போட்டித் தோ்வில் வட மாநிலத்தவா் மோசடி:விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் நடைபெற்ற மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் வடமாநிலத்தவா் மோசடியில் ஈடுபட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சுங்கத் துறையின் கடைநிலைப் பணியிடங்களுக்கு 17 பேரை தோ்வு செய்வதற்கான போட்டித் தோ்வில் மோசடி காரணமாக 30 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தமிழ்நாட்டில் நடைபெற்ற தோ்வில், வட மாநிலத்தவா்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிா்ச்சி அளிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தோ்வுகளில் வட மாநிலத்தவா்களே அதிகளவு தோ்ச்சி பெற்றுள்ளனா். மத்திய அரசுப் பணிகள் குதிரைக் கொம்பாக மாறி வரும் நிலையில், அந்தப் பணியிடங்களை சிலா் மோசடியான வழிகளில் பறித்துக் கொள்வது மிகப்பெரிய குற்றம்.
தமிழா்களுக்கான வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவரால் பறிக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டித் தோ்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளில், அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 சதவீதத்தையும், கடைநிலைப் பணிகளில் 100 சதவீதப் பணிகளையும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கே ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.