AADHAR LINK
May 23, 2025
Showing posts with label AADHAR LINK. Show all posts

Friday, May 23, 2025
Tuesday, April 29, 2025
Monday, February 10, 2025
Tuesday, August 27, 2024
Monday, September 11, 2023
post office Schemes
September 11, 2023
Post Office Account இருக்கா? இன்னும் 20நாள் தான் இருக்கு..இதை கட்டாயம் செஞ்சி முடிச்சிருங்க!
போஸ்ட் ஆப்பிஸ் அக்கவுண்ட் இருக்கா? இன்னும் 20நாள் தான் இருக்கு..இதை கட்டாயம் செஞ்சி முடிச்சிருங்க!
ஆதார் அட்டை இணைக்காவிட்டால், உங்களின் தபால் அலுவலக கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
( *எப்படி இணைப்பது என்று இந்தப் பதிவில் கடைசியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*)
வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதேபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், நீங்கள் முதலீடு செய்த பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும், வட்டி வகிதமும் பன்மடங்கு நன்மையை தரக்கூடியது.
அதாவது, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்து யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற 9 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 9 வகையான திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் தபால் அலுவலக கணக்கிற்கு பெருமளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். *ஆதாரை இணைப்பது கட்டாயம்:*
இந்நிலையில், தபால் அலுவலக கணக்கை திறப்பதற்கு முன், வாடிக்கையாளர்கள் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
அதில் குறிப்பாக, அஞ்சலகக் கணக்குடன் ஆதாரை எண்ணை இணைக்க வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறு சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள மக்கள் தங்களது தபால் அலுவலக கணக்குடன் இணைக்கத் தவறினால், தபால் அலுவலக கணக்கு செயலிழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டால், உங்களால் முதலீடு செய்ய முடியாது.
முதலீட்டின் முதிர்வு பலன்களை பெற வாய்ப்பு இருக்காது மேலும், கணக்கில் வட்டி வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *எப்படி இணைப்பது?
முதலில் https://www.indiapost.gov.in/VAS/Pages/CustomerLinking.aspx என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில், உங்கள் கணக்கின் User ID மற்றும் Password-ஐ உள்ளிட வேண்டும்.
பின்னர், உங்கள் ஆதாரை எண்ணை உள்ளிட்டு, எந்த கணக்குடன் இணைக்க நினைக்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், ஆதார் எண் இணைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் எண்ணிற்கு மெசேஜ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆதார் அட்டை, உங்கள் கணக்கின் கடவுச்சொல்லுடன் அருகில் உள்ள தபால் அலுவலகம் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

Friday, September 08, 2023
AADHAR LINK
September 08, 2023
ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் டிச.,14 வரை நீட்டிப்பு - ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் டிச.,14 வரை நீட்டிப்பு.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான காலக்கெடு டிச.,14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை அப்டேட் செய்வது கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்தது.
பொதுமக்களின் வசதிக்காக, மை ஆதார் போர்ட்டல் வழியாக, ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கான அவகாசம் செப்,14ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிச.,14ம் தேதி வரை மை ஆதார் போர்ட்டலில் ஆதார் தகவல்களை எளிதாக ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம்.
ஆதார் சேவை மையங்களுக்கு சென்றால் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். *ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி?*
1.முதலில் https://myaadhaar.uidai.gov.in/
இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.
2.அடுத்ததாக, லாக் இன் செய்து, பெயர்/ பாலினம்/ பிறந்த தேதி/ முகவரி அப்டேட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3.அடுத்ததாக அப்டேட் ஆதார் ஆன்லைன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4. முகவரி சான்று, அடையாள சான்று நகலை பதிவேற்ற வேண்டும்.
5.ஆதார் பதிவு செய்த எண்ணுக்கு, சர்வீஸ் ரெக்வஸ்ட் எண் (எஸ்.ஆர்.என்) குறுஞ்செய்தியாக வரும்.
ஆதார் அப்டேட் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள 1947 என்ற டோல்ப்ரீ எண்ணுக்கு அழைக்கலாம்.
Thursday, July 06, 2023
Tuesday, April 11, 2023
PAN
April 11, 2023
பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்

இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, அரசு சலுகைகள், வரிகள் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது.
ஆதார் எண் எப்படி நமது அடையாள விவரங்களைக் காண உதவுகிறதோ, அதேபோல் தான் பான் கார்டு நமது நிதி விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது. இப்படி பல முக்கிய நிதி தேவைகளுக்கு பயன்படும் பான்கார்டில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.
அப்படி பிழை இருந்தால், அத்தியாவசிய தேவையான வங்கி கணக்கு கூட தொடங்குவது கடினமாகும்.
இப்படி பான்கார்டில் பிழை இருந்தால் அதை எளிதாக ஆன்லைனிலே திருத்தம் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
பான் கார்டு திருத்தம் செய்ய முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
பிறகு இணையதள பக்கத்தில் 'அப்ளிகேஷன் டைப்' என்ற option-ஐ தேர்ந்தெடுத்து Change of Correction in Exsiting Pan Card என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பான் கார்டு திருத்தம் செய்வதற்குத் தேவையான விவரங்களை பதிவு செய்த பிறகு டிஸ்பிளேவில், பதிவு செய்ததற்கான ரிஜிஸ்டர் எண் தெரியும், அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண் இ-மெயில் முகவரிக்கும் அனுப்பப்படும் என்பதால், உள்ளே கொடுக்கும் விவரங்களில் சரியான இ-மெயில் முகவரியை வழங்க வேண்டும்.
அடுத்ததாகத் திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்பாக தற்போது பான் கார்டு பெயர், ஆதாரில் உள்ளது போன்று தான் அளிக்கப்படுகிறது என்பதால், கட்டாயம் ஆதார் நகலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்படி அனைத்து விவரங்களையும் அளித்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பித்து, திருத்தம் செய்வதற்கான கட்டணத்தைச் செலுத்தினால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்குத் திருத்தம் செய்யப்பட்ட பான்கார்டு வந்துவிடும்.
Wednesday, January 18, 2023
INFORMATION
January 18, 2023
மின் இணைப்புடன் ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர் தகவல்கள் அழிந்தன: மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி எனமானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன.
இவ்வாறு மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர். இதன்படி, டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தகவல்கள் அழிந்து போன நுகர்வோரின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.அத்தகைய மின் நுகர்வோர்மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றுஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, December 17, 2022
Department of Treasuries
December 17, 2022
கருவூலம், கணக்குத் துறை திட்ட பயனாளிகள் ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க உத்தரவு

ஓய்வூதியம் உள்பட கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்ந்த திட்டங்களின் கீழ் பயன்களைப் பெற்று வரும் பயனாளிகள் ஆதாா் எண் சமா்ப்பிக்க வேண்டும் என்று நிதித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:
மத்திய அரசின் சட்டத்தின்கீழ், மானியங்கள், சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள் தங்களது ஆதாா் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை செயல்படுத்தும் திட்டங்களில் பயன்பெறக் கூடிய பயனாளிகள் தங்களது ஆதாா் விவரங்களை அளிக்க வேண்டும். அரசின் திட்டங்களில் இணைவதற்கு முன்பாக, ஆதாா் எண்ணை வைத்திருக்காவிட்டால், அதற்கு விண்ணப்பித்த பின் திட்டத்தில் இணையலாம்.
ஆதாா் எண் இல்லாவிட்டாலோ, ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருந்தாலோ சில முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயனாளிகள் அளிக்கலாம். அதன்படி, ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், கடவுச் சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நூறு நாள் வேலைத் திட்ட அட்டை, மத்திய அரசின் கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரி அளிக்கும் சான்றிதழ், குறிப்பிட்ட அரசுத் துறை கோரக்கூடிய ஆவணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
பயனாளிகள் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் அவா்களும் ஆதாா் எண் விவரத்தை அளிக்க வேண்டும். ஆதாா் எண் இல்லாதபட்சத்தில், பெற்றோரின் ஒப்புதலுடன் அதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆதாா் எண் உறுதி செய்யப்படும் வரையில், சில ஆவணங்களை அளிக்க வேண்டும். அதன்படி, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கண்கருவிழி, கைரேகை பதிவு அடங்கிய ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டை அளிக்க வேண்டும். மேலும், பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். மேலும், பயனாளிகளாக குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் திட்டங்களின் தன்மைக்கேற்ப அவா்களுடனான உறவுமுறையை உறுதி செய்திட பெற்றோா் அல்லது சட்டப்பூா்வ பாதுகாவலா் தங்களது ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னாள் ராணுவ வீரருக்கான பங்களிப்பு சுகாதாரத் திட்ட அட்டை, தொழிலாளா் காப்பீட்டு அட்டை, மத்திய அரசின் சுகாதார அட்டை, ஓய்வூதிய அட்டை, ராணுவ வீரா்கள் பொருள்கள் பெறுவதற்கான அட்டை, அரசு வரையறுத்துள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தின் நகலை அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா் என்.முருகானந்தம்.

