பள்ளிகளில் மன்றங்கள்: வட்டார போட்டிகள் நடத்த ரூ.2.81 கோடி நிதி விடுவிப்பு Forums in schools: Rs 2.81 crore released for conducting regional competitions
அரசுப் பள்ளிகளில் பல்வேறு மன்றங்களின் செயல்பாடுகள் சாா்ந்த போட்டிகள் முடிவடைந்த நிலையில், வட்டார அளவிலான போட்டிகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: - CLICK HERE TO DOWNLOAD PDF
நிகழ் கல்வியாண்டில் (2023-2024) அரசுப்பள்ளி மாணவா்களுக்கு மன்றச் செயல்பாடுகள் சாா்ந்த போட்டிகள் பள்ளிகள் அளவில் கடந்த செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. தொடா்ந்து வட்டார , மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது சாா்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி பள்ளி அளவில் நடைபெற்ற 10 மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவா்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இந்த வட்டார போட்டிகள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாணவா்களுக்கு பாதுகாப்பாக ஓா் ஆசிரியா் பள்ளியில் இருந்து உடன் அழைத்துவர வேண்டும். வட்டாரப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி, நடுவா்களுக்கு மதிப்பூதியம் , நினைவு பரிசு, வெற்றியாளா்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் போட்டிகள் நடத்துவதற்கான செலவினமாக ரூ.2.81 கோடி நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்படுகிறது.
இதையடுத்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மன்றப் போட்டிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.