப்பட்டன. இன்னும் 70,579 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இந்த காலி இடங்கள் துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். முதல்கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை தெரிவித்தது. அதன்படி, துணை கலந்தாய்வுக்கு 17,710 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியல் தற்போதுவெளியாகியுள்ளது. அதில் பொதுப் பிரிவில் 200-க்கு 199.5கட்ஆஃப் மதிப்பெண் பெற்று மாணவி வேதலட்சுமி முதல் இடம்பெற்றுள்ளார். 199 மதிப்பெண்ணுடன் ராம் பிரசாத், 198.5 மதிப்பெண்ணுடன் துருவன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவி பிரியதர்ஷினி 188.5 கட்ஆஃப் மதிப்பெண்ணுடன் தரவரிசையில் முதல் இடம் பெற்றார்.
இவர்களுக்கான துணை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க சுமார் 17,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமான இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து பின்னர் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிமுறைகளின்படி, மாணவர்கள் பிடித்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் செப். 9-ம் தேதி நிறைவு பெறும். பிறகு, எஸ்சிஏ காலி இடங்களுக்கான கலந்தாய்வு செப்.10, 11-ம் தேதிகளில் நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Wednesday, July 26, 2023
Veterinary Course
July 26, 2023
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு; 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். - Press Release
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு; 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். - Publication of rank list for veterinary medicine and animal husbandry courses; 31 students scored 200 out of 200 marks.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை - 600 051 பத்திரிகை செய்திக்குறிப்பு
நாள்: 26.07.2023
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSC & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech - உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வனத் தொழில்நுட்பம்) மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 12.06.2023 முதல் 30.06.2023 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்பட்டன. மொத்தமாக பெறப்பட்ட 22535 விண்ணப்பங்களுள், 18752 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும் (BVSC & AH, 3783 விண்ணப்பங்கள், இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech - உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) பாடப்பிரிவிற்கும் முறையே பெறப்பட்டன. 2023-24ஆம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் 26.07-2023 அன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலின் விவரங்களை httrsim tanuvas.ac.in மற்றும் htlrstanuvas.ac.in இணையதளங்களின் வாயிலாக காணலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு (கலையியல் பிரிவு) - BV5c & AH (Academic), 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர் ராகுல் காந்த் எம். தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த கனிமொழி வி. தென்காசி மாவட்டத்தை சார்ந்த முத்துலட்சுமி எஸ், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த நந்தினி கே. திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த கிரேஸ் கிரிஷ்பு, தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த விஷ்வா டி. அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வசந்தி வி. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த லோபாஷினி எம். அரியலூர் மாவட்டத்தை சார்ந்த சக்தி குமரன் எஸ் மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த கவுசிகா எஸ் ஆகிய 10 மாணவ / மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் இடங்களை பெற்றுள்ளனர். இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech) தரவரிசைப் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த விஷ்ணுபிரகாஷ் எம் 199.500 க்கு 200.000 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த மாணவி தர்ஷா (198.500) இரண்டாம் இடத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த வர்ணஓவியா எம் (198,000) மற்றும் கடலூர் மாவட்டத்தை சார்ந்த லோகேஷ் குமார் பி (198,000) மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான (7.5%) முன்னுரிமை இடஒதுக்கீட்டு பிரிவின்கீழ், சேலம் மாவட்டத்தை சார்ந்த விக்னேஷ் கே மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த அஜய் எஸ் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் இடங்களை பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த பானுபிரியா வி (199.500) மற்றும் மதுரை மாவட்டத்தை சார்ந்த நித்யா டி (199.500) பெற்று இரண்டாம் இடத்தையும் மதுரை மாவட்டத்தை சார்ந்த தாமரை செல்வி ஆர் பி (198.500) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த சிவா வி (198.500) அவர்கள் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSC & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech - உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்காலிக தரவரிசை பட்டியல் பற்றி ஏதேனும் விசாரணை இருப்பின் தொலைபேசி எண். 044 - 2999 4348 / 2999 4349 அழைக்கவும்.