Monday, November 28, 2022
TAMILNADU
November 28, 2022
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும்

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை தினத்தை தவிர்த்து, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்ப்பட்டது.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கிராமப்புறங்கள் தொடங்கி நகர்ப்புறப் பகுதிகள் வரையில் உள்ள இண்டர் நெட் மையங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை செய்து கொடுக்கிறார்கள். இதற்காக மக்கள் இண்டர் நெட் மையங்களை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்து விட முடிகிறது. ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு செய்தி வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள மக்கள் தங்களது பகுதியை சேர்ந்த இணையதள மையங்களையே நாடி வருகிறார்கள். இணைக்கும் பணி எளிதாக இருந்த போதிலும் மக்கள் அதனை சிரமமாகவே கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் டிசம்பர் 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மின்வாரிய அலுவலகங்களில் ஆதாரை இணைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, November 25, 2022
AADHAR LINK
November 25, 2022
ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு

ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்து மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. நவ.24 மற்றும் நவ.30-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவோருக்கு 2 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருந்தால்தான் அரசு வழங்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆணைப்படி வீட்டுப் பயனாளர்கள், விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும்.
இன்னும் ஆதார் பெறாதவர்கள், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்த நகலுடன் பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் மற்றொரு ஆணையில், ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவை இருந்தால், இரண்டுக்கு மேலுள்ள மின்சார சேவைகள் வணிக பயன்பாடாக மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண்ணை இணைக்கும்போது, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இலவச மற்றும் மானிய விலை மின்சார சேவைகளை பெறுவதைத் தடுக்கலாம்.
முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தின் விலை ரூ.450 ஆகும். உதாரணமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டின் உரிமையாளராக இருந்தால் அவர் இந்த இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்தின் மூலம் அதிக பலனடையலாம். ஒருவேளை அவர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், வாடகைதாரரின் பெயரை வாடகைதாரர் என்று மின்சார கழகத்தில் பதிவு செய்து முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறலாம். அவர் வீட்டைக் காலி செய்தாலும் அடுத்த வாடகைதாரரின் பெயரைப் பதிவு செய்து முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் இலவச மின்சாரத்தை வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே அனுபவிக்காமல், வாடகைதாரர்களும் அனுபவிக்கலாம்.
பல பேர், ஒரே வீட்டுக்கு மாடிகளைக் கணக்கில்காட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளைப் பெற்றுள்ளனர். இதனால் இவர்களது மற்ற மின்சார சேவைகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறுகின்றனர். 1000 யூனிட்டுக்குமேல் மின்சாரம் பயன்படுத்தும்போது, அவர்களிடம் யூனிட் ஒன்றுக்கு ரூ.12 கட்டணமாக வசூலிக்கப்படும். உதாரணமாக, மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு மாடிக்கும் தனித்தனி மின்சார சேவைகளை வைத்திருப்பதாக வைத்துக்கொள்ளலாம்.
இதனால், ஒரே இடத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வணிக பயன்பாடாக மாற்றும்போது இலவச 100 யூனிட் மின்சாரத்தைத் தடுக்கலாம். ஆதார் எண்ணை மின்சார நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும்போது இச்சலுகைகளை பெறும் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வைத்திருப்போர் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தனி மீட்டர்கள் இருப்பதால் அங்கே வசிப்பவர்களுக்கு இந்த நடைமுறை பாதிப்பு ஏற்படுத்தாது.
அப்பார்ட்மென்டுகளில் இருக்கும் லிப்ட், பூங்கா ஆகிவற்றின் மின்சார பயன்பாடு 1டி பயன்பாட்டில் சேர்க்கப்படுவதில் மாற்றம் இல்லை. மேலும், இந்த நடைமுறை வணிக பயன்பாடு, விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி இணைப்புகளை பாதிக்காது. இந்த அனைத்து நடவடிக்கைகளுமே வருவாய் கசிவுகளைத் தடுக்க ஏற்படுத்தப்பட்டதாகும். மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நேரடியாக ஈடுபடவில்லை. இந்த இணைப்பு தமிழக அரசு மூலம் நடப்பதால், தனிப்பட்ட விபரங்கள் கசியாது என்று கூறினார்.
இந்நிலையில் ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்த பிறகே மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Friday, September 02, 2022
votes Form's
September 02, 2022
வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு; வரும் 4ம் தேதி சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1.8.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4.9.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது