3 ம் பருவ பாட புத்தகங்கள் பள்ளி வாரியாக பிரித்து அனுப்ப ஏற்பாடு
சேலத்துக்கு வந்த 3 ம் பருவ பாட புத்தகங்கள் பள்ளி வாரியாக பிரித்து அனுப்ப ஏற்பாடு
சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வினியோகம் செய்வதற்காக, சென்னையில் இருந்து, சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று வந்தடை ந்த மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.
சேலம் மாணவ, மாவட்ட பள்ளி மாணவியருக்கான மூன்றாம் பருவ பாடப்புத்த கங்கள், நேற்று சென்னையிலி ருந்து சேலம் வந்து சேர்ந்தன. சேலம் மாவட்டத்தில், 1,487 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி களில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக் கான இரண்டாம் பருவ தேர்வு நேற்று தொடங்கி, டிக, 23 வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிந்து மீண்டும் ஜன., உல் பள்ளிகள் திறக்கும் போது, அவர்களுக்கான எண்ணும் எழுத்தும் பாடப்புத்தகம் மற்றும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து, சேலம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, நேற்று மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்திறங்கின. இவற்றை பள்ளி வாரி யாக பிரித்து, அடுத்த வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கின்றன. மேலும் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 1.20 லட்சம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டி புத்தகங்களும் வந்துள்ளன. இவையும் ஜனவரியில் மாணவர்க ளுக்கு வழங்கப்பட உள்ளன.
Search This Blog
Tuesday, December 17, 2024
Comments:0
3 ம் பருவ பாட புத்தகங்கள் பள்ளி வாரியாக பிரித்து அனுப்ப ஏற்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.