language courses
March 01, 2026
Showing posts with label Kendriya Vidyalaya schools. Show all posts

Sunday, March 01, 2026
Monday, March 31, 2025
Monday, March 24, 2025
Tuesday, March 18, 2025
Sunday, March 02, 2025
Friday, February 21, 2025
Thursday, March 14, 2024
Sunday, March 26, 2023
KVS
March 26, 2023
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம் - Kendriya Vidyalaya Sangathan (HQs) New Delhi Admission Notice: 2023-24
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆன்லைனில் விண்ணப்பம்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும்.
மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும்அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைவிண்ணப்பப் பதிவு சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்.3-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி 12-ம் தேதி மாலை 4 மணிக்கு முடிவடையும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் காலியிடங்கள் (2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்) இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 1. Online Registration for Admission to Class-I in Kendriya Vidyalayas for the Academic Year 2023-24 will commence at 10:00 am on 27.03.2023 and will close at 07:00 pm on 17.04.2023. The Admission details are available on website https://kvsonlineadmission.kvs.gov.in and Android MobileApp.
2. Minimum age for admission in class-I will be 6 years. Reckoning of age for all Classes shall be as on 31.03.2023. Reservation of seats will be as per KVS Admission Guidelines 2023-24 available on the Website (https://kvsangathan.nic.in)
3. The official Android Mobile App for KVS Online Admission for Class-I for the Academic Year 2023-24 and instructions for downloading and installing the App will be available at https://kvsonlineadmission.kvs.gov.in/apps/. The app will be available at the above URL and also at Google Play Store. Parents are requested to go through the instructions for using the portal and mobile app carefully before using them.
4. Registration for Class II and above will be started from 03.04.2023 (Monday) at 08:00 am to 12.04.2023 (Wednesday) upto 04:00 pm if vacancies exist in offline mode only. The duly filled up form needs to be submitted to the office of the Principal in the respective KV. 5. All information regarding Admission & Registration forms for Class-II and above are available in the Vidyalaya Websites and registrations can be done as per the Schedule for Admission -2023-24.
6. Registration for Class-II and above will be accepted only if vacancy exists in the respective KV.
7. Admission will not be granted, if wrong and misleading information in the application form is found at the time of scrutiny by the KV.
8. Contact Principal/Admission In-charge only when called in the given time slot.
Monday, October 03, 2022
LKG in this school
October 03, 2022
இந்த பள்ளியில் எல்.கே.ஜி. தொடக்கம்.. வெளியானது மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
இந்த பள்ளியில் எல்.கே.ஜி. தொடக்கம்.. வெளியானது மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. - LKG in this school. Commencement.. Student Admission Notification Released.
நாடு முழுவதும், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா (கே.வி) பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது. மத்திய - மாநில அரசுப் பணியாளர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. காலியிடங்கள் இருந்தால், பொது தரப்பினர் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே கே.வி. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஐந்தாக இருந்த குறைந்த பட்ச வயது, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'பால்வாடிகா' என்ற பெயரில் ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த அறிவிப்பை, சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கே.வி.பள்ளி முதல்வர் மாணிக்கசாமி வெளியிட்டுள்ளார்.அதில், "பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும், பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும், பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் 10-ம் தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை பதிவுகள் நடக்கும். பாலவாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் வகுப்புகளுக்கு, 73051 60907, 971058 8122 என்ற எண்களில் ஐ.ஐ.டி.யில் உள்ள கே.வி. பள்ளியை தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 27, 2022
மத்திய அரசு
July 27, 2022
கேந்திரிய வித்யாலயாக்களில் 12,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் - மத்திய அரசு
தமிழகத்தில் அதிகபட்சமாக 1,162 காலியிடங்களும், மத்தியப் பிரதேசத்தில் 1,066 இடங்களும், கர்நாடகாவில் 1,006 இடங்களும் உள்ளன.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலியிடம் குறித்து லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, கல்வித் துறை இணை அமைச்சர் ஸ்ரீமதி அன்னபூரணா தேவி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து அரசு கவலைப்படுகிறதா? குறிப்பாக தமிழ்நாட்டில்; அப்படியானால் தமிழ்நாட்டில் உள்ள மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இவ்வளவு பெரிய காலியிடங்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, மாநில வாரியாக; இந்தப் பணியிடங்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரப்புவதற்கான செயல்திட்டத்தை அரசாங்கம் சிந்தித்து வருகிறதா என்பதையும் மற்றும் அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் இதில் அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக? என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி, ஓ.பி ரவீந்திரநாத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஸ்ரீமதி அன்னபூரணா தேவி , தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் 12044 ஆசிரியர் பணியிடங்களும், 1332 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன. மாநில யூனியன் பிரதேசம் வாரியாக அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு எதிராக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் இணைக்கப்பட்டுள்ளன.
