10th Grace Mark Request
10 ஆம் வகுப்பு கணித தேர்வில் 1 மதிப்பெண் வினாவில் மாணவர்கள் குழப்பம்.தமிழக அரசு கருணை மதிப்பெண்(Grace Mark) வழங்குமா ?!!!!!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தமிழ், ஆங்கில பாடத் தேர்வு புத்தகத்தில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டதால் மிக எளிதாக இருந்தது.
ஆனால் கணித பாட வினாத்தாளில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 2 – ஒரு மதிப்பெண் வினா,2 மற்றும் 5 மதிப்பெண் – கட்டாய வினா moderate ஆக கேட்கப்பட்டு இருந்தது.
ஒரு மதிப்பெண் வினாவில் கேள்வி எண் 2).n (A ) = m மற்றும் n(B) = n எனில் B-லிருந்து A-க்கு வரையறுக்கப்பட்ட மொத்த சார்புகளின் எண்ணிக்கை.
(அ) mn (ஆ) nm (இ) 2 mn -1 (ஈ) 2 mn
n (A ) = m and n(B) = n then the total number of
functions that exist from B to A is
(a) mn (b) nm (c) 2 mn -1 (d) 2 mn
என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது.
ஆனால் பாடப்புத்தகத்தில் page number 11 ல் If A and B are finite sets auch that n (A ) = p and n(B) = q then the total number of
functions that exist from A to B is qp
என்று இருந்தது.இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆனால் பாடப்புத்தகத்தில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து வினாக்களிலும் f:A லிருந்து B என்று மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த வினா வினால் நன்றாக படிக்க கூடிய மாணவர்கள் 100 மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் கிராமப்புற மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆகையால் தமிழக அரசின் தேர்வுத்துறை கருணை மதிப்பெண் வழங்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இது தொடர்பாக கணித பட்டதாரி ஆசிரியர் கழகம் தேர்வுத்துறையிடம் முறையிட்டு ஒரு மதிப்பெண் கருணை மதிப்பெண் (Grace Mark) பெற வேண்டும்.
நன்றி.
ரா.ராஜேஷ் M.Sc.,B.Ed., PGDCA.,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) பட்டுக்கோட்டை
Search This Blog
Tuesday, April 08, 2025
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.