WhatsApp வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்டுகளாக மாற்றுவது எப்படி? 2 நிமிடங்களில் செட் பண்ணலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 27, 2025

Comments:0

WhatsApp வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்டுகளாக மாற்றுவது எப்படி? 2 நிமிடங்களில் செட் பண்ணலாம்!

WhatsApp%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%202%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D!


*வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்டுகளாக மாற்றுவது எப்படி? 2 நிமிடங்களில் செட் பண்ணலாம்!*

பலருக்கும் வாட்ஸ்அப் ஒரு முக்கியமான மெசேஜிங் பிளாட்பார்மாக இருந்து வருகிறது.

தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இன்று பல வழிகள் இருந்தாலும் வாய்ஸ் மெசேஜ்களின் மூலமாக பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம்.

உணர்வுபூர்வமாக விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ஸ் மெசேஜ்கள் சிறந்த வழி. ஆனால் சில சமயங்களில் வாய்ஸ் மெசேஜ்களை கேட்பது என்பது சவாலான விஷயமாக இருக்கும்.

முக்கியமாக சத்தம் இல்லாத இடங்களில் வாய்ஸ் மெசேஜ்களை ஆன் செய்து விட்டால் உடனே அருகில் இருப்பவர்களுக்கும் அவை கேட்டு விடும். இதுபோன்ற சிக்கல்களை கருத்தில் கொண்டு ஒரு அற்புதமான பியூச்சரை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது.

அதுதான் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்டுகளாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ட் அம்சம். சில நேரங்களில் மீட்டிங்கில் இருக்கும் போது வாய்ஸ் மெசேஜ் வரும். ஆனால் அது முக்கியமான நபரிடம் இருந்து வந்தால் அதை கண்டிப்பாக கேட்டாக வேண்டும். அதே சமயம் மீட்டிங்கில் இருந்து வெளியிலும் வர முடியாது. அப்படி இருந்தால் நீங்கள் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதியின் மூலம் வருகின்ற வாய்ஸ் மெசேஜ்களை உடனடியாக டெக்ஸ்டாக மாற்றி படிக்கலாம். இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

*வாட்ஸ் அப்பில் ட்ரான்ஸ்கிரிப்ட் அம்சம் என்ன செய்யும்?*

உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தால் இந்த ட்ரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்தி அவற்றை உடனடியாக டெக்ஸ்ட்டாக மாற்றி படிக்கலாம். இந்த ட்ரான்ஸ்கிரிப்ட் வசதி உங்கள் மொபைலில் நேரடியாக உருவாக்கப்படுகின்றன.

எனவே வாட்ஸ்அப்பும் உங்களுடைய வாய்ஸ் மெசேஜ்களை கேட்கவோ அல்லது படிக்கவோ முடியாது.

*ட்ரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?*

வாட்ஸ் அப் வழங்கும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ் அப்பின் ரைட் கார்னரில் தெரியும் 3 புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு "செட்டிங்ஸ்" என்பதை கிளிக் செய்ய வேண்டும். செட்டிங்ஸ்-ற்க்குள் பல்வேறு ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.

அதில் "சாட்" என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் என்பதை ஆன் செய்ய வேண்டும். நீங்கள் ஆன் செய்தவுடன் எந்த மொழியில் டெக்ஸ்ட்களாக மாற்ற வேண்டும் என்பது கேட்கப்படும்.

தற்போது 4 மொழிகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இங்கிலீஷ் பலராலும் பயன்படுத்தப்படுகிறது எனவே நீங்கள் இங்கிலீஷை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் "செட் அப் நவ்" என்பதை கிளிக் செய்து, உங்களுடைய வாய்ஸ் மெசேஜ்களை லாங் பிரஸ் செய்து ட்ரான்ஸ்கிரிப்ட் என்பதை கிளிக் செய்தால் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்ட் ஆக மாற்றி படிக்க முடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626651