Headteachers on hunger strike to overturn decision to sack 1,300 - தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,300 பேரை பதவியிறக்கம் செய்யும் முடிவை கைவிடக்கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதில், 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:
அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை, நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவியிறக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
இதற்கு தீர்வு காணும் வகையில், பள்ளி கல்வி அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.