This newspaper article discusses the persistence of physical punishment in schools despite legal prohibitions and highlights the necessity of psychological training for teachers.
Physical punishment violates children's rights and is a punishable offense under the Right to Education Act, yet reports indicate about 60% of children in India experience it.
Multiple recent incidents of students being physically abused by teachers have been reported in the Coimbatore district.
Experts suggest that work pressure and stress cause teachers to lose control, making compulsory psychological counseling and training for teachers essential to prevent such violence.
சட்டம் இருந்தும் பள்ளிகளில் தொடரும் தண்டனை - ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அவசியம் Punishment continues in schools despite law - Psychological training is necessary for teachers
பள்ளிகளில் குழந்தை களை அடிப்பதும், மனரீ தியாக துன்புறுத்துவதும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தண்ட னைக்குரிய குற்றமாக இருந்தாலும், ஆசிரியர் கள் மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்கும் சம்ப வங்கள் தொடர்ந்து அதிக ரித்து வருகின்றன.
பள்ளிகளில் மாணவர் களை உடல் ரீதியாக தண் டிப்பது ஆசிரியர்களுக்கு தடை செய்யப்பட்டதா கும். இது குழந்தைக ளின் அடிப்படை உரிமை களை மீறும் செயலாகும்.
இத்தகைய செயல் தாக் குதலின் ஒரு வடிவமாகக் கருதப்படுவதால், சட்டப் படி தண்டனை வழங்கப் படும். இருப்பினும், இந் தியா முழுவதும் சுமார் 60 சதவீத குழந்தைகள் பள் ளிகளில் ஆசிரியர்களால் உடல் ரீதியாக தண்டிக்கப் படுவதாக ஆய்வு அறிக் கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோவை யில் இத்தகைய புகார்கள் தொடர்ந்து எழுந்து வரு கின்றன. கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவி தண்டிக்கப் பட்ட சம்பவம், ஆனை மலை அருகே கிழ வன்புதூர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம், சமீபத்தில் ஒரு தனியார் பள்ளியில் அறிவுசார் குறைபாடுடைய மாண வரை ஆசிரியர் தாக்கிய தாக கூறி மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம், ஆகியவை அதற்கு எடுத் துக்காட்டாகும்.
இத்தகைய சம்பவங் களுக்கு பள்ளிக் கல் வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரி வித்தாலும், மாணவர்க ளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்த தாக தெரியவில்லை.
'ஆசிரியர்களுக்கும் பயிற்சி வேண்டும்'
தமிழ்நாடு உளவியல் சங்க மாநில தலைவர் பாலமுருகன் கூறுகையில், "மாணவர்களுக்கு உளவியல் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப் படுவது அவசியம் என்றாலும், ஆசிரியர்களுக் கும் உளவியல் சார்ந்த பயிற்சி வழங்கப்படுவது முக்கியம்.
வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் கார ணமாக சில ஆசிரியர்கள் தங்களது கோபத்தை கூட கட்டுப்படுத்த முடியாமல் மாணவர்களிடம் வெளிப்படுத்தும் சூழல் உருவாகிறது. எனவே, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மனவளப் பயிற்சி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
மனித வளம் சார்ந்த பயிற்சிகளும் அவசியம். ஆசிரி யர்கள் மட்டுமல்லாமல், அனைத்து துறையின ருக்கும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்," என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.