Friday, February 27, 2026
Friday, January 30, 2026
Wednesday, December 06, 2023
Free Computer Programming Training - பயிற்சி காலம்: 6 வாரங்கள் - பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20
இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி - பயிற்சி காலம்: 6 வாரங்கள் - பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20 Free Computer Programming Training - Training Duration: 6 Weeks - Training Start Date: 20th December
இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ., வளாகத்தில் சி.ஐ.டி.டி., விரிவாக்க மையம் செயல்படுகிறது.
இம்மையத்தில் கம்ப்யூட்டர் புரொகிராமிங் முழுநேர பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சி:
புரொகிராமிங் லேங்குவேஜ் பைத்தான். பயிற்சி காலம்:
6 வாரங்கள்.
தகுதி:
ஏதேனும் ஒரு டிப்ளமா அல்லது இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 18 வயது நிரம்பியிருத்தல் அவசியம்.
தேவையான ஆவணங்கள்:
10ம், 12ம் மற்றும் டிப்ளமா / டிகிரி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.
பயிற்சி துவங்கும் நாள்:
டிசம்பர் 20
விபரங்களுக்கு:
9791161148, 9444923726
Saturday, August 12, 2023
ஆசிரியா் தேர்வுக்கு ஆக. 18 முதல் இலவச பயிற்சி
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
நிகழாண்டு இடைநிலை ஆசிரியா் பணிக்கும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கும் போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு தயாராகும் இளைஞா்கள் தேர்வின் பெயா், தங்களது பெயா், கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362 - 237037, 9499055905 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
ஆசிரியர், காவலர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - 18 முதல், செப்., 17 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர், காவலர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
ஆசிரியர் தேர்வு மற்றும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஆகிய இரு தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலிப் பணியிடங்கள் அறிவிக்க உள்ளன.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 6,556 காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, 3,587 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள், இத்தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விபரங்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள், வரும் 21ல் துவக்க உள்ளது.
இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, 3,559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, வரும் 18 முதல், செப்., 17 வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Tuesday, June 20, 2023
Friday, May 05, 2023
Saturday, April 15, 2023
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் நாளை இலவச பயிற்சி
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, 2-ஏ, குரூப்-4 , வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியிடப்பட உள்ளது.
இதில், வி.ஏ.ஒ, தட்டச்சா், சுருக்கெழுத்தா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், நில அளவையாளா் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இந்த தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இந்த தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
மயிலாப்பூா் ராயப்பேட்டை பிரதான சாலை, வி.எம்.தெருவில் உள்ள இந்திய இளைஞா் சங்கத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் டி.என்.பி.எஸ்.சி முன்னாள் தலைவா் ஆா்.நட்ராஜ், அகாதெமி இயக்குநா் ச.வீரபாபு மற்றும் அனுபவமிக்க பயிற்சியாளா்கள் பலா் பயிற்சி அளிக்க உள்ளனா்.
இதில் பங்கேற்க விரும்பும் தகுதியுடையவா்கள் தங்களது முழு முகவரியுடன் டைப் செய்து, கைப்பேசி: 9710375604 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
Wednesday, April 12, 2023
இலவச பயிற்சி - கல்வித்தகுதி +2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல் - வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் - பயிற்சியின் போதே 15,000 முதல் 20,000 வரை சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி +2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல்
வயது வரம்பு
: 18 முதல் 30 வரை (ஆண்/பெண்)
தேவையான ஆவணங்கள்
: ஆதார் கார்டு நகல், கல்விச் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ்போட்டோ (2)
பயிற்சி காலம் : 55 நாட்கள்
பயிற்சியின் சிறப்புகள்
பயிற்சி சான்றிதழ் முன்னணி IT-ITES, நிறுவனங்கள், முன்னணி MNC நிறுவனங்கள், Retail, Banking போன்ற துறையில் 100% இலவச வேலைவாய்ப்பு.
சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் மேல் குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு.
Communicative English, Computer Operations Personality Development ч Aptitude, Interview Skills வகுப்புகள் Books, Bag and ID Card இலவசம்
முக்கிய குறிப்பு: பயிற்சியின் போதே 15,000 முதல் 20,000 வரை சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். மறைமுக கட்டணம் ஏதும் கிடையாது.
பள்ளி / கல்லூரி Dropout களுக்கும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்
தொடர்புக்கு: Grow Training Centre (Dr.Reddys Foundation) 652A, VKK Menon Rd, near Srivari Aparment, New Siddhapudur, Near Gandhipuram Bus Stand, Coimbatore Ph:91549 54439, 915484 4622
Thursday, December 29, 2022
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக,
பார்வையில் காணும் செயல்முறைகளின்படி ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்கு உயர்கல்வியில் சேர்ந்து படிக்க வசதியாக வரவிருக்கும் நுழைவுத் தேர்வுகளின் விவரங்கள் இத்துடன் இணைத்து பகிரப்படுகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தற்போதைய நிலை மற்றும் விண்ணப்பம் திறக்கும் தேதி, விண்ணப்பிக்கும் கடைசி தேதி நுழைவுத் தேர்வு கட்டணம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 15 நுழைவுத் தேர்வுகளின் இரண்டாவது புதுப்பிப்பு இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு விவரங்களை தெரிவித்து அதில் பங்கேற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி ஆலோசக ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Sunday, November 13, 2022
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத் தும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நவ.26-ஆம் தேதி குறுவள மைய பயிற்சி நடத்தப்பட உள்ளது.
அதன்படி 1,2-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சியும்,4.5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 442 முதன்மைக் கருத்தாளர் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் திட்டமிட்டு மேற்கொள்ளும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
Tuesday, August 23, 2022
கோவையில் குரூப் -1 தோ்வுக்கு இலவச பயிற்சி
கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், உதவி இயக்குநா் உள்ளிட்ட பிரிவுகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் -1 தோ்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் தோ்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் குரூப்-1 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் உள்ளிட்ட தோ்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மேலும், குரூப் -1 தோ்வுக்கு சம்பந்தமான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். எனவே அரசுத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, August 22, 2022
குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்ஸி குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வு மூலம் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரித்துறை), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் 92 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தோ்வுக்கான பட்டயப்படிப்பு அல்லது இணைக் கல்வித் தகுதியுடன் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் ஆக.22. இதற்கான முதல்நிலைத் தோ்வு அக்.30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் பயனடையும் வகையில் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் செப்.2-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பவா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தோ்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.




