JEE முதன்மைத் தேர்வு: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 22, 2025

Comments:0

JEE முதன்மைத் தேர்வு: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

JEE முதன்மைத் தேர்வு: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மைத் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜன வரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளன.


இதில் முதல்கட்ட முதன்மைத் தேர்வு 2026 ஜனவரி 21 முதல் 30-ம் தேதிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு இம்மாத இறுதியில் தொடங்கும். https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அதேபோல், 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் ஏப். 1 முதல் 10-ம் தேதிக்குள் நடத்தப்படும். மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறிப்பாக மாற்றுத்திறன் மாணவர்களுக்காக சிறப்பு கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews