எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் தொடக்க கல்வியின் தரம் உயர்வு - மாநிலத் திட்டக்குழு மதிப்பீட்டாய்வில் தகவல்
எண்ணும் எழுத்தும் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் கற்றலின் அடிப்படைகளான வாசித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகியவற்றைக் கற்று அவற்றை உறுதிப்படுத்துவது “எண்ணும் எழுத்தும்” திட்டம். இத்திட்டம் மாணவர்கள் படித்துப் புரிந்து கொண்டு பிழையின்றி எழுத, எண்ண வகை செய்யும் புதிய திட்டமாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022ம் ஆண்டு ஜூன் 13ம் தேதியன்று தொடங்கிவைத்த இத்திட்டம், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் திட்டமாகும். இத்திட்டம் குறித்த மாநில திட்டக் குழுவின் ஆய்வின் மூலம் தொடக்க கல்வியின் தரம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் கற்கும்போது ஏற்பட்ட நேர விரயம் நீங்கி குறித்த நேரத்தில் கற்பதற்கு இத்திட்டம் வழிவகுத்துள்ளது. பாடத்திட்டத்துடன் உள்ளடக்கத்தைச் சீரமைத்தல், கற்பித்தல் அணுகுமுறைகள், பொருள் உள்ளடக்கம், ஆசிரியர் பயிற்சி, நேர மேலாண்மை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவை மேம்பட்டுள்ளன. இத்திட்டம் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் உதவியுள்ளது. மாநிலத் திட்டக்குழு மதிப்பீட்டாய்வில் தகவல் செய்தி வெளியீடு CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.