மொத்த காலியிடங்களின் விவரங்கள் & இடமாற்றம். பணி ஓய்வு போன்றவற்றால் அவ்வப்போது காலியிடங்கள் எழுகின்றன. காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர்ச்சியான செயலாகும், மேலும் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிகளின் விதிகளின்படி காலியிடங்களை நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கற்பித்தல்-கற்றல் செயல்முறை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கேந்திரிய வித்யாலயா சங்கதன் மூலம் தற்காலிக காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என பதில் அளித்துள்ளார்.

Thursday, March 31, 2022
STUDENTS
March 31, 2022
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது 6-ஆக உயர்வு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியதில் இருக்கும் பின்புல காரணங்கள் என்ன எனவும் எல்கேஜி வகுப்பில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான சிறார்கள் பாதிக்கப்படுகிறார்களா எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பு சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்தியது ஏன்? என்றும், அதற்கான பின்புல காரணம் என்ன என்றும் மாநிலங்களவையில் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அமைச்சர் அளித்த விளக்கத்தையும் வைகோ வெளியிட்டுள்ளார். மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்வி , “ கீழ்காணும் கேள்விகளுக்கு, கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா?
1. 2022 கல்வி ஆண்டிற்கான, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை, ஐந்தில் இருந்து 6ஆக உயர்த்தி இருக்கின்றீர்களா?
2. அவ்வாறு இருப்பின், தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கான பின்புலக் காரணங்கள் என்ன?
3. எல்கேஜி வகுப்புகளை முடித்த இலட்சக்கணக்கான குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றார்களா?
4. அவ்வாறு இருப்பின், அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ளுமா? முந்தைய வழமை போல் சேர்க்கை நடைபெறுமா?
5. இல்லை என்றால், அதற்கான காரணம் என்ன? கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி விளக்கம் 1 முதல் 3 கேள்விகளுக்கு விளக்கம் : ஆம். 2022/23 கல்வி ஆண்டில், 1.04.2022 முதல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு, 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2. 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின்படி, 5+3+3+4 என்ற கற்பித்தல் முறை வகுக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி, அங்கன்வாடி, பாலவாடிகா மற்றும் 3 ஆண்டுகள் முன்பள்ளிக் கல்வி ஆகியவை, 3 முதல் 6 வயது வரையிலும், 1,2 ஆம் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளும் என வகுக்கப்பட்டு இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. நாட்டில் பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசுகள், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் அதிகாரத்தில் உள்ளன. எனவே, முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து, மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அவற்றுள் 14 அரசுகள், வயது வரம்பு 5 ஆக இருக்க வேண்டும் என்றும், 22 அரசுகள் வயது வரம்பு 6ஆக இருக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளன. இந்த ஒழுங்கு இன்மை, பதிவு செய்தல் பற்றிய தவறான அறிக்கைகளால் விளைகின்றது. இதனால், வெவ்வேறு மாநிலங்களில் நிகர சேர்க்கை விகிதம் பாதிக்கப்படுகின்றது. அதன்பின்னர், தேசிய அளவில் நடைபெறுகின்ற போட்டித் தேர்வுகளிலும், இந்த சிரமங்கள் எதிரொலிக்கின்றன. 2020 புதிய கல்விக்கொள்கை, 2009 குழந்தைகள் கல்வி உரிமைச்சட்ட விதிகளின் பார்வையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், மார்ச் மற்றும் அக்டோபர் சேர்க்கை நாள்களில், முதலாம் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பை, நாடு முழுமையும் ஒன்றுபோல, 6ஆக ஆக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேள்வி 4 க்கு விளக்கம். இந்தப் பிரச்சினை, நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது. “ என்று குறிப்பிட்டுள்ளார்.