Breaking

Showing posts with label Cooperative Societies. Show all posts
Showing posts with label Cooperative Societies. Show all posts

Saturday, December 23, 2023

December 23, 2023

ஆசிரியர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பரிசீலனை செய்து கையொப்பமிட வேண்டும் - CEO Proceedings



Principals to review and sign applications seeking loans from Teachers' Cooperative Savings Banks - CEO Proceedings - ஆசிரியர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பரிசீலனை செய்து கையொப்பமிட வேண்டும் - CEO Proceedings ஆசிரியர்கள் / பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!

ஆசிரியர்கள் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன்பெற முடியாதவாறு ஒரு சில தலைமை ஆசிரியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து கையொப்பம் இடுவதில்லை என தெரிவித்து அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டு பார்வையில் காணும் சங்க செயலரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது .


கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இணைவதற்கு தலைமையாசிரியர்கள் இசைவு பெற்று இணைந்துள்ளனர் . ஆகவே விதிகளின்படி சிக்கன நாணய சங்க கடன் பெறுவது தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Tuesday, December 19, 2023

December 19, 2023

கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!

Release of Admit Card for Cooperative Assistant Exam! - கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!



கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!

கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம்‌ செய்யலாம்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும் கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால்‌ கடந்த நவ.10 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.  அதற்கான எழுத்துத்‌ தேர்வு டிச. 24 ஆம் தேதி தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அண்ணா நகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளி, அண்ணா நகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளி, வில்லிவாக்கம், அரசினர் கலைக் கல்லூரி, நந்தனம், பச்சையப்பா கல்லூரி, சேத்துப்பட்டு ஆகிய 6 மையங்களில்‌ நடத்தப்படவுள்ளது. 

இத்தேர்விற்கான அனுமதி நுழைவுச்‌ சீட்டினை டிச. 18 ஆம் தேதி முதல்‌ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://www.drbchn.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ எனவும், கூடுதல்‌ விபரங்களுக்கு chennaidrb@gmail.com மின்னஞ்சல்‌ மற்றும்‌ 044-2461 6503, 044-2461 4289 தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்‌ எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, November 20, 2023

November 20, 2023

Cooperative Society Assistant Vacancy - கூட்டுறவு சங்க உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் வருகிற 1-ந் தேதி கடைசிநாள்

கூட்டுறவு சங்க உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் வருகிற 1-ந் தேதி கடைசிநாள் Last date to apply for Cooperative Society Assistant Vacancy is 1st

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங் கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்ப னைச்சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங் களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு வருகிற 1-ந்தேதி வரை www.drbslm.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 24-ந்தேதி நடக்கிறது. இதற்கு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்கவேண்டும். முதுநிலைவாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்க லைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட் டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் உள்ளவர்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப் படும், கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி, தபால் வழி மற்றும் பகுதி நேர கூட் டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்து உள்ளவர் களும், உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக்கு அதிக பட்ச வயது உச்ச வரம்பு 32. மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு பட் டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ்போன்ற பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த தகவல் கூட்டுறவு சங்கஇணைப்பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் 2,257 உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு அறிவிப்பு*

கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு டிச. 24-இல் எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கான அறிவிக்கையை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 132 இடங்கள் காலியாக இருக்கின்றன.

இதையும் படிக்க | Co-operative Department - காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு - மாவட்ட வாரியாக காலிப்பணியிட விவரம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2023 தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கிப் பணியாளா் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளா் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2,257 உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 132 இடங்கள் காலியாக உள்ளன. அரியலூா் - 28, செங்கல்பட்டு - 73, கோவை - 110, திண்டுக்கல் - 67, ஈரோடு - 73, காஞ்சிபுரம் - 43, கள்ளக்குறிச்சி - 35, கன்னியாகுமரி - 35, கரூா் - 37, கிருஷ்ணகிரி - 58, மயிலாடுதுறை - 26, நாகப்பட்டினம் - 8, நீலகிரி - 88, ராமநாதபுரம் - 112, சேலம் - 140, சிவகங்கை - 28, திருப்பத்தூா் - 48, திருவாரூா் - 75, தூத்துக்குடி - 65, திருநெல்வேலி - 65, திருப்பூா் - 81, திருவள்ளூா் - 74, திருச்சி - 99, ராணிப்பேட்டை - 33. தஞ்சாவூா் - 90, திருவண்ணாமலை - 76, கடலூா் - 75, பெரம்பலூா் - 10, வேலூா் - 40, வேலூா் - 40, விருதுநகா் - 45, தருமபுரி - 28, மதுரை - 75, நாமக்கல் - 77, புதுக்கோட்டை - 60, தென்காசி - 41, தேனி - 48, விழுப்புரம் - 47 என மாவட்ட வாரியாக காலியிடங்கள் உள்ளன.

காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க, இளநிலை பட்டப் படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும். ராணுவத்தில் பணிபுரிந்தவா்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவுப் பயிற்சியைப் பொருத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயா் மேலாண்மை பயிற்சி முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

18 வயது முதல் 32 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்ப சம்பளம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தோ்வு செய்யப்படும் முறை: காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்படுவா். டிச. 24-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடத்தப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக டிச. 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DOWNLOAD Notification PDF CLICK HERE

Wednesday, September 27, 2023

September 27, 2023

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் இதுநாள் வரை ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டைஎண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உடன் சமர்ப்பித்து விட வேண்டும். எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன் னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி கள் நடைபெற்று வருகிறது. எனவே உரிய காலத்திற்குள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங் களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற் றும் வங்கிகளில் அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர் ‘அ ' வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப் படும்.மேற்படி 'அ' வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும் நேர்வில் எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அத் தேர்தலில் போட்டியிடஇயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள்மற்றும்வங்கிக ளில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இணைப்பதிவாளர் (பொ) சிவ.முத்துக்குமாரசாமி தெரிவித் துள்ளார்கள்.

Sunday, July 30, 2023

July 30, 2023

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு!

பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டுவசதிக்கடன் தொகையின் உச்ச வரம்பினை ரூ .5 / - இலட்சத்திலிருந்து ரூ .20 / - இலட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது .

1) தன்னிறைவு பெற்ற பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் இடம் உரிய துணைவிதி திருத்தங்கள் மேற்கொண்டு வீட்டு வசதி தொகை வழங்கப்பட வேண்டும்

2) ஜாமீன் கடன் மற்றும் வீட்டு வசதிக்கடன் இரண்டும் சேர்த்து 20 லட்சம் அல்லது உறுப்பினர்கள் பெரும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைபடியின் கூடுதலில் 25 மடங்கு எது குறைவோ அத்தொகையை வீட்டு வசதி கடனாக வழங்க அனுமதிக்கலாம்.

3) மேற்படி வீட்டு வசதி கடன் தொகையினை திருப்பி செலுத்தும் சம தவணை காலம் 180 மாதங்களுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் உறுப்பினரின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும்...

Society Housing Loan 20 Lakhs Letter

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Friday, March 31, 2023

March 31, 2023

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு! - Issue of an ordinance fixing a deadline till 02.09.2023 for the members who have failed to pay installments through cooperative housing societies! CLICK HERE TO DOWNLOAD PDF

Friday, February 10, 2023

February 10, 2023

Public Distribution System - Selling of Minor Millets through Fair Price Shops run by Cooperatives / Tamil Nadu Civil Supplies Corporation in Chennai and Coimbatore Cities - Orders Issued

Public Distribution System - Selling of Minor Millets through Fair Price Shops run by Cooperatives / Tamil Nadu Civil Supplies Corporation in Chennai and Coimbatore Cities - Orders Issued
Read:

1. Announcement made by the Hon'ble Minister for Agriculture and Famers Welfare in Agriculture Budget 2021-2022.

2. From the Registrar of Cooperative Societies, Letter Rc.No.50414/ 2021/PDSM1, dated 13.09.2021.

3. From the Director, Department of Agricultural Marketing and Agri Business, Chennai-32 Letter No.TNSFAC/874/2021, dated 30.11.2021.

ORDER:-

In Agriculture Budget 2021-2022, the Hon'ble Minister for Agriculture and Famers Welfare has made the following announcement:-

"Action will be taken to encourage value addition in minor millets and ensure remunerative price to farmers. Minor Millet rice will be procured by Co-operative Societies and distributed through Public Distribution System in Cities like Chennai and Coimbatore."

2. In his letter second read above, the Registrar of Cooperative Societies has sent proposals for selling Minor Millets through the select Fair Price Shops run by Cooperatives in Chennai and Coimbatore cities alongwith other Public Distribution System commodities, on pilot basis.

3. In this regard, a meeting was convened on 08.10.2021 to discuss on the procurement of Minor Millets, processing and value addition of the Minor Millets by the Farmers Producers Organization based on the requirement of Cooperative Department. 4. In his letter third read above, the Director of Agricultural Marketing and Agri Business has suggested certain modalities for procurement and selling of Minor Millets through Fair Price Shops. He has suggested that, a Committee may be organized with representative from Co-operative Department, Agriculture Department, Department of Agricultural Marketing and Agri Business, Farmer Producer Organization, Tamil Nadu Agriculture University, Department of Economics and Statistics at State Level for framing modalities to fix the price for Minor Millets.

5. In the circumstances stated above, the Government after careful examination, grant permission for the sale of Minor Millets in select Fair Price Shops / Retail outlets run by Cooperatives / Tamil Nadu Civil Supplies Corporation in Chennai and Coimbatore Cities. alongwith other Public Distribution System commodities, on pilot basis.

6. Government constitute a State Level Committee, with the following members for framing modalities for processing and value addition of minor millets, pricing, etc.:- Designation

Tuesday, August 23, 2022

August 23, 2022

Press Release From Registrar of Cooperative Societies



CLICK HERE TO DOWNLOAD

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி 21.08.2022 தேதி தினசரி நாளிதழில் வெளியாகியுள்ளது இது தொடர்பாக கீழ்க்காணும் மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது.

மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் விளம்பர எண் 1/2022 நாள் 18.08.2022 தேதி அறிவிக்கை போலியாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்விளம்பரத்தில் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்றும் இதற்காக விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விளம்பரம் ஏதும் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை எனவே மேற்கண்ட போலி விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது.

எனவே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்"

Total Pageviews

Search This Blog