2025-26 நிதியாண்டிற்கான வருமான வரியைக் கணக்கிட்டுச் செலுத்தத் தயாரா?
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
இந்திய அரசிற்கு வருமான வரியாக மட்டும் ஆண்டிற்கு சுமார் Rs.4,000,00,00,000/- வரை செலுத்தி வரும் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 2025-26ற்கான தங்களது வருமானவரியைத் துல்லியமாகக் கணக்கிட்டு IFHRMSல் மாதாந்திர வரிப்பிடித்தத்தை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கிட கீழேயுள்ள இணைப்பில் சென்று, Income Tax Calculator 2026ஐ Download செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Budget 2025-26 அறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டில் Old Regimeல் எந்தவித மாற்றமும் இல்லை. பழைய நடைமுறையே தொடரும்.
New Regimeல் கடந்த ஆண்டைப் போலவே Rs.75,000/- Standard Deduction உண்டு.
மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துப்படியைக் கடந்த ஆண்டைப் போல கழித்துக்கொள்ளலாம். இதைத் தவிர்த்து வெறெந்தக் கழிவும் New Regimeல் புதிதாகச் சேர்க்கப்படவில்லை. New regimeன் Tax Slab பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளது.
Rs.4,00,000 வரை - வரியில்லை
Rs.4,00,001 to Rs.8,00,000 - 5%
Rs.8,00,001 to Rs.12,00,000 - 10%
Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%
Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%
Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%
Rs.24,00,000க்கு மேல் - 30% Net Taxable income Rs.12,00,000/-க்குள் இருப்பின் Rs.60,000/- வரை U/S.87Aன் கீழ் Rebate உண்டு.
எனவே, Gross Income (Pay + DA + All other Allowances) Rs.12,75,004/- வரை உள்ளோருக்கு வருமான வரி வராது.
*Net Taxable income Rs.12,00,010/- முதல் Rs.12,70,580/- வரை இருப்பின் U/S.87Aன் கீழ் Rs.59,992/- முதல் Rs.7/- வரை Marginal Relief கழிவு உண்டு.*
இதனால், Gross Income Rs.12,75,005/- முதல் Rs.13,45,584/- வரை உள்ளோருக்கு Rs.10/- முதல் Rs.70,580/- வரை வருமானவரியாக வரும்.
"அதெல்லாஞ்சரி, என்னோட சம்பளத்துக்கு வரி வருமா? வராதா? வந்தா எவ்ளோ வரும்? நியூ ரெஜிம் / ஓல்டு ரெஜிம் இதுல எது எனக்கு நல்லது?" என்பவை தான் உங்களது கேள்விகள் எனில், அனைத்திற்குமான சரியான விடையை ஒரே நிமிடத்தில் நீங்களே தெரிந்து கொள்ள, கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்; Arivuchaalaram IT Calculator 2026ஐ (Excel) Download செய்யுங்கள்; 2025 மார்ச் மாத ஊதியத்தை உள்ளிடுங்கள்.
https://arivuchaalaram.blogspot.com/2025/04/it-calculator-fy-2025-26.html
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.