கற்றல் திறனை மேம்படுத்த தொடர் ஆய்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 01, 2025

Comments:0

கற்றல் திறனை மேம்படுத்த தொடர் ஆய்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு



கற்றல் திறனை மேம்படுத்த தொடர் ஆய்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு Chief Education Officer orders continuous research to improve learning skills

அரசுப் பள்ளிகளில், 3 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளுமாறு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை கல்வி மாவட்டத்தில், 523 ஆரம்பப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 215 பள்ளிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியையும், 228 பள்ளிகள் தமிழ் வழிக் கல்வியையும் கொண்டுள்ளன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 475 ஆரம்பப்பள்ளிகளில் 285 தமிழ் வழிப் பள்ளிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 232 அரசு நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த பிப்., ல் நடந்த மாநில அளவிலான அடைவுத் தேர்வில் (ஸ்லாஸ்), கோவை மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருந்தது. இதனால், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் கற்றல் அடைவை அதிகரிக்க, பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கண்காணிப்பு மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் விரிவான விடை அளிக்கும் வகையிலான வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, தொண்டாமுத்தூர் மற்றும் ஆனைமலை உள்ளிட்ட வட்டாரங்களில் அதீத கவனம் செலுத்த, பள்ளிக் கல்வி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாநகர், பேரூர், சூலூர் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

துறைசார்ந்த அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் ஈரெழுத்துச் சொற்களைப் பிழையின்றி வாசிப்பது, அடிப்படைக் கணிதத் திறன்களை வளர்ப்பது மற்றும் முக்கியக் கற்றல் விளைவுகளை (கிரிட்டிக்கல் லேர்னிங் அவுட்கம்ஸ்) அதிகரிப்பதே, இந்த ஆய்வின் முக்கிய நோக்கம்' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews