High Court orders Tamil Nadu government to remove temporary employees appointed in government departments!
"தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்''
கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு
தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்
ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து
மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தற்காலிக பணியாளர்களை உடனே நீக்குங்க - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 நவம்பர் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட தற்காலிக ஊழியர்களை நியமித்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 1997ம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.25) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என கடந்த 2020 நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 2020 நவம்பர் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன், தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்தது மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர்.
Search This Blog
Wednesday, February 26, 2025
Comments:0
Home
000 temporary teacher posts
Government Employees
High Court Opinion
High Court order
temporary posts
Temporary Secondary Teacher Posts
temporary teacher posts
temporary TEACHERS
அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Tags
# 000 temporary teacher posts
# Government Employees
# High Court Opinion
# High Court order
# temporary posts
# Temporary Secondary Teacher Posts
# temporary teacher posts
# temporary TEACHERS
temporary TEACHERS
Labels:
000 temporary teacher posts,
Government Employees,
High Court Opinion,
High Court order,
temporary posts,
Temporary Secondary Teacher Posts,
temporary teacher posts,
temporary TEACHERS
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84625928
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.