Monday, June 26, 2023
Tuesday, October 04, 2022
revised exam result
October 04, 2022
திருத்தப்பட்ட பொதுநுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
திருத்தப்பட்ட பொதுநுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு - Release of Revised Public Entrance Examination Rank List
கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, திருத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வு தரவரிசைப் பட்டியலை மாநில அரசு வெளியிட்டது.
கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, 2022-23-ஆம் ஆண்டில் தொழில் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்குத் தகுதியான மாணவா்களின் திருத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வு தரவரிசைப் பட்டியலை கா்நாடக தோ்வு ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் காணலாம்.
இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம், உயா்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா கூறியது:
கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பொதுநுழைவுத் தோ்வின் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிட்டிருந்த தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருந்த 1 முதல் 500 வரையிலான மாணவா்களின் முடிவில் மாற்றமில்லை. கா்நாடக உயா்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த சூத்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் தோ்ச்சிபெற்று, 2022-ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத்தோ்வை 24 ஆயிரம் மாணவா்கள் எழுதியிருந்தனா்.
உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தரவரிசைப் பட்டியல் தயாரிப்பின் முதல் சுற்றில், 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் இம்மாணவா்கள் பெற்றிருந்த மதிப்பெண்களில் 6% குறைக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில், இம்மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் 50%, பொதுநுழைவுத்தோ்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் 50% மதிப்பெண்களை கூட்டி, அதில் கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தரவரிசைப்பட்டியலில் 501 முதல் 1000 வரையிலான இடத்தில் 14 மாணவா்களும், 1000 முதல் 10,000 வரையிலான இடத்தில் 2063 மாணவா்களும், 10,001 முதல் 1,00,000 வரையிலான இடத்தில் 22,022 மாணவா்களும் இடம்பெற்றுள்ளனா். திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. மாணவா்கள் பொறியியல், வேளாண்மை, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புகளுக்கு மட்டும் சோ்க்கை பெறலாம். கால்நடை மற்றும் மருந்தியல் படிப்புகளுக்குபொது நுழைவுத்தோ்வில் பெற்ற மதிப்பெண்களின்படி தரவரிசைப் பட்டியல்கள் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்றாா்.

Saturday, October 01, 2022
Young Science Course
October 01, 2022
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Publication of Admission Rank List for Young Science Course in Agricultural University - வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு, இளம்அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 200-க்கு200 தரவரிசை பெற்று 7 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு இளம்அறிவியல் பாடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கு இளம்அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 6,980 இடங்களுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்புக் கல்லூரிகளில் 2,567 இடங்களும், இப்பல்கலைக்கழகத்தை சார்ந்த 28 இணைப்புக் கல்லூரிகளில் 4,413 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. இணைப்புக் கல்லூரிகளில் அரசு இடம், மேனேஜ்மென்ட் இடம் என இரு பிரிவுகள் உள்ளன.
65 சதவீத அரசு இடத்தில் 2,868 பேரும், மேனேஜ்மென்ட் இடத்தில் 1,545 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தரவரிசைப் பிரிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 200-க்கு 200 தரத்தை 7 பேர் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆன்லைன் முறையில் கலந்தாய்வு: மருத்துவக் கலந்தாய்வு முடிந்தவுடன், வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இதுதொடர்பான அனைத்து விவரங்களும் www.tnau.ac.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜி.கோபி, ஈரோடு மாவட்டம் எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஆர்.சுப, புதுக்கோட்டை மாவட்டம் சவுடாம்பிகா மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவர் ஆர்.கார்த்திக் ராஜா,சேலம் ஏஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிதாரணி செங்கோட்டு வேலு, ஈரோடு மாவட்டம் யுஆர்சி பள்ளி மாணவர் டி.முத்துப்பாண்டி, தருமபுரி மாவட்டம் அவ்வை மெட்ரிக் பள்ளி மாணவி எம்.ஹரிணிகா, ராமநாதபுரம் மாவட்டம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.ராஜ ஐஸ்வர்ய காமாட்சி ஆகிய 7 பேர் 200-க்கு200 தரம் பிடித்து முதலிடம் பிடித்துள்ளனர்.

Tuesday, August 16, 2022
TAMILNADU ENGINEERING ADMISSIONS 2022
August 16, 2022
TAMILNADU ENGINEERING ADMISSION - 2022 - GOVERNMENT SCHOOL STUDIED (7.5% RESERVATION) - ACADEMIC - PROVISIONAL RANK LIST - PDF

CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
TAMILNADU ENGINEERING ADMISSIONS 2022
August 16, 2022
TAMILNADU ENGINEERING ADMISSION - 2022 - DIFFERENTLY ABLED PERSON - ACADEMIC - PROVISIONAL RANK LIST - PDF

TAMILNADU ENGINEERING ADMISSION - 2022 - GENERAL ACADEMIC - PROVISIONAL RANK LIST - PDF

Friday, February 11, 2022
RANK LIST
February 11, 2022
எம்பிபிஎஸ், பிடிஎஸ் - 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கல்லூரிகள் தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவு: 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் வெளியீடு
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கை கல்லூரிகளை தேர்வு செய்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் இணையதளத்தில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 6,082 கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 8ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. சென்னையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசு பல்மருத்துவ கல்லூரிகளிலும், அதைப்போன்று தமிழகம் முழுவதும் 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டனர். நேற்றுடன் இப் பணி முடிவடைந்தது. இதையடுத்து கல்லூரிகள் குறித்த விபரங்கள் வரும் 15ம் தேதி https://tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்று 17ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 3 மணிக்குள் அந்தெந்த கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும்.
இதையும் படிக்க | அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற உத்தரவு?? சென்னை உயர் நீதிமன்றம்
அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெறும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.