சம்பளத்தை உயர்த்துங்கள் தற்காலிக ஆசிரியர்கள் குமுறல் Temporary teachers protest, demand salary increase
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., எனப்படும், முன்பருவ கல்வி மையங்களில், பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி யின் கீழ் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுதும் 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நேரம், காலை 9:30 மணி முதல், மதியம் 12:30 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி யும் பணியாற்றுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வராத நாட்களில், ஒன்றாம் வகுப்பு முதல் சேர்த்து கவனித்துக் கொள்வது, பள்ளி அலுவலகம் சார்ந்த பணிகளையும் மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபடும் இவர்களுக்கு, தொகுப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய், மின்னணு நிதி பரிமாற்றம் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
மாதம் முழுதும் பணிபுரிந்தால் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், நடைமுறையில், பல பள்ளிகளில் அந்த ஒரு நாள் விடுப்பும் முறையாக வழங்கப்படுவதில்லை; விடுப்பு எடுத்தால் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு முடித்த தகுதியுடனே இப்பணியில் சேர்ந் து உ ள்ளோம். எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., ஆகிய இரண்டு வகுப்பு களையும் ஒரே ஆசிரியரே கவனித்துக் கொள்கிறோம்.
மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள சில பள்ளிகளில் மட்டுமே கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். கடந்த, 2022ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும் இதுவரை எந்த வகையான சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் அல்லது பணிபுரியும் ஆண்டுகளைக் கணக்கிட்டு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை ஊதிய உயர்வாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.