கலந்தாய்வு
August 09, 2022
Showing posts with label கலந்தாய்வு. Show all posts

Tuesday, August 09, 2022
Monday, August 08, 2022
பொறியியல் கல்லூரி
August 08, 2022
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆக.25-ல் தொடக்கம்
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவினர் கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு ஆகஸ்ட் 20 முதல் 23 வரை நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கான பணிகள் அனைத்தும் அக்டோபர் 24ஆம் தேதியுடன் நிறைவுபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆகஸ்ட் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
தர வரிசைப் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது
அக்டோபர் 21ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது
கலை
August 08, 2022
கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது.
அதன்படி, விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர். அதில் 3 லட்சத்து 34,765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தக் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் அடிப்படையில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் சிறப்பு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி உள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி சேர கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 1000 இடத்திற்கு 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் வெளியான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் 3 கல்லூரிகள் டாப் 10 பட்டியலில் மாநிலக் கல்லூரி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Thursday, August 04, 2022
மாணவா் சோ்க்கை
August 04, 2022
சரபோஜி கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.5) தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் து. ரோசி தெரிவித்திருப்பது:
இக்கல்லூரியில் 2022 - 23 -ஆம் கல்வி ஆண்டில் இளநிலை (பி.லிட்., பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., பி.பி.ஏ.) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ளது.
விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்குக் கலந்தாய்வுக்கான பாடப்பிரிவுகளும், அதற்கான தேதிகளும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு இத்தகவல் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி முடிவடைகிறது.

Tuesday, July 26, 2022
கல்லூரிகள்
July 26, 2022
ஆக.1-க்குப் பிறகு கலந்தாய்வு: அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம் , பிஎஸ்சி-ஐடி பிரிவுகளுக்கு போட்டி அதிகரிப்பு
அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி-ஐடி முதலான பாடப் பிரிவுகளுக்கு போட்டி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 1ம் தேதிக்குப் பிறகு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டாகவே பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பிட்ட ஒரு பாடத்தில் பட்டம் பெற்று, போட்டித்தேர்வு எழுதி அரசு பணிக்கு முயற்சிப்பது. பிஎட், கணினி போன்ற கூடுதல் தகுதியை வளர்த்துக்கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு போகலாம் என, திட்டமிடுகின்றனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் பிகாம், பிஏ, ஆங்கிலம், பிஎஸ்சி ஐடி, இயற்பியல், வேதியியல், மைக்ரோ பயலாஜி உட்பட கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவ்வாண்டுக்கான பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 20-ம் தேதி வெளியான நிலையில், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 90 சதவீதம் முடிந்து, வகுப்புகளை திறக்க தயராகி விட்டன. இருப்பினும், சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 5 முதல் 10 சதவீதம் இடங்களை தனியார் கல்லூரிகள் நிரப்பாமல் நிறுத்தி வைத்திருந்தன.
இதையும் படிக்க | மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்
கடந்த வாரம் தேர்வு முடிவு வெளிவந்ததால் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் ஓரவுக்கு மாணவர் சேர்க்கை முடிந்தாகி விட்டது. பெரும்பாலான கல்லூரிகளில் சுய நிதி பிரிவு பாடங்களுக்கான சேர்க்கையும் நிறைவு பெற்றுதாக கூறப்படுகிறது. விரைவில் முதலாமாண்டு வகுப்புகளை திறக்கும் நடவடிக்கையில் முதல்வர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, ஜூலை 27ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிறகு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி வெளியாகும் சூழல் உள்ளது. அரசுக் கல்லூரிகளை நம்பிய ஏழை, நடுத்தர மாணவர்கள் பிற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2வது சுழற்சி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர வாய்ப்பு கிடைத்தாலும், கட்டணத்தை கருத்தில் கொண்டு சேர முடியாமல் காத்திருக்கின்றனர். அரசு கல்லூரிகளில் விரைவில் கலந்தாய்வு நடத்தவேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து அரசு கல்லூரி முதல்வர்களிடம் கேட்டபோது,
‘‘அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்த ஆன்லைன் விண்ணப்ப விவரம் மொத்தமும் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் சேகரிக்கப்படுகிறது. இன சுழற்சி இடஒதுக்கீடு முறை குறித்த ரேங்க் பட்டியல் வெளியீடு தொடர்பாக உயர் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி, ஆகஸ்டு 1ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | 'ஆசிரியருடன் அன்பில் நம்மில் ஒருவர்' நிகழ்ச்சி | இடம்: சூலூர், கோவை - Full Video
முதலில் விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் முன்னுரிமை ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை முடிந்தபின், 3ம் தேதிக்கு மேல் பிற ஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் எப்போதும் போன்று இவ்வாண்டும் அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம், பிபிஏ, பிஎஸ்சி ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர். குறிப்பிட்ட சில பாடத்தை படிக்க விரும்பியவர்கள் கட்டணத்தை பொருட்படுத்தாமல் 2-வது சுழற்சிக்கும் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tuesday, July 19, 2022
மாவட்ட மாறுதல்
July 19, 2022
இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ( 19.07.2022 )
முன்னுரிமை வரிசை எண் 3776 முதல் 4336 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 19.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 19.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
இதையும் படிக்க | யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் உயரும்? இதோ பட்டியல்
எனவே , இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. தொடக்கக் கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கலாம். அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்

Monday, July 18, 2022
மாறுதல் கலந்தாய்வு
July 18, 2022
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தகவல் ( 18.07.2022 )

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தகவல்
முன்னுரிமை வரிசை எண்
3251 முதல் 3850 வரை
இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு
இன்று 18.07.2022 திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.
இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 18.07.2022 இன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, July 14, 2022
மாறுதல் கலந்தாய்வு
July 14, 2022
இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி: 15.07.2022

முன்னுரிமை வரிசை எண் 2602 முதல் 3250 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 15.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.
இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 15.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

Saturday, July 09, 2022
பதவி உயர்வு
July 09, 2022
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தள்ளி வைக்க ஐகோர்ட் உத்தரவு.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு: 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க ஐகோர்ட் உத்தரவு.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
12,13ம் தேதியில் அரசு மேனிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது. பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கோரி தலைமை ஆசிரியர்கள் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர்.