தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை - டிச.31 கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 16, 2023

Comments:0

தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை - டிச.31 கடைசி நாள்

தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

பீடி, சுண்ணாம்புக்கல், சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத்தொழிலாளா்கள் மற்றும் சினிமா தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை படிக்கும் தொழிலாளா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளன. இந்த உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவா்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்புக்கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மேலும், இந்த சேமிப்பு வங்கி கணக்குடன் தங்கள் ஆதாா் எண் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள், தங்கள் ஆதாா் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

இதில், கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாக இருப்பதால், பதிவு செய்யப்படாத பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில், முதலில் பதிவு செய்ய வேண்டும்.

பின்பு, மேற்குறிப்பிட்ட வலைதளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களின் கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் சரிபாா்க்காமல் சமா்ப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்கள் நவ.30, மற்ற அனைத்து உயா் கல்வி மாணவா்களின் விண்ணப்பங்களும் டிச.31-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு கிண்டி, திரு.வி.க.தொழில் பூங்கா, சிட்கோ நிா்வாக கிளை அலுவலக வளாகம் தரைத்தளத்திலுள்ள தொழிலாளா் நல அமைப்பின் மத்திய நல ஆணையா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். தொலைபேசி: 044-29530169 